விண்ணில் ஏவும் போது இரஷ்ய இராக்கெட்-ஐ தாக்கிய மின்னல்! வைரல் வீடியோ.!

|

கடந்த திங்கட்கிழமை (மே 27) ரஷ்ய சோயுஸ் ராக்கெட் மூலம் செயற்கைகோள்களை விண்ணில் ஏவும் போது மின்னில் கீற்று ஒன்று தாக்கியது. ஆனால் அந்த ராக்கெட்டின் விண்வெளி பயணத்திற்கு அது தடையாக இல்லை என ரஷ்ய விண்வெளி அதிகாரிகள் தெரிவித்தனர்.

விண்ணில் ஏவும் போது இரஷ்ய இராக்கெட்-ஐ தாக்கிய மின்னல்! வைரல் வீடியோ.!

மாஸ்கோ நகருக்கு வடக்கே 500 மைல்கள் (800 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள ரஷ்யாவின் ப்ளிசெட்ஸ்க் காஸ்மோடிரோமிலிருந்து சரியாக காலை 9:23 மணிக்கு Glonass-M நேவிகேசன் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்ட போது மின்னில் தாக்கிய நிகழ்வு நடைபெற்றுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷ்யாவின் விண்வெளி நிறுவனமான ரோஸ்காஸ்மாஸ்-ன் அதிகாரிகள் ராக்கெட் வெற்றிகரமாக சுற்றுவட்டப்பாதையை அடைந்தது என்று அறிவித்துள்ளனர்.

ரோஸ்காஸ்மஸ்

"மின்னல் உங்களுக்கு ஒரு தடை இல்லை" என டிவிட்டரில் தெரிவித்துள்ள ரோஸ்காஸ்மஸ் இயக்குனர் ஜெனரல் டிமிட்ரி ரோக்ஸின், Glonass-M ஏவுதல் குழு மற்றும் இராணுவ விண்வெளிப் படைகளை பாராட்டியுள்ளார். அந்த ராக்கெட்டை மின்னல் தாக்கிய அதிர்ச்சிகரமான வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார்.

சீனாவின் கடல் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க தயாரான இலங்கை.!

சோயுஸ் 2

சோயுஸ் 2

ரஷ்யாவின் இராணுவ மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட வாடிக்கையாளர்களுக்கு ஆதரவளிப்பதற்கான நேவிகேசன் செயற்கைக்கோள்களில் சமீபத்திய வெர்சனான் Glonass-M செயற்கைகோளை செலுத்துவதற்காக, ப்ரேகேட் அப்பர் ஸ்டேஜ் பொருத்தப்பட்டுள்ள சோயுஸ் 2.1பி பூஸ்டர் ராக்கெட்-ஐ ரோஸ்காஸ்மாஸ் பயன்படுத்தியது.

டெலிமெட்ரிக் இணைப்பு

டெலிமெட்ரிக் இணைப்பு

"ஒரு நிலையான டெலிமெட்ரிக் இணைப்பு விண்கலத்துடன் நிறுவப்பட்டு பராமரிக்கப்படுகிறது. Glonass-M விண்கலத்தில் உள்ள ஆன் போர்டு அமைப்புகள் எப்போதும்போல செயல்படுகின்றன" என்று ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிர வைக்கும் ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட் புதிய ரீசார்ஜ் திட்டம்.!

இரண்டு முறை

இரண்டு முறை

ராக்கெட்-ஐ விண்ணில் ஏவும் போது மின்னல் தாக்குவது என்பது மிகவும் அரிதான ஒன்று. ஆனால் முன்னோடியில்லாதது இல்லை. நவம்பர் 1969 இல், நாசாவின் நிலவு பயணமான அப்பல்லோ 12 மிஷன் விண்ணில் ஏவப்படும் போது சாட்டர்ன் வி ராக்கெட்-ஐ இரண்டு முறை மின்னல் தாக்கியது.

திட்டமிட்டபடி நடைபெற்றது.

திட்டமிட்டபடி நடைபெற்றது.

மூன்று மனிதர்கள் விண்வெளிக்கு சென்ற அப்பல்லோ 12 விண்கலத்தில் உள்ள சில ஆன் போர்டு டிஸ்ப்ளேக்களை அந்த மின்னல் கீற்றுகள் பாதித்தது. ஆனாலும் சாட்டர்ன் வி ராக்கெட் வெற்றிகரமாக சுற்றுவட்டப்பாதையை அடைந்துவிட்டது. கவனமாக அமைப்பு பரிசோதனைக்கு பிறகு, விமான கட்டுப்பாட்டாளர்கள் இறுதியில் அப்பல்லோ 12 விண்கலம் ஆரோக்கியமாக உள்ளதாக கண்டுபிடித்த பின்னர், நிலவில் தரையிறங்கும் மிஷன் திட்டமிட்டபடி நடைபெற்றது.

இறந்த மனித உடல்களை அபகரிக்கும் ஏலியன்கள்: அதிர்ச்சியூட்டும் தகவல்கள்.!

Most Read Articles
Best Mobiles in India

English summary
russian-space-satellite-launch-lightning-strikes : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X