அண்டார்டிகாவின் அடியில் ஒளிந்துள்ள 2 மர்மங்கள்; வெளிச்சம் போடு காட்டிய ரஷ்யா!

அண்டார்டிக்கா என்றதுமே உங்களின் நினைவிற்குள் என்ன குதிக்கிறது? பனிப்பாறைகளும், குளிரில் உறைந்த கடலும் தானே! அப்படி தோன்றுவதில் எந்த பிழையும் இல்லை.

|

அண்டார்டிக்கா என்றதுமே உங்களின் நினைவிற்குள் என்ன குதிக்கிறது? பனிப்பாறைகளும், குளிரில் உறைந்த கடலும் தானே! அப்படி தோன்றுவதில் எந்த பிழையும் இல்லை. ஏனெனில் நம்மை பொறுத்தவரை, நமக்கு கூறப்பட்டதும், நாம் பார்த்ததும் தானே உண்மை.

அண்டார்டிகாவின் அடியில் உள்ள

ஆனால் அண்டார்டிகா என்பது நாம் கற்பனை செய்து வைத்திருக்கும் ஒரு சாதாரண இடம் அல்ல என்கிறது ரஷ்யா. இந்த தலைப்பை பற்றி எந்தவொரு நாடு பேசினாலும் நாம் பொருட்படுத்த கூடாது, இரண்டு நாடுகளை தவிர, ஒன்று அமெரிக்கா மற்றொன்று ரஷ்யா.

ஏன் கருத்தில் கொள்ள வேண்டும்?

ஏன் கருத்தில் கொள்ள வேண்டும்?

ஏனெனில் இந்த இரண்டு நாடுகளின் அரசாங்கங்களும் அன்டார்க்டிக்காவில் "பெரும் பகுதியை" கழித்து உள்ளன. உண்மையிலேயே அங்கு என்னென்ன இரகசியங்கள் இருக்கிறது என்பது நன்கு அறிந்து வைத்தும் இருக்கின்றன. ஆனால் அவைகளை பற்றி இதுநாள் வரை வாய் திறந்ததே இல்லை. ஆனால், உண்மை எப்போதும் மறைக்கப்பட்டு கொண்டே இருக்காது அல்லவா?

முதல் நிகழ்வு:

முதல் நிகழ்வு:

அண்டார்டிக்காவின் அடியில் உள்ள எதோ ஒன்று இருக்கிறது என்பதை நிரூபிக்கும் இரண்டு நிகழ்வுகள் நடந்து உள்ளன. முதல் சம்பவம் - அண்டார்டிகாவின் அடியில் கண்டுபிடிக்கப்பட்ட நன்நீர் ஏரிகள். ரஷ்யாவை சேர்ந்த சில ஆய்வாளர்கள் சிலர், அண்டார்டிக்காவில் உள்ள பனி பிரதேசத்தின் கீழ் மற்றொரு கண்டம் மறைந்து உள்ளது என்கிற சர்ச்சையை கிளப்பினார்கள். அதை நம்பும் மக்களில் பெரும்பாலானோர்கள், குறிப்பிடப்படும் அந்த அடித்தள கண்டம் ஆனது பண்டைய நாகரிகத்தை சேர்ந்த ஜீவராசிகள் வாழ்ந்த இடமாக இருக்கலாம் என்று கூறினார்கள்.

மோகத்தின் காரணம்!

மோகத்தின் காரணம்!

இந்த காரணத்தை நாம் புரிந்து கொண்டோமானால் ஏன் சில உலக நாடுகளின் பெரிய "தலைவர்"களுக்கு அண்டார்டிகாவின் மீது அதிக மோகம் இருக்கிறது என்பதையும் நம்மால் புரிந்து கொள்ள முடியும். இப்போது அண்டார்டிக்கா தடை செய்யப்பட்ட ஒரு இடமாவுகவும் இருக்கிறது மற்றும் அண்டார்டிக்கா சார்ந்த அரசாங்கங்களின் முக்கியமான கண்டுபிடிப்புகள் இரகசியமாகவே வைக்கப்பட்டும் வருகின்றது. ஏன் என்பதற்கு தீர்க்கமான மற்றும் நம்புபடியான விளக்கம் எதுவும் இல்லை.

உண்மை எப்போதும் மறைக்கப்பட்டு கொண்டே இருக்காது அல்லவா?

உண்மை எப்போதும் மறைக்கப்பட்டு கொண்டே இருக்காது அல்லவா?

அண்டார்டிகாவில் ஆய்வு மேற்கொண்ட ரஷ்ய விஞ்ஞானிகளிடம் அண்டார்டிக்காவின் பனிப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான ஏரிகள் சிக்கின. நாம் நினைப்பது போல், அந்த ஏரிகள் உறைந்து போன நிலையில் கண்டுபிடிக்கப்படவில்லை. சுமார் 10 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள புதிய நீரை (சுத்தமான நீரை) கொண்டுள்ளன.

