அணுஆயுத அபாயம் : அமெரிக்காவின் நெருக்கடியில் இரஷ்யா!

ஒட்டுமொத்த ஐரோப்பாவையும் தாக்கக்கூடிய திறன்வாய்ந்த ஏவுகணைகளை நிறுவ வேண்டிய நிலைக்கு ரஷ்யாவை தள்ளவேண்டாம் என வாஷிங்டனுக்கு ரஷ்ய தூதர் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

|

ஒட்டுமொத்த ஐரோப்பாவையும் தாக்கக்கூடிய திறன்வாய்ந்த ஏவுகணைகளை நிறுவ வேண்டிய நிலைக்கு ரஷ்யாவை தள்ளவேண்டாம் என வாஷிங்டனுக்கு ரஷ்ய தூதர் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

அணுஆயுத அபாயம் : அமெரிக்காவின் நெருக்கடியில் இரஷ்யா!

கடந்த திங்கட்கிழமை பத்திரிக்கையாளர்களை சந்தித்த ரஷ்ய தூதர் அனடோலி அனடோவ், தங்களுக்கு நெருக்கமாக உள்ள ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்க புதிய ஏவுகணைத் தளங்களை அமைத்தால், அதற்கு பதிலடியாக ரஷ்யாவும் ஏவுகளணைகளை நிறுவும் என தெரிவித்தார். இடைக்கால அணுசக்தி உடன்படிக்கையை (INF) திரும்பபெற்றதன் ஒரு பகுதியாக அமெரிக்கா இதை செய்துள்ளாதாக ரஷ்ய தூதர் கவலை தெரிவித்துள்ளார். அமெரிக்க மற்றும் சோவியத் ஒன்றியத்தால் 1987 ல் கையெழுத்திட்ட இந்த ஐ.என்.எஃப் ஒப்பந்தம் ஒரு ஆயுத கட்டுப்பாட்டு உடன்படிக்கையாக இருந்தது. இதன் மூலம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் கப்பல் ஏவுகணைகள் தடை செய்யப்பட்டது.

 டொனால்ட் டிரம்ப்

டொனால்ட் டிரம்ப்

ரஷ்யா விதிமுறைகளை மீறுவதாக குற்றஞ்சாட்டிய பின்னர், இந்த ஆண்டு பிப்ரவரி 1 ல் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகினார்.


ரஷ்ய தூதர் அன்டோவ் கூறுகையில் " அமெரிக்கா ஐஎன்எப் ஒப்பந்தத்திலிருந்து விலகுவது என்று முடிவெடுத்த பின்னர் அமெரிக்கா அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளில் ஏவுகணைகளை நிறுவலாம் என நாங்கள் மிகவும் கவலை கொண்டுள்ளோம்." என தெரிவித்தார்.

ஏவுகணைகளை நிறுவ வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்

ஏவுகணைகளை நிறுவ வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்

"நாங்களும் ஏவுகணைகளை நிறுவ வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். ஆனால் அவ்வாறு செய்தால் அது ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளை தாக்கி அழிக்கும் திறன்கொண்டதாக இருக்கும்" என தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன் பாதுகாப்பு அமைப்பான ஹென்றி எல் ஸ்டிம்சன் மையத்தில் அன்டோவ் உரையாற்றிய நிலையில், அங்கு ஐரோப்பா வரைபடமும் திரையிடப்பட்டதாக கூறப்படுகிறது.

விளாடிமிர் புடின்

விளாடிமிர் புடின்

கடந்த வாரம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ஐஎன்எப் உடன்படிக்கையில் இருந்து ரஷ்யா முறையாக வெளியேறும் வகையில் ஒரு ஆணையில் கையொப்பமிட்டார்.

ரஷ்ய ஏவுகணைகள் ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க தளங்களை இலக்காகக் கொண்டிருக்கும் என எச்சரித்த புடின், அமெரிக்கா ஐரோப்பாவில் அதிக ஏவுகணைகளை நிறுவினால் , ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க தளங்களுடன், அமெரிக்காவில் உள்ள முடிவெடுக்கும் மையங்களையும் இலக்காகக் கொண்டு வர முடியும் எனவும் அவர் எச்சரித்தார்.

நாங்கள் மோதல் விரும்பவில்லை

நாங்கள் மோதல் விரும்பவில்லை

மேலும் அவர் கூறுகையில் "நாங்கள் மோதல் விரும்பவில்லை. அதிலும் குறிப்பாக அமெரிக்கா போன்ற உலகளாவிய அதிகார மையத்துடன்! நான் தெளிவாகவும் வெளிப்படையாகவும் சொல்கிறேன். ரஷ்யாவை அச்சுறுத்தும் ஏவுகணை அமைப்புகளுக்குப் பின்னால் இருக்கும் முடிவெடுக்கும் மையங்களுக்கு எதிராக பயன்படுத்தப்படக்கூடிய ஏவுகணைகளை நிறுவவேண்டிய கட்டாயத்தில் ரஷ்யா உள்ளது. " என தெரிவித்துள்ளார்.

Best Mobiles in India

English summary
Russia could ‘be FORCED’ to deploy missiles that cover ‘WHOLE’ of Europe: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X