ரஷ்யாவும் சீனாவும் மோதினால் சீனாதான் வெல்லும்; ஏன் என்பதற்கு 5 காரணங்கள்!

  சீனாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான உறவு தற்போது மிகவும் சுமூகமான போய்க்கொண்டு தான் இருக்கிறது. குறிப்பாக இந்த இரு நாடுகளும் பிரமிக்கத்தக்க இருதரப்பு வர்த்தகத்தை (கடந்த 2014 ஆம் ஆண்டில் 90 பில்லியன் டாலர்கள்) அனுபவித்து வருகின்றன. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, சீனா மற்றும் ரஷ்யாவும் "கூடி விளையாடினாலும்" கூட, வரலாற்றை நாம் மறந்து விட கூடாது.

  ரஷ்யாவும் சீனாவும் மோதினால் சீனாதான் வெல்லும்; ஏன் 5 காரணங்கள்!

  1960 களின் பிற்பகுதியில் சோவியத் ஒன்றியமும் சீனாவும் விரிவான யுத்தங்களை நடத்தின. அந்த யுத்தங்களின் காரண கர்த்தாவாக இரு நாடுகளின் எல்லையையும் தொட்டு தவழும் சர்ச்சைக்குரிய பகுதியான உஸ்சூரி ஆறாக இருந்தது. பின்னர் அந்த ஆறு ஆனது ரஷ்யாவிற்கு சொந்தமானது. ஒருவேளை அந்த யுத்தமானது, 21 ம் நூற்றாண்டில் நடந்து இருந்தால் என்ன ஆகி இருக்கும்? என்று யோசித்து பார்த்தால், சீனா வெல்லுமா? அல்லது ரஷ்யா வெல்லுமா? ஆயுத பலம் என்று வந்து விட்டால் யார் முன்னிலை வகிப்