இதோட நிறுத்திக்கோ அதான் நல்லது : முட்டிக்கொள்ளும் அமெரிக்கா-ரஷ்யா..!

|

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவிற்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பூமி கிரகத்தை சுற்றியுள்ள விண்வெளி குப்பைகள் பெரிய அளவில் பெருகிக் கொண்டே போகிறது முக்கியமாக நமது கட்டுப்பாட்டை மீறி வளர்ந்து கொண்டே போகின்றன. இது சார்ந்த விடயத்தில் நாசாவிற்கு பெரிய பங்குள்ளது..!

தற்போது ரஷ்ய விஞ்ஞானிகள் குழு ஒன்று இந்த விண்வெளி குப்பைகள் மற்றொரு சாத்தியமுள்ள எதிர்பாராத விளைவை உண்டாக்க காத்திருக்கின்றது என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். அந்த விளைவு - போர்..!

#1

#1

சுமார் 0.4 முதல் 4 அங்குலம் வரையிலான விண்வெளி குப்பைகள் மணிக்கு 17,000 மைல்கள் வேகத்தில் பூமியை சுற்றி வந்துக் கொண்டிருக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றன.

#2

#2

அப்படியாக, மனிதனால் உருவாக்கம் பெற்ற சுமார் 500,000 - 600,000 விண்வெளி குப்பை துண்டுகள் விண்வெளியில் எங்கும் நிறைந்து கிடைக்கிறது.

#3

#3

அந்த துண்டுகளில் ஒன்று, ஒரு நாட்டின் ராணுவ செயற்கைக்கோளை மோதினால், அது விண்வெளி பயணத்தில் இரு நாடுகளுக்கு இடையே அரசியல் அல்லது ஆயுத மோதல் வெடிக்க காரணமாக அமையலாம்.

#4

#4

உதாரணமாக, 17500 மைல் வேகத்தில் பயணிக்கும் ஒரு 4 அங்குல ஸ்பேஸ் ஜன்க் ஆனது ஒரு செயற்கைக்கோளை அழிக்கவும் அல்லது கணிசமாக சுற்றுப்பாதையில் மாற்றம் அடைய செய்ய வைக்கவும் முடியும்.

#5

#5

விண்வெளியில், செயற்கைகோள்களுக்கு ஒரு மாபெரும் சேதத்தை நிகழ்த்த ஒரு பட்டாணி அளவிலான விண்வெளி குப்பை கூட போதுமானது தான்.

#6

#6

மேலும், இதுபோன்ற சேத நிகழ்வுகள் தற்செயலாக நடந்ததா அல்லது வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டதா என்பதை அவ்வளவு எளிதில் தீர்மானிக்க முடியாது என்பதில் ஆரம்பிக்கின்றன பெரும் சிக்கல்கள்..!

#7

#7

ஆக, உடனடியாக ஆதாரம் இல்லாத பற்றாக்குறை நிலையானது பொய்யான குற்றச்சாட்டுகள் , சூடான விவாதங்களை தொடர்ந்து இறுதியில் போருக்கு வழிவகுக்கும், முக்கியமாக, ஏற்கனவே எதிரி நாடுகளாய் திரியும் நாடுகளுக்கு இடையே எளிதில் யுத்தம் மூளும்.

#8

#8

கடந்த 10 ஆண்டுகளில், ரஷ்ய ராணுவ செயற்கைகோள்கள் பலமுறை விளக்கமே இல்லாத முறையில் அடிக்கடி செயல் இழந்து உள்ளன, கோளாறுகள் நிகழ்ந்துள்ளன.

#9

#9

அந்த கோளாறுகளுக்கு இரண்டு விளக்கங்கள் அளிக்கப் பட்டுள்ளது. ஒன்று, விண்வெளியில் நிகழும் பதிவுசெய்யப்படாத மோதல்கள். இரண்டாவது - விரோத சூழ்ச்சிகளால் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட செயல்.

#10

#10

இது போன்ற நிகழ்வுகள் அடுக்கடுக்கான விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு எதிர்கால எச்சரிக்கை என்று நிபுணர்கள் மற்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். 1978 -ஆம் ஆண்டில், அமெரிக்க வானியலாளர் டொனால்ட் கெஸ்லர், பூமியை சுற்றியுள்ள விண்வெளி குப்பைகளின் அளவு அதிவேகமாக வளரும் என்று கோட்பாடு வகுத்தார்.

#11

#11

அவரின் கணிப்பை போலவே, செயலிழந்த செயற்கைக்கோள்கள், விண்கற்களை மற்றும் மனிதனால் கைவிடப்பட்ட விண்வெளி குப்பைகள் என நாம் விண்வெளியில் அடுக்கடுக்கான முறையில் குப்பைகளை கொட்டுகிறோம்.

#12

#12

ஒரு விண்வெளி குப்பையால் ஏற்படும் விபத்தின் மூலம் மேலும் பல விண்வெளி குப்பைகள் உருவாகும், அவைகள் மேலும் பல விபத்துகளை உண்டாக்கி விண்வெளி குப்பைகளை அதிகரித்துக் கொண்டே போகும் என்பது தான் ஸ்பேஸ் ஜன்க் மீதான மாபெரும் அச்சமாகும்.

#13

#13

சிறிய சிறிய விண்வெளி குப்பைகளை அகற்றுவதின் மூலம் ஒட்டுமொத்த விண்வெளி ஆய்வு திட்டத்திற்கும் முடிவு கட்டும் விண்வெளி குப்பை மேகங்கள் உருவாகம் பார்த்துக்கொள்ள முடியும் என்பது தான் இப்போது கையில் இருக்கும் ஒரு தெளிவான தீர்வு என்பதும் குறிப்பிடத்தக்கது.

#14

#14

இதுவரையிலாக, 4 முதல் 8 அங்குல அகலம் வரையிலான 170,000 விண்வெளி குப்பை துண்டுகளை அமெரிக்க மற்றும் ரஷ்ய விண்வெளி கண்காணிப்பு அமைப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

#15

#15

தொடர்ந்து, 200 ஆண்டுகளுக்கு விண்வெளி குப்பைகளை குவிக்கும் இந்த நிலை நீடித்தால், பின்பு அவைகளை நீக்கும் வழியே இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

#16

#16

மேற்கண்ட அத்துணை ஆய்வு தகவல்களையும் வெளியிட்டது ரஷ்ய நாட்டின் அறிவியல் அகாடெமியின் புவி உருண்டை டைனமிக்ஸ் நிறுவனத்தின் ஆய்வு குழு என்பது குறிப்பிடத்தக்கது.

#17

#17

எல்லா பயலும் இஸ்ரோகிட்ட 'ட்யூஷனுக்கு' வாங்கப்பா..!!


ஏன் பூமியை விட்டு நாம் வெளியேற வேண்டும்..? - எலான் மஸ்க் அதிரடி..!

#18

#18

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
Russia says a growing problem in space could be enough to spark a war. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X