ஏலியன் படையெடுப்பிற்கு தயாராகும் ரஷ்யா! காரணம் யார் தெரியுமா?

|

இரஷ்யாவின் கிரிம்லினில் இன்று வெளியிடப்பட்டுள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின் மனதை உலுக்கும் அறிக்கையானது, ஒரு சாதாரண இராணுவ அறிக்கை என்பதையும் தாண்டி அறிவியல் திகில் நாவல் போன்றே உள்ளது.

ஏலியன் படையெடுப்பிற்கு தயாராகும் ரஷ்யா! காரணம் யார் தெரியுமா?

இந்த அறிக்கையில் பாலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பிற்கான அதிநவீன ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது, இரஷ்யாவின் விண்வெளிப்படை மூன்று புதிய செயற்கைகோள்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது போன்றவை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

அக்டோபர்24

கடந்த அக்டோபர்24 தேதி, அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது தேசத்தின் ' கோள்களின் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அலுவலகத்திற்கான' (Planetary Defense Coordination Office) நிதி ஒதுக்கீட்டை திடீரென இருமடங்கு அதிகரித்து எச்சரிக்கை விடுத்ததன் காரணமாக இரஷ்யா இந்த முடிவை எடுத்துள்ளது. நிதி ஒதுக்கீட்டிற்கான காரணம் என்னவெனில், நமது சூரியகுடும்பத்தில் நுழைந்த 46P/Wirtanen என்ற வால்மீன் கனடாவின் மேற்குகடற்கரை பகுதியில் அதிசக்திவாய்ந்த தொடர் நிலநடுக்கங்களை ஏற்படுத்துவது மட்டுமின்றி, மீண்டும் அடுத்த 24 மணி நேரத்திற்குள் 7.0ரிக்டர் அளவுள்ள மற்றொரு சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை ஏற்படுத்தி தென் மத்திய அலாஸ்காவை சிதைக்கும் என தெரியவந்துள்ளது. இவையாவும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்க கிறிஸ்தவ இணையதளம் விடுத்த எச்சரிக்கையை கவனமாக பரிசீலிக்க வைத்துள்ளது. Unsealed.org என்ற அந்த இணையதளம் கூறுகையில், பேய்களால் நமது பூமியை அழிக்க அனுப்பிவைக்கப்படும் ஏலியன்களை எதிர்கொள்ள இந்த உலகம் தயாராக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்தது.

கோள்கள் பாதுகாப்பிற்கான நிதி

கடைசியாக 1947ஆம் ஆண்டு மறுசீரமைக்கப்பட்ட அமெரிக்க இராணுவத்தை மீண்டும் சீரமைத்து விண்வெளி படையை உருவாக்கவேண்டும் என கடந்த ஒரு வருடமாக அதிபர் டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால் குழப்பத்தில் இருந்து வந்த பாதுகாப்புத்துறை அதிகாரிகள், 24 அக்டோபர் அன்று டிரம்ப என்ற செய்கிறார் என தெரிந்துகொண்ட பின்பு , தங்கள் மனதில் இருந்த குழப்பத்தையும், வியப்பையும் போக்கிக்கொண்டனர் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அக்டோபர் 24ம் தேதியின் அறிக்கைக்கு ' கோள்கள் பாதுகாப்பிற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்தது ஏன் என டிரம்ப் விளக்கிய பின், அந்த எச்சரிக்கைக்கு இரஷ்ய தலைவர்களின் எதிர்வினை' என தலைப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்கர்கள் மற்றும் பாதுகாப்புதுறை அதிகாரிகள்

அமெரிக்கர்கள் மற்றும் பாதுகாப்புதுறை அதிகாரிகள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ள இவ் அறிக்கையில், வியாழன் கிரக வால்மீன் குடும்பத்தை சேர்ந்த இந்த 46P/Wirtanen வால்மீன்-ன் சுற்றுவட்டப்பாதை காலஅளவு 5.4ஆண்டுகள் எனவும், 17 ஜனவரி 1948 அன்று முதன்முதலில் கண்டறியப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.1.2 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட இந்த வால்மீனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தொலைவு 1-3 ஏயு (AU-astronomical unit, பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயான தூரம் 93/150மில்லியன் மைல்) எனவும், சுழல்காலம் 8.91 மணிநேரம் எனவும் கூறப்பட்டுள்ளது.இதற்கு விண்கலம் அனுப்ப ஐரோப்பிய விண்வெளி கழகம் திட்டமிட்டிருந்த நிலையில், இதைபோலவே வியாழன் குடும்பத்தை சேர்ந்த மற்றொரு வால்மீனான 67p/Churyumov-Gerasimenkoக்கு விண்கலனை அனுப்ப திட்டமிட்டு அதனை அனுப்பியது. 9 ஜூலை 2015 பின்னர் தொடர்பில் இல்லாமல் இருந்த ரோசெட்டா விண்கலம், 30 செப்டம்பர்2016 அன்று 67P/Churyumov-Gerasimenko ல் விழுந்து நெருங்கியது.

நாசா

ஒரு சாதாரண வால்மீனுக்காக இவ்வளவு செலவு செய்து 12 ஆண்டுகளாக பயணம் செய்யும் விண்கலம் அனுப்ப வேண்டிய அவசியம் என்ன என விளக்கிய அதிகாரி ஒருவர், 67p ஒரு வால்மீனே இல்லை எனவும், 20 ஆண்டுகளுக்கு முன்பு நாசா அஙகிருந்து ரேடியோ அலைகளை கண்டிறிந்தாகவும், இதன் மூலம் அங்கு வேற்றுகிரகவாசிகள் இருக்கலாம் எனவும் கூறுகிறார் அந்த அதிகாரி.

"உன்னால ஒன்னும் பண்ண முடியாது" சொல்லி அடிக்கும் விளாமிதிர் புதின்!

கடந்த மாதம், ரஷ்ய போர் விமானமான மிக் -31 ஒன்றில் முன் எப்போதும் காணப்படாத ஒரு ஏவுகணை இருப்பது, புகைப்படத்தில் பதிவானது. ஆரம்பத்தில் அதுவொரு சாதாரண ஏவுகணையாக இருக்கக்கூடும் என்று எண்ணப்பட்டது, பின் சமீபத்தில் கிடைக்கபெற்றுள்ள ஒரு புரிதலின் வழியாக, அந்த ஏவுகணையின் விபரீதம் தெரிய வந்துள்ளது.

வெளியான தகவலின்படி, புகைப்படத்தில் பிடிபட்ட ஏவுகணை ஆனது ஒரு செயற்கைகோள் எதிர்ப்பு ஆயுதமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக இது 2022 ஆம் ஆண்டில் போர் செய்ய தயாராக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதை அமெரிக்க புலனாய்விற்கு கிடைத்த மூன்று உளவுத்துறை தகவல்களுமே உறுதி செய்துள்ளன.

செயற்கைகோள் எதிர்ப்பு ஆயுதமா, அப்படி என்றால்?

ஒரு ஆதாரத்தின் படி, (அடையாளம் கூற விரும்பாத ஒரு நபரின் படி) சந்தேகிக்கப்படும் ரஷ்யாவின் ஆன்டி சாட்டிலைட் மிஸைல் ஆனது ஒரு விண்வெளி வெளியீட்டு வாகனத்துடன் இணைக்கப்படும், பின் புவியின் குறைந்த சுற்று வட்டப்பாதையில் உள்ள, எதிரி நாடுகளின் தொடர்பு மற்றும் புகைப்படங்கள் எடுத்து அனுப்பும் செயற்கைகோள்களை இலக்காகக் கொண்டு உலாவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் சர்வதேச விண்வெளி நிலையம் மற்றும் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி ஆகியவைகள் பூமியின் குறைந்த சுற்று வட்டப்பாதையில் தான் பயணம் செய்கின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

எப்போது சிக்கியது?

ஒரு "மாற்றியமைக்கப்பட்ட" ரஷ்ய மிக் -31 விமானம் ஆனது, சூப்பர்சோனிக் ஏவுகணைக்கு நிகரான ஒரு மர்மமான ஏவுகணையை சுமந்து செல்லும் புகைப்படங்கள், கடந்த செப்டம்பர் மாதம் நடுப்பகுதியில் வெளியானது. ஆக இதன் ஆரம்ப கால சோதனையானது செப்டம்பர் மாதம் முதல் வாரமே தொடங்கி இருக்கலாம் என்கிற ஒரு ஆதாரம். இதுவொரு கேபிடிவ் கேரி டெஸ்ட் ஆகவும் இருக்கலாம், அதாவது விமான பயணத்தின் போது எவ்வாறு இருக்கும் போன்ற மதிப்பீடுகளை செய்யும் ஒரு சாதனையாகவும் இருக்கலாம் என்கிறது மற்றொரு ஆதாரம்.

எப்போது நேரடியான வெளியீட்டு சோதனைகளை சந்திக்கும்?

"ஆயுதம் மற்றும் விமான சட்டகம் ஆகியவை விமானத்தின் போது ஒன்றாகச் செயல்படுகின்றன என்ற நம்பிக்கையை பெறுவதற்காகவே இம்மாதிரியான சோதனைகள் நடத்த படுகின்றன" என்கிறது சிஎன்பிசி. மேலும் இதன் அடுத்தக்கட்ட சோதனை ஆனது 2019 ல் நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தாது அடுத்த ஆண்டு இவ்வகை ஆயுதமானது வெளியீட்டு சோதனைகளை சந்திக்கும் என்று அர்த்தம். மேலும், அமெரிக்க புலனாய்வு அறிக்கையின், இந்த ஏவுகணை வருகிற 2022 ஆம் ஆண்டில் ரஷ்ய ஆயுதக் களத்தில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யாவின் விளக்கம் என்ன?

இதுசார்ந்த கேள்விக்கு விளக்கம் அளித்த ரஷ்ய அணுசக்தி படைகளின் இயக்குனர் பவெல் போட்விக், ""இது எனக்கு புரிகிறது, இது எனக்கும் தெரியும், இது ஒரு செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுதமாக இருக்க சாத்தியக்கூறுகள் உள்ளது" என்று கூறியுள்ளார். மேலும் மாஸ்கோ இதற்கு முன்பு இது போன்ற அமைப்புகளில் பணியாற்றி உள்ளது என்றும் கூறியுள்ளார். "இம்மாதிரியான ஒரு திறனை கொண்டு இருப்பது ரஷ்யாவிற்கு நல்லது தான் என்றும் அவர் கூறியுள்ளார். சீனாவும் அமெரிக்காவும் இதேபோன்ற ஆயுதங்களை உருவாக்கியுள்ளன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

நீண்ட காலமாகவே வளர்ச்சி அடைந்து வருகிறது!

வெளியான புகைப்படங்களை பற்றி கருத்து கூறிய, ஏவுகணை பாதுகாப்பு திட்டத்தின் இயக்குனரான தாமஸ் கரோக்கோ. "காற்றின் வழியாக தொடங்கப்படும் இயக்க-எதிர்ப்பு செயற்கைக்கோள் ஆயுதங்கள் நீண்ட காலமாக வளர்ச்சி அடைந்து கொண்டு தான் வருகின்றன. அது சீனா, அமெரிக்கா, தற்போது ரஷ்யாவால் நிரூபிக்கப்பட்டுள்ளன" என்று கூறி உள்ளார்.

உங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை!

"கடந்த 15 ஆண்டுகளாக ஆயுத தயாரிப்பில் ரஷ்யாவை முந்தும் முனைப்பின் கீழ் வேலை செய்த அனைவர்க்கும் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். எங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக சட்டவிரோதமான தடைகளை அறிமுகப்படுத்திய உங்களால் ரஷ்யாவைக் கட்டுப்படுத்த முடியவில்லை" என்று விளாமிதிர் புதின் கடந்த மார்ச் மாதம் கூறி இருந்ததை மீண்டும் குறிப்பிட்டு காட்ட விரும்புகிறோம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Russia Prepares For Alien Invasion After Trump Warning Proves True With 7.0 Alaskan Quake : Read more about this in Tamil GizBot

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more