2020: இந்திய ராணுவத்திடம் முதல் எஸ்-400 ஏவுகணை ஒப்படைக்கப்படும்.! அதிபர் புடின் அறிவிப்பு.!
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா வாங்கவுள்ள எஸ்-400 ரக ஏவுகணைகளில் முதலாவது ஏவுகணை வரும் 2020-ம் ஆண்டுக்குள் கண்டிப்பாக இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அவர்கள் தெரிவித்துள்ளார்.

எஸ்-400 ஏவுகணைகள்
குறிப்பாக கடந்த வரும் அக்டோபர் மாதம், இந்தியா ராணுவத்துக்காக சுமார் 5பில்லியன் டாலர் மதிப்பில் 5 எஸ்-400 ஏவுகணைகள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பின்பு இதற்கான ஒப்பந்தம் கடந்த ஆண்டு புது டெல்லியில் கையெழுத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்ய அதிபர்
ஒப்பந்தத்தின்படி முதல் எஸ்-400 ஏவுகணை 2020-ம் ஆண்டுக்குள் ஒப்படைக்கப்படும் என்றும் அதைத் தொடர்ந்து மீதிமுள்ள ஏவுகணைகள் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அடுத்த ஆண்டுக்குள், இந்தியாவுக்கு சொந்தமான முதல் எஸ்-400 ரக ஏவுகணை இந்தியா வந்தடையும் என ரஷ்ய அதிபர் தெரிவித்துள்ளார்.

800மில்லியன் டாலர்கள்
விரைந்து வேலைகளை முடிக்கும்படி இந்தியா எங்களை அழுத்தாதபோதும், நாங்கள் திட்டமிட்ட கால அளவுக்குள் வேலைகளை சிறப்பாக நடந்துகொண்டிருக்கின்றன என்றும் புடின் தெரிவித்துள்ளார். இதுவரை சுமார் 800மில்லியன் டாலர்கள் ரஷ்யாவுக்கு இந்தியாவிடமிருந்து செலுத்தப்பட்டுள்ளது.அதாவது மொத்த தொகையில் சுமார் 15சதிவிகிதம் தொகை இது என்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தகத்தை தொடர வேண்டாம்
ரஷ்யாவுடனான இந்த வர்த்தகத்தை தொடர வேண்டாம் என்றும் அதையும் மீறித் தொடர்ந்தால் இந்தியா மீதுபொருளாதாரத் தடை விதிக்க நேரிடும் என அன்மையில் அமெரிக்க இந்தியாவை எச்சரிக்கை செய்தது. ஆனால்இந்தியா யார் யாரிடம் என்ன வாங்க வேண்டும் என்ற முடிவை இந்தியாவே எடுக்கும் என்று இந்திய
வெளியுறவுத்துறை பதில் கொடுத்தது.

ஆனாலும் சீனா போன்ற பெரிய நாடுகளுடன் போட்டியிட இந்தியாவுக்கு இதுபோன்ற அதிநவீன பாதுகாப்பு தளவாடங்கள்தேவையாக இருக்கின்றது என்றும் இந்தியாவின் தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே முதலாவது எஸ்-400 ஏவுகணை
2020-ம் ஆண்டில் வந்தடையும்.

இந்தியாவின் வான் எல்லைக்குள் அத்துமீறி வரும் போர் விமானங்கள் மற்றும் டிரோன்கள் இந்த ஏவுகணைகள் நுழையாமல் தடுக்கும். அப்படியே நுழைந்தாலும், 380 கிலோ மீட்டருக்கு முன்பே இது எச்சரிக்கை செய்து அத்துமீறி வரும் போர் விமானங்கள் மற்றும் டிரோன்களை தாக்கி அழித்து விடும். எஸ்-300 ஏவுகணையின் மேம்படுத்திய சாதனமே எஸ்-400 ஆகும். இதை ரஷ்யாவை சேர்ந்த அல்மாஸ்-ஆன்டே நிறுவனம் 2007ம் ஆண்டு தயாரித்துள்ளது.
news source: indiatimes.com


Click it and Unblock the Notifications