Home
Scitech

நியூசிலாந்திற்கு "மரண பயத்தை காட்டிய" ரஷ்ய செயற்கைக்கோள்!

"மரண பயம்" காட்டியது என்றதும் விளாமிதிர் புதினின் ஆட்சியின் கீழ் இருக்கும் ரஷ்யா, நியூசிலாந்து நாட்டை தாக்க முற்பட்டது என்று தவறாக நினைத்து கொள்ள வேண்டாம்.

"மரண பயம்" காட்டியது என்றதும் விளாமிதிர் புதினின் ஆட்சியின் கீழ் இருக்கும் ரஷ்யா, நியூசிலாந்து நாட்டை தாக்க முற்பட்டது என்று தவறாக நினைத்து கொள்ள வேண்டாம். உலகை நாடுகள் அனைத்தையும் மிரட்டும் அளவிற்கு ரஷ்யா ஒரு "கனமான" மற்றும் "முரட்டு தனமான" நாடு தான் என்பதில் சந்தேகம் இல்லை. அதற்காக அண்டத்தின் கடை கோடியில் உள்ள நியூஸிலாந்தையா ஒடுக்க நினைக்கும்.

நியூசிலாந்திற்கு

அங்கு நடந்த விடயமே வேறு. ஒரு சிறு குழப்பம் நடந்து விட்டது. அதிலும் அந்த குழப்பம் நடந்து முடிந்த பின்னர் தான் அதற்கு காரண ரஷ்யா என்பதே தெரிய வந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

அப்படி என்ன குழப்பம் நடந்தது?

அப்படி என்ன குழப்பம் நடந்தது?

வேறு ஒன்றும் இல்லை. ரஷ்யாவின் செயற்கைகோள் ஒன்று விண்வெளியில் பூமிக்கு திரும்பும் வழியில் வெடித்து சிதறி உள்ளது. அது கண்மூடித்தனமாக சிதறி நியூசிலாந்து பிரதேசத்தை நோக்கி விழுந்து உள்ளது. அதனை கண்ட நியூசிலாந்து மக்கள் அதுவொரு விண்கல் என்றும், அது பூமியோடு மோத போகிறது என்றும் நினைத்து பீதி அடைந்து உள்ளனர்.

அப்படி என்ன குழப்பம் நடந்தது?

அப்படி என்ன குழப்பம் நடந்தது?

வேறு ஒன்றும் இல்லை. ரஷ்யாவின் செயற்கைகோள் ஒன்று விண்வெளியில் பூமிக்கு திரும்பும் வழியில் வெடித்து சிதறி உள்ளது. அது கண்மூடித்தனமாக சிதறி நியூசிலாந்து பிரதேசத்தை நோக்கி விழுந்து உள்ளது. அதனை கண்ட நியூசிலாந்து மக்கள் அதுவொரு விண்கல் என்றும், அது பூமியோடு மோத போகிறது என்றும் நினைத்து பீதி அடைந்து உள்ளனர்.

இந்த சம்பவம் எப்போது நடந்தது?

இந்த சம்பவம் எப்போது நடந்தது?

ரஷ்ய செயற்கைகோளை பார்த்து சிலர் விண்கல் மோத போகிறது என்று நினைக்க, இன்னும் சிலர் அது ஏலியன்ஸ் எனப்படும் வேற்றுகிரக வாசிகளின் வருகை என்று எண்ணி அதிர்ச்சி அடைந்து உள்ளனர். கடந்த சனிக்கிழமை மாலை அன்று ஒரு பிரகாசமான ஒளி பூமியை நோக்கி வருவதை ஸ்கைவாட்சர்ஸ் (skywatchers) கண்டு அறிந்துள்ளனர். ஆரம்பத்திலேயே அது ஒரு யுஎஃப்ஒ (பறக்கும் தட்டு) என்றும், அது நியூசிலாந்து நாட்டின் வடக்கில் தரை இறங்கும் கோணத்தில் வருகிறது என்றும் அச்சம் கிளம்பியது. பின்னர் அது விண்கல் மோதல் எனும் பீதி கிளம்பியது.