துளைக்குள் துளை!

துளைக்குள் துளை!

அதனை நூலாக பிடித்துக்கொண்ட விஞ்ஞானிகள், பனி வழியாக துருவிக்கொண்டு (துளை போட்டு) மிகப்பெரிய ஏரியை அடைந்தனர். அதை அடைய சுமார் பத்து வருடங்கள் எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இப்போது அந்த இடத்தில், ஒரு எலிவேட்டர் நிறுவப்பட்டுள்ளதாம், அதன் வழியாக சென்ற 8 பேர் கொண்ட குழு ஒன்று அண்டார்க்டிக்காவின் பனிக்கு கீழே மறைந்து உள்ள ஏரிகளை ஏரிகளை வெளிப்படுத்தியது.

இரண்டாவது நிகழ்வு!

இரண்டாவது நிகழ்வு!

ரஷ்ய அறிவியலாளர்களிடம் சிக்கிய ஒரு அதிபயங்கரமான ஜீவராசியான ஆர்கனிசம் 46பி. ரஷ்ய விஞ்ஞானிகள் அண்டார்டிக்காவில் ஆய்வு மேற்கொண்டு இருந்த போது, அவர்கள் மிகவும் ஆபத்தான ஒரு ஜீவாராசியை சந்திக்க நேர்ந்தது, அது ரஷ்ய ஆராய்ச்சியாளர்களால் ஆர்கனிசம் 46 பி என்று அழைக்கப்படுகிறது. இந்த உயிரினம் மிகவும் ஆபத்தானது எனக் கூறப்படுகிறது, ஏனெனில் இது விஷத்தினால் பாதிக்கப்படும் இரையை மடக்கி, பின்னர் ஓய்வு நேரத்தில் துண்டு துண்டாக பிரிக்கும் திறனை கொண்ட ஜீவராசியாம். கடல் மற்றும் பனிக்கட்டியின் கீழே ,மறைந்திருக்கும் பேய்கள் உள்ளன என்பதை நிரூபிக்க மற்றும் நம்புவதற்கு இது ஒன்றே போதும்.

150 அடி தூரத்தில் இருந்தும் கூட!

150 அடி தூரத்தில் இருந்தும் கூட!

கூறப்படும் இந்த கொடும் மிருகம் ஆனது, பெரிய அளவில் உள்ள ஆக்டோபஸ் போன்று இருக்குமாம், இதற்கு மொத்தம் 14 கைகள் இருக்குமாம். பயங்கரமான விடயம் என்னவெனில், சுமார் 150 அடி தூர தொலைவில் இருந்தாலும் கூட இதனால் வலுவான விஷத்தை வெளிப்படுத்தி இரையை வீழ்த்த முடியுமாம். ஆய்விற்காக சென்ற ரஷ்ய குழுவின் உறுப்பினர் ஒருவர், இந்த உயிரினத்தால் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

உருவத்தை மாற்றும் சக்தி கொண்டது!

இந்த உயிரினம் பற்றி மென்மேலும் நிகழ்த்தப்பட்ட ஆய்வில் இருந்து, விஞ்ஞானிகளுக்கு கூடுதலான மற்றும் நம்பமுடியாத விஷயங்கள் தெரிய வந்ததாம். இது உருவத்தை மற்றும் திறன் கொண்ட ஒரு மிமிக் ஆக்டோபஸ் இனத்தை சேர்ந்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. கடலில் மூழ்கி நிகழ்த்தப்பட்ட ஒரு ஆய்வின் போது கண்ணில்பட்ட இந்த உயிரினம், தன் உருவத்தை மாற்றியுள்ளதை ஒருவர் கண்டு உள்ளார். இது சாத்தியமாகும் பட்சத்தில் இதனை ஆண்டுகளாக அது ரகசியமாகவே இருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

அண்டார்டிகாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோட்டை போன்ற கட்டடம்! மனிதகுல வரலாற்றை மாற்றி எழுதுமா?

அண்டார்டிகாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோட்டை போன்ற கட்டடம்! மனிதகுல வரலாற்றை மாற்றி எழுதுமா?

பனிபடர்ந்த வடதுருவப் பிரதேசமான அண்டார்டிக் பகுதி மனிதர்கள் வசிப்பதற்கு ஏற்ற இடம் இல்லை
என்பது நாம் அறிந்த வரலாறு. இந்த வரலாற்றை மாற்றியமைக்கும் வகையில் ஒரு கண்டுபிடிப்பு சமீபத்தில் நிகழ்ந்துள்ளது. அண்டார்டிக் பனிப் படலத்திலிருந்து ஒரு பெரிய கோட்டை போன்ற கட்டட அமைப்பு வெளிப்பட்டிருக்கிறது.
இது மோட்டி மற்றும் பெய்லி (Motte and bailey castle) கோட்டை அமைப்பைப் போன்றுள்ளது.

