'கண்களில் விரலை விட்டு ஆட்டும்' ஹைப்பர்சோனிக் கிளைடர், முந்தி செல்வது யார்..!

Written By:

சோவியத் ஒன்றியத்தின் பழைய கோட்பாடு ஒன்று இருந்தது - அணு ஆயுதங்களை கொண்டு மூன்றாம் உலக போரை தொடங்கி வைக்க முடியும்..!

இப்போது அந்த கோட்பாடு மாறிவிட்டது - ஒரு பெரிய சூப்பர் பவர் நாட்டிற்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்துவதாக அச்சுறுத்தல் செய்து தனது தலைநகரம் மீது யாரும் குறி வைத்து விடாமல் இருக்க, அதாவது பிராந்திய மோதல்கள் உண்டாகாமல் இருக்கும்வண்ணம் பார்த்துக் (பாதுகாத்துக்) கொள்கிறது - இதுதான் ரஷ்யாவின் புதிய கோட்பாடு..!

இப்படியாக, ஒருபக்கம் ரஷ்யா வெறும் வாய் சவடால் மட்டும் தான் விஷயம் ஒன்றுமில்லை என்று நாம் நினைத்துக் கொண்டிருக்க மறுபக்கம் சப்தமின்றி வேலை செய்து கொண்டே தான் இருக்கிறது. ரஷ்யா மட்டுமின்றி அதன் எதிரி நாடான அமெரிக்காவும், உடன் சீனாவும் தான். அதற்கொரு எடுத்துக்காட்டு தான் - ஹைப்பர்சோனிக் கிளைடர்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
புதிய வகை :

புதிய வகை :

ஹைப்பர்சோனிக் கிளைடர் - மிகவும் பயங்கரமான, மின்னல் வேகத்தில் ஊடுருவி பறந்து சென்று இலக்குகளை தாக்கி அழிக்கும் புதிய வகை ஆயுதமாகும்..!

போட்டி :

போட்டி :

இந்த புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஹைப்பர்சோனிக் கிளைடரை உருவாக்கும் போட்டியில் குதித்துள்ளன ரஷ்யா அமெரிக்கா மற்றும் சீனா..!

ஹைப்பர்கிளைட் :

ஹைப்பர்கிளைட் :

நிச்சயமாக இந்த பூஸ்ட் -கிளைட் அல்லது ஹைப்பர்கிளைட் ஆயுதங்கள் ஆனது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மூலம் தான் தொடங்கப்படும்.

மேக் 5 :

மேக் 5 :

உடன் குறைந்தது மேக் 5 (Mach 5) அல்லது அதற்கு மேற்பட்ட ஐந்து மடங்கு வேகத்தில், அதாவது மிகவேகத்தில் இலக்கை அடையும் படியாகத்தான் இவைகள் இருக்கும், இருக்க வேண்டும்.

வல்லமை :

வல்லமை :

இம்மாதிரியான வேகத்தில் மிகவும் சூழ்ச்சியானதாகவும், ட்ராக் செய்ய முடியாத வண்ணமும் இவைகள் பயணித்து தாக்கும் வல்லமை கொண்டிருக்கும்.

திறன் :

திறன் :

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் போலின்றி ஹைப்பர் கிளைடரின் காற்றியக்கவியல் ஆனது அதை பத்தாயிரம் கிலோமீட்டர்கள் வரை உந்தி செல்லும் திறன் கொண்டதாய் உருவாக்கும்.

மீட்சி :

மீட்சி :

இத்தகைய அதிமீயொலி கிளைடர் ஆயுதங்கள் சார்ந்த யோசனையானது 1930-களில் இருந்து ஆரம்பிக்கிறது சமீபத்தில் 2003- ஆம் ஆண்டு அமெரிக்கா திட்டம் ஒன்றின் மூலம் மீட்சி பெற்றது.

கவனம் :

கவனம் :

தற்போது 2.4 பில்லியன் டாலர்கள் செலவில் சுமார் 8,000 கிலோ மீட்டர் வரை செல்லும் திறன் கொண்ட அதிமீயொலிவேகம் வெப்பன் (Advanced Hypersonic Weapon -AHW) உருவாக்கம் செய்ய அமெரிக்கா கவனம் செலுத்தி வருகிறது.

சீனா - ரஷ்யா :

சீனா - ரஷ்யா :

எனினும், இதுவரை அமெரிக்காவானது பிரத்தியேகமாக அணு அல்லாத ஹைப்பர்சோனிக் கிளைடர்களை தான் உருவாக்க முனைகிறது. ஆனால் சீனா, ரஷ்யா இரண்டுமே அணு ஆயுதங்களை வழங்கும் ஹைப்பர் சோனிக் கிளைடர்களை தான் உருவாக்கம் செய்கின்றன, குறிப்பாக ரஷ்யா..!

அடிக்கடி :

அடிக்கடி :

ப்ராஜக்ட் 4202 என்ற பெயரின் கீழ் ரஷ்யாவின் கிளைடர் திட்டம் நடைபெறுகிறது மறுபக்கம் சீனா அதன் சொந்த டி டிஎப்-இஸட்எஃப் அதிமீயொலி கிளைடர் வாகனத்தை அடிக்கடி பரிசோதித்து வருகிறது.

முன்னணி :

முன்னணி :

இந்த ஹைப்பர்சோனிக் கிளைடர் உருவாக்க போட்டியில் தற்போதைய ஆதாரங்களின்கீழ் அமெரிக்கா தான் ஒரு தெளிவான முன்னணி வகிக்கிறது..!

வடகொரியா மற்றும் ஈரான் :

வடகொரியா மற்றும் ஈரான் :

உடன் தங்களது சாத்தியமுள்ள ஹைப்பர்சோனிக் ஆயுதங்கள் ஆனது வடகொரியா மற்றும் ஈரான் போன்ற நாடுகளின் அணு ஆயுதத்தை பெருக்கும் நாடுகளுக்காகத்தான் அவர்களை தடுக்கதான் பயன்படும் என்றும், அல்லது சீனாவின் ஆன்ட்டி-சாட்டிலைட் திறன்களை முடக்க அல்லது பயங்கரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்தப்படும் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.

பிரதான நோக்கம் :

பிரதான நோக்கம் :

மறுபக்கம் ரஷ்யாவின் கிளைடர் தொழில்நுட்ப பிரதான நோக்கமானது அமெரிக்க பாதுகாப்பை ஊடுருவவேண்டும் என்பதிலேயே இருக்கிறது.

தரை சார்ந்த பாதுகாப்பு அமைப்பு :

தரை சார்ந்த பாதுகாப்பு அமைப்பு :

அதாவது, அமெரிக்காவின் 'தாட்' தனை (THAAD) சமாளிக்கும் கிளைடர்களை மாஸ்கோ உருவாக்குகிறது என்பது சாத்தியமில்லை என்றாலும் கூட ரஷியன் கிளைடர்கள் தரை சார்ந்த பாதுகாப்பு அமைப்பு (GMD) மூலம் அமெரிக்க பாதுகாப்புகளை ஊடுருவலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Russian Hypersonic Glider Weapons Would Easily Penetrate U.S. Defenses. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot