சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்லும் இரஷ்யாவின் ரோபோ-நாட்ஸ்!
ரஷ்யாவின் விண்வெளி நிறுவனம் அடுத்த வாரம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் அதன், மனிதனை போன்ற ஆண்ட்ராய்டின் வியத்தகு காணொளியை வெளியிட்டுள்ளது.

பெடோர்
இறுதிக்கட்ட சோதனை ஒத்திகை ஆராய்ச்சியில் உள்ள "பெடோர்" என பெயரிடப்பட்டுள்ள இந்த மனித உருவிலான(anthropomorphous) இயந்திரம் கஜகஸ்தானில் உள்ள பய்கோனூர் காஸ்மோட்ரோம்-ல் பேட்டரி அழுத்த பரிசோதனையை எதிர்கொண்டுவருகிறது.

44 பவுண்டுகள்
புடினின் ரோபோ-நாட் என செல்லமாக அழைக்கப்படும் இந்த இயந்திரம், இலக்குகளை நிர்ணயிப்பது, ஸ்டீயரிங் போன்ற குறிப்பிட்ட புள்ளிகளை மதிப்பிடுவது போன்றவற்றை சுற்றுப்பாதையில் இருக்கும்போது செய்யவுள்ளது.
6-அடி உயரமும், கூடுதல் உபகரணங்களைப் பொறுத்து 233 பவுண்டுகளுக்கும் குறைவில்லா எடையையும் கொண்டிருக்கும் இந்த பெடோர், 44 பவுண்டுகள் வரையிலான பொருட்களை தூக்க முடியும்.

நடைபயிற்சி
இந்த ரோபோட்-ஆல் தவழ, கீழே விழுந்த பிறகு எழுந்து நிற்க, வாகனத்தில் உள்ள ஓட்டுநர் இருக்கையில் அமர மற்றும் எழ, கருவிகள் பயன்படுத்த, வழக்கமான கட்டிடத்தில் இயங்க முடியும்.
ஈர்க்கக்கூடிய வகையில், பெடோரின் சில முதல் புகைப்படங்களில் ஹூயூமனாய்டு பம்ப்பிங் அயர்ன், நடைபயிற்சி, கார் ஓட்டுதல் மற்றும் சக்திவாய்ந்த கருவிகளை பயன்படுத்தியது போன்றவை காண்பிக்கப்பட்டுள்ளது.
இதனைக்கொண்டு ஒரு நாள் நிலவில் விண்வெளி தளத்தை உருவாக்க முடியும் என்று ரஷிய வல்லுநர்கள் நம்புகின்றனர்.

தேசிய மைய இயக்குனர் செர்கி குர்ஸ்
பெடோரின் முக்கிய பணி, நிலவு மற்றும் மற்ற கிரகங்களில் விண்வெளி தளங்களை கட்டமைக்கவும் பயன்படுத்துவதற்கும் உதவியாக இருப்பது என்கின்றனர் ரஷ்ய வடிவமைப்பாளர்கள்.
"விண்வெளியில் நடக்கும் மிஷன்களின் போதும், பிற கிரகங்களிலும் விண்வெளி வீரர்கள், ரோபோக்களை நம்பியிருப்பார்கள்" என்கிறார் இந்த திட்டத்தின் தலைவரும் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் அடிப்படை ரோபாட்டிக்ஸ் ஆகியவற்றின் தேசிய மைய இயக்குனர் செர்கி குர்ஸ் .

பிரீமியர் டிமிட்ரி ரோகோசின்
முதன்முதலில் டிசம்பர் 2016ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பெடோர், ரஷ்யாவிற்காக நிலவைக் கைப்பற்றும் விளாடிமிர் புடினின் மூலோபாயத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
புட்டினின் துணை பிரீமியர் டிமிட்ரி ரோகோசின் கூறுகையில், கடினமான சூழ்நிலைகளில் ரோபோட்களின் முக்கியத்துவத்தை சிரியாவில் உள்ள போர் ரஷ்யாவிற்கு காண்பித்துள்ளது. எனவே உறுதியளித்தபடி ஐந்தாண்டுகளில் பெடொர் விண்வெளியில் நுழையும். விரைவில் அதை அடைந்து காண்பிப்போம் என தெரிவித்தார்.
முன்னதாக புடின் 15 ஆண்டுகளுக்குள் நிலவில் முதல் தரையிறங்கலை செய்ய தனது விண்வெளித் தலைவர்களுக்கு அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications