சர்வதேச விண்வெளி நிலையத்தில் ரஷ்யா: டிரம்ப் முடிவு என்ன ஆச்சு.!

அமெரிக்கா அதிபர் டிரம்ப் சர்வதேச விண்வெளி நிலையத்தை தனியார் மயமாக்க வேண்டும் என்று தனது முடிவையும் அறித்து இருந்தார். இதற்காக நிதி ஒதுக்கப்படுவத்தில்லை என்றும் கூறியிருந்தார்.

|

அமெரிக்கா அதிபர் டிரம்ப் சர்வதேச விண்வெளி நிலையத்தைத் தனியார் மயமாக்க வேண்டும் என்று தனது முடிவையும் அறித்து இருந்தார். இதற்காக நிதி ஒதுக்கப்படுவதில்லை என்றும் கூறியிருந்தார்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ரஷ்யா: டிரம்ப் முடிவு என்ன ஆச்சு.!

இந்நிலையில், தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்திற்குப் பொருட்களை ரஷ்யா கொண்டு சென்றுள்ளது. இந்த முயற்சி வெற்றியடைந்துள்ளது. ரஷ்யாவுக்குப் பாராட்டும் குவிந்து வருகின்றது.

 சர்வதேச விண்வெளி நிலையம்:

சர்வதேச விண்வெளி நிலையம்:

விண்வெளியில், பூமிக்கு மேலே பூமியைச் சுற்றிக்கொண்டே இருக்கும் ஒரு ஆய்வு நிலையம் சர்வதேச விண்வெளி நிலையம் (International Space Station) ஆகும். இதனை நாம் நமது வெறும் கண்ணல்கூட பார்க்கலாம். இந்த நிலையத்தை 1998ஆம் ஆண்டில் விண்வெளியில் கட்டத் தொடங்கினர்.

சுற்றி வருகின்றது:

சுற்றி வருகின்றது:

தற்போது இந்த நிலையத்தின் நீளம் 239 அடி, அகலம் 356 அடி, உயரம் 66 அடி ஆகும். இதன் பொருள் திணிவு 4,50,000 கிலோ. இது பூமியை நீள் வட்டப்பாதையில் மணிக்குச் சராசரியாக 27600 கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றிக்கொண்டிருக்கிறது. பூமியிலிருந்து 278 முதல் 460 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றி வருகிறது. ஒருமுறை பூமியைச் சுற்றி வர 91 நிமிடங்கள் ஆகின்றன.

சூரிய உதயம்:

சூரிய உதயம்:

தினமும் இந்த நிலையம் பூமியை 15.7 முறை சுற்றி வருகிறது. இந்த நிலையத்தில் தங்கும் விண்வெளி வீரர்கள் தினமும் 16 சூரியன் உதயத்தையும், மறைதலையும் காண்கின்றனர்.
இந்த நிலையத்திற்கு ஆய்வு செய்வதற்காக 2000ஆம் ஆண்டுமுதல் வீரர்கள் சென்று தங்கி வருகின்றனர். இதுவரை 15 நாடுகளுக்கும் மேற்பட்ட விண்வெளி வீரர்கள் அங்குச் சென்று ஆய்வுகளை நடத்தி விட்டுத் திரும்பி வந்துள்ளனர். நிரந்தரமாக அதில் வீரர்கள் உள்ளனர்.

 கீழே இறங்கும் நிலையம்:

கீழே இறங்கும் நிலையம்:

இந்த விண்வெளி நிலையம் பூமியின் ஈர்ப்பு ஆற்றலின் காரணமாக மாதம் 2 கிலோ மீட்டர் பூமியை நோக்கி இறங்குகிறது. அதனை மீண்டும் பழைய நிலைக்கு உயர்த்தி விடுகின்றனர். இது ஒரு தொடர் நடவடிக்கையாக உள்ளது. விண்வெளியில் இயங்கும் மிகப் பெரிய ஆய்வுக்கூடமாக விளங்கி வருகிறது.

டிரம்ப்  முடிவு:

டிரம்ப் முடிவு:

விண்வெளி நிலைய திட்டத்துக்கு நிதி அளிப்பதைக் கைவிட்டு விட்டு, தனியாரிடம் ஒப்படைக்க டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளார். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நாசாவின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ((Paul Martin)) பால் மார்டின், விண்வெளி நிலையத்தைச் செயல்பட வைப்பதற்கான பெரிய அளவிலான தொகையை தனியார் நிறுவனங்கள் செலவிடுமா என்பது சந்தேகம் தான் எனக் கூறியுள்ளார்.

விண்வெளி சுற்றுலா:

விண்வெளி சுற்றுலா:

விண்வெளி சுற்றுலா, விண்வெளி ஆராய்ச்சிக்காக வேண்டுமானால் தனியார் நிறுவனங்கள் இதைப் பயன்படுத்தக் கூடும் எனத் தெரிவித்த அவர், மற்ற படி தனியார் நிறுவனங்களால் லாபமீட்ட முடியாது என்றும் கூறியுள்ளார்.

ரஷ்யாவின் சோயுஸ் ராக்கெட்:

ரஷ்யாவின் சோயுஸ் ராக்கெட்:

சர்வதேச விண்வெளி நிலையத்துக்குத் தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு ரஷ்யாவின் சோயுஸ் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. சோயுஸ் FG ராக்கெட்டானது கடந்த மாதம் 11ஆம் தேதி இரு விஞ்ஞானிகளுடன் விண்ணில் ஏவப்பட்டது. ஆனால் கோளாறு காரணமாக முயற்சி தோல்வியுற்றது.

வெற்றி ரஷ்யா:

வெற்றி ரஷ்யா:

இந்த நிலையில் புராகிரஸ் ((Progress MS 10)) என்ற விண்கலத்தைச் சுமந்து கொண்டு கசகஸ்தானின் பைக்கானூர் விண்வெளி தளத்தில் இருந்து சோயுஸ் FG ராக்கெட் மீண்டும் ஏவப்பட்டது. இந்த முயற்சி வெற்றி அடைந்தது. சர்வதேச விண்வெளி நிலையத்துக்குத் தேவையான பொருட்கள் இந்த விண்கலத்தில் நிரப்பப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

டிரம்ப் முடிவுக்கு எதிர்ப்பு:

டிரம்ப் முடிவுக்கு எதிர்ப்பு:

டிரம்பு முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த வரும் நிலையில், ரஷ்யாவின் ராக்கெட்டும் பொருட்களை கொண் சென்றது மற்ற நாடுகளையும் மத்தியிலும் பரவலாக பேசப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
Russia s Soyuz rocket carrying supplies needed for space station : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X