மண் மற்றும் மரக்கட்டைகளைப் பயன்படுத்தி அமைக்கப்படும் ஐரோப்பிய வகையிலான கோட்டை வடிவமைப்பிற்கு மோட்டி மற்றும் பெய்லி கோட்டை என்று பெயர். இத்தகைய வடிவமைப்பிலான கோட்டை ஒன்று பனிப்படலத்திற்குள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகப் புதைந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இந்தக் கோட்டை முட்டை போன்ற வளைந்த வடிவமைப்புடன் கட்டப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

அண்டார்டிகா

அண்டார்டிகா

இந்தக் கோட்டை வெளிப்பாடு, அண்டார்டிகா பகுதியில் பழமையான நாகரிகம் ஒன்று இருந்திருப்பதற்கான அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டட அமைப்பு போலத் தோற்றம் அளிக்கும் இந்தக் கோட்டை பற்றிய அனுமானங்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், அது மனித வரலாறு பற்றி ஆராயும் அறிஞர்களுக்குப் மிகப்பெரிய ஆச்சரியத்தை அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

செயற்கைக் கோள்

செயற்கைக் கோள்

மனிதர்கள் வாழவே முடியாத பகுதி எனக் கருதப்பட்ட அண்டார்டிகா பற்றிய முற்றிலும் மாறுபட்ட உண்மையை இந்தக் கோட்டை வெளிப்பாடு தொடர்பான கருத்துக்கள் வெளிப்படுத்துகின்றன. பனிப் படலத்தில், செயற்கைக் கோள் உதவியுடன் எடுக்கப்பட்ட படங்கள், மிகப் பெரிய கட்டடம் ஒன்று சிதைந்து போனதற்கான அடையாளங்களைத் தெளிவாக உணர்த்தும் வகையில் உள்ளன.

கடுமையான பனிப்பொழிவு

கடுமையான பனிப்பொழிவு

இந்தக் கட்டட அமைப்பு பனிக்குவியலில் கால மாற்றத்தின் காரணமாக இயற்கையாகவே தோன்றியிருக்க வாய்ப்பு உண்டா? என்றும் அறிஞர்கள் ஆராய்ந்து வருகின்றனர். கடுமையான பனிப்பொழிவு மற்றும் குளிர்ந்த காற்றின் காரணமாக பல ஆண்டுகளாகப் படியும் பனிக்கட்டிகளால் இயற்கையாக உருவாகும் சஸ்ட்ருகா (sastruga) என்னும் பனிப்படிவ அமைப்பாக இந்தக் கோட்டை இருக்கலாம் எனவும் தொடக்கத்தில் அறிஞர்கள் நினைத்தனர்.

பிரி ரெய்ஸ்

பிரி ரெய்ஸ்

ஆனால், சஸ்ட்ருகா (sastruga) பனிப் படிவுகளின் அமைப்பு காற்று வீசும் திசை மற்றும் வேகத்திற்கு ஏற்ப அமைந்திருக்கும். ஆனால் முட்டை போன்ற வளைவு கொண்ட கோட்டை வடிவத்தில் சஸ்ட்ருகா பனிப்படிவுகள் அமைவது மிக மிக அரிதான செயல். துருக்கி நாட்டைச் சேர்ந்த, பிரி ரெய்ஸ் (Piri Reis) என்று அழைக்கப்படுகின்ற அஹமது முஹித்தின் என்னும் கடற்படைத் தளபதி, 1513 ஆம் ஆண்டு வடிவமைத்த உலக வரைபடத்தில், அண்டார்டிகா பனிப் பிரதேசம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் பனி படராத சமநிலப் பகுதியாக இருந்ததாகக் காட்டப்பட்டுள்ளது. அண்டார்டிகா பனிப் பிரதேசத்தில், தற்போது கண்டறியப்பட்டுள்ள கோட்டை வடிவக் கட்டட அமைப்பையும் பிரி ரெய்ஸின் நில வரைபடத்தையும் (map) ஒப்பிட்டுப் பார்த்தால் ஆச்சரியமாக உள்ளது.

பிரமிடு

பிரமிடு

இது போன்ற கட்டட அமைப்புகள், அண்டார்டிகா பகுதியில் கண்டறியப்பட்டு அது தொடர்பாக விவாதிக்கப்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னால், பிரமிடு போன்ற முக்கோண வடிவத்துடன் கூடிய கட்டட அமைப்பு பனிப்படலத்திலிருந்து வெளிப்பட்டிருக்கின்றது. ஆனால் தற்போது வெளிப்பட்டிருப்பதைப் போல கட்டட அமைப்பு இதற்கு முன்னால் தோன்றியதில்லை.

Best Mobiles in India

English summary
RUSSIA REVEALS THAT ANTARCTICA IS NOT WHAT WE WERE BEING TOLD: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X