Home
Scitech

புடினை பாதுகாக்க ஜி.பி.எஸ்-ஐ ஏமாற்றும் ரஷ்யா

உக்ரேன் மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் ரேடியோ, ஜிபிஎஸ் மற்றும் ரேடார் சிக்னல்களை முடுக்கும் தொழில்நுட்பங்களில் முன்னோடியாக திகழ்கிறது இரஷ்யா.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் துறைமுகத்திற்கு நெருக்கமாக வரும்போதெல்லாம் ஒரு வேடிக்கையான சம்பவம் நிகழ்வதை வாஷிங்டனை சேர்ந்த ஆராய்ச்சியாளர் குழு ஒன்று கண்டறிந்துள்ளது. புடின் துறைமுகத்திற்கு அருகில் உள்ளபோதெல்லாம், அங்கு நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ள கப்பல்களின் ஜிபிஎஸ், பல மைல்கள் தொலைவிலுள்ள அருகாமை விமான நிலையங்களின் ஓடுதளங்களில் காண்பிக்கப்படுகிறது.

புடினை பாதுகாக்க ஜி.பி.எஸ்-ஐ ஏமாற்றும் ரஷ்யா

C4ADS என்ற குழுவின் பாதுகாப்பு நிபுணர்கள் அளித்துள்ள புதிய அறிக்கையின்படி, புடின் பயணிக்கும் போது தன்னுடன் ஒரு மொபைல் ஜி.பி.எஸ் ஸ்பூஃப்பிங் (ஏமாற்று) சாதனத்துடன் பயணம் செய்திருக்கலாம் எனவும், மேலும் நாம் இதுவரை நினைத்துபார்த்திராத அளவில் இரஷ்யா பரந்த அளவில் உலகளாவிய வழிசெலுத்தல் அமைப்பை (ஜிபிஎஸ்) கையாண்டுவருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

"ரஷ்யா

"ரஷ்யா தொடர்ந்து இந்த பிரிவில் ஒரு முன்னோடியாக செயல்படுகிறது மற்றும் இந்த திறன்களை விரிவாக்குவதன் மூலம், மூலோபாய-முக்கிய வசதிகள் மற்றும் முக்கிய நபர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது மட்டுமில்லாமல், இந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சிரியாவிலும் ரஷ்யாவின் ஐரோப்பிய எல்லைகளிலும் உள்ள தனது படைகளை ஊக்குவிக்கிறது" என்கிறது அந்த அறிக்கை.

மேற்கத்திய இராணுவம்

மேற்கத்திய இராணுவம்

துல்லியமான ஆயுதங்களில் மேற்கத்திய இராணுவம் மேம்பட்டு இருப்பதை குறைத்து மதிப்பிட்ட கிரெம்ளின் முயற்சியின் ஒரு பகுதியாக, ரஷ்ய இராணுவம் மின்னணு போர் பொருட்கள் மீது பெரும் முதலீடுகளை மேற்கொண்டுள்ளது. இதன்மூலம் எதிரிநாட்டு தொலைத்தொடர்புகருவிகளை செயலளிழக்க வைக்கும் திறனை குறிப்பிட்ட அளவு அதிகரித்துகொண்டு, வலையமைக்கப்பட்ட போர்கருவிகள் என்ற அமெரிக்காவின் யோசனையை சாத்தியமாக்கியுள்ளது.

 மின்னணு போர்கருவிகள்

மின்னணு போர்கருவிகள்

"திறன்மிகு ஆயுதங்களுக்கு திறன்மிகு செயல்களை கூற திறன்மிகு நபர்கள் தேவை. அவைகளுக்கு நிலைப்பாட்டின் அளவீடுகள் தேவை. அவற்றிற்கு வழிசெலுத்தல் அமைப்புகள் தேவை, "என்கிறார் சிஎன்ஏ ஆராய்ச்சி நிறுவனத்தின் ரஷ்ய இராணுவ நிபுணர் மைக்கேல் கேஃப்மேன்."நடவடிக்கைகளின் வேகத்திறகு நிகழ்நேர தரவுகளின் அணுகல் தேவைப்படுகிறது," மற்றும் இந்த மின்னணு போர்கருவிகள் துல்லிய ஆயுதங்கள் மற்றும் வான்வழி தாக்குதல் அமெரிக்காவின் ஆதிக்கத்தின் ஒரு விடையளிக்கும் என ரஷ்ய இராணுவம் நம்புகிறது.

உக்ரேன் மற்றும் சிரியா

உக்ரேன் மற்றும் சிரியா

உக்ரேன் மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் ரேடியோ, ஜிபிஎஸ் மற்றும் ரேடார் சிக்னல்களை முடுக்கும் தொழில்நுட்பங்களில் முன்னோடியாக திகழ்கிறது இரஷ்யா. ரேடியச் சடங்குகள், சிரியாவில், அமெரிக்க இராணுவ தளபதிகள் "ஆக்கிரோஷமான மின்னணு போர்கருவிகளுக்கான சூழலை" பற்றி புகார் செய்துள்ளனர், மற்றும் அமெரிக்க இராணுவம் இப்போது அதன் மின்னணு போர் திறன்களை மேம்படுத்துவதற்காக நகர்வுகளை மேற்கொண்டுள்ளது.

 ஸ்பூஃபிங் தொழில்நுட்பத்தை ரஷ்யா பயன்படுத்தும்

ஸ்பூஃபிங் தொழில்நுட்பத்தை ரஷ்யா பயன்படுத்தும்

ரஷ்ய அதிபர் புடினின் தனிப்பட்ட பாதுகாப்பு விவரம் வரை நீளும் மின்னணு போர்கருவிகள் ,ட்ரோன் தாக்குதல்களுக்கு எதிராக ரஷ்ய தலைவர் பாதுகாக்க ஜி.பி.எஸ் ஸ்பூஃப்பிங் முறையை கையாளுகிறது. ஆனால் அந்த ஸ்பூஃப்பிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதையும் கண்காணிக்க முடியும் மற்றும் ரஷ்ய மின்னணு போர் திறன்களின் செயல்திறன் மற்றும் திறன்கள் மீதான முன்னோடியில்லாத பார்வை ஆகியவற்றை வழங்க இயலும்.


இந்த கோட்பாட்டின்படி, புடின் அருகே உள்ள டிரோன்கள் ஸ்பூஃப்பிங் வரம்பிற்குள் வரும்போது தானாகவே தரையிறங்கும் அல்லது செயலிழக்கும். ட்ரோன் படுகொலை பற்றிய பயம் ஒரு யதார்த்தமான ஒன்றாகும். கடந்த ஆண்டு வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மடூரோ ட்ரோன் மூலம் செய்த வெடிகுண்டு தாக்குதல் முயற்சியிலிருந்து உயிர் தப்பினார்.

ஆனால் ஸ்பூஃபிங் தொழில்நுட்பத்தை ரஷ்யா பயன்படுத்தும் போது சில ஆச்சரியமான பக்க விளைவுகளைக் கொண்டிருக்கின்றன. செப்டம்பர் 2016ல் இரஷ்ய அதிபர் புடின் , பிரதம மந்திரி டிமிட்ரி மெட்வெடேவ் உடன் கெர்ச் பகுதியில் கட்டப்படும்

$ 4 பில்லியன் பாலத்தை ஆய்வுசெய்யவும் தொழிலாளர்களை சந்திக்கவும் பயணித்தனர். இரண்டு ரஷ்யத் தலைவர்களும் அங்கு இருந்தபோது, அருகிலிருந்த கப்பல்களின் தானியங்கி அடையாள அமைப்புகள் மற்றும் ஜிபிஎஸ் உடன் இணைந்த சில பகுதிகள் , 125 மைல் தொலைவில் உள்ள சிம்பெரோபோல் விமானநிலையத்தில் தங்கள் இருப்பிடம் உள்ளதாக காண்பிக்க துவங்கின.

கட்டுமான வாகனங்கள்

கட்டுமான வாகனங்கள்

இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் புடின் புதிதாக கட்டப்பட்ட பாலம் முழுவதும் கட்டுமான வாகனங்கள் அணிவகுக்க கெர்ச் பகுதிக்கு சென்றார். மீண்டும் அப்பகுதியில் உள்ள கப்பல்கள் விசித்திரமான இருப்பிட தகவல்களையும், குறிப்பாக ரஷ்யாவின் மெயின்லேண்ட்-ல் உள்ள அனபா விமான நிலையத்தில் காண்பித்தன.

Best Mobiles in India

English summary
Russia Is Tricking GPS to Protect Putin: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X