இந்த சம்பவத்தின் பின்னணி என்ன?

இந்த சம்பவத்தின் பின்னணி என்ன?

இந்த சம்பவத்தின் உண்மையான விளக்கம் கிட்டத்தட்ட அதிர்ச்சிக்குரியது. ரஷ்யாவின் செயற்கைகோள் ஒன்று, தரை இறங்க பூமியை நோக்கி வந்துள்ளது. அப்போது அது வெடித்து சிதறி துண்டுகளாக விழுந்து உள்ளது, அவவ்ளவுதான். பல வல்லுனர்களின் கருத்துப்படி, வெளியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் காணப்படுவது ஒரு பழைய ரஷியன் செயற்கைக்கோள் ஆகும். அது பூமிக்கு திரும்பும் வழியில் ஒருவேளை எரிந்து இருக்கலாம். ஆனாலும் கூட செயற்கைகோள் வீழ்ச்சி ஆனது இதுபோன்ற ஒரு காட்சியை கொடுக்காது என்பதையும் அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.

இதுபோல் மக்கள் வாழும் நிலப்பகுதியில் விழுந்தால்?

இதுபோல் மக்கள் வாழும் நிலப்பகுதியில் விழுந்தால்?

இந்த இடத்தில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் தான் உலகின் விண்கல கல்லறை இருக்கிறது என்பதும் விண்வெளி பணிகளை முடித்த செயற்கைகோள்கள் அங்குதான் விழும் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பிடப்பட்டுள்ள விண்கல கல்லறைக்குள் விழுந்தால், எந்த விதமான மனித காயம் அல்லது உயிர் சேதமும் ஏற்பாடாது. மீறி இதுபோல் மக்கள் வாழும் நிலப்பகுதியில் விழுந்தால் சேதம் நிச்சயமாக ஏற்படும். ஆனால் இந்த விபத்தில் எந்த சேதமும் காயமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யர்களின் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை!

ரஷ்யர்களின் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை!

இந்த விண்வெளி குப்பைகள் ஆனது ரஷ்யாவின் காஸ்மோஸ் 2430 செயற்கைக்கோளின் எஞ்சியுள்ள பாகங்களாக இருக்கலாம் என்று வல்லுனர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். காஸ்மோஸ் 2430 செயற்கைகோள் ஆனது கடந்த 2007 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டது, இது ஏவுகணை தாக்குதல்களை கண்காணித்து வந்தது. ஒருகட்டத்தில் அது ரஷ்யர்களின் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆக பூமியை நோக்கி கீழே தள்ளப்படும் வரை அது விண்வெளியில் சுற்று திரிந்து கொண்டு இருந்துள்ளது. தற்போது பூமியில் விழுந்து உள்ளது.

இப்படித்தான் கண்மூடித்தனமாக விழும்!

இப்படித்தான் கண்மூடித்தனமாக விழும்!

பூமியின் வளிமண்டலத்தின் ஊடாக நிகழும் கடினமான பயணத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் அளவிலான பெரிய செயற்கைக்கோள் மட்டுமே கடலில் விழும். ஏனைய செயற்கைகோள்கள் இப்படித்தான் கண்மூடித்தனமாக விழும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். மேலும் இதுபோன்ற விண்வெளி குப்பைகள் உங்கள் தோட்டத்தில் அல்லது அருகாமையில் விழ நேர்ந்தால், அவைகளை (விண்வெளி பொருட்களை) தொட வேண்டாம் என்றும் மக்களை எச்சரித்து உள்ளனர். ஏனெனில் அவைகளிடம் நச்சு பொருட்கள் இருக்கலாம், பெரும்பாலும் அவை தீங்கு விளைவிக்கும்.

Best Mobiles in India

English summary
Russian satellite mistaken for meteorite and alien crashes across sky above New Zealand: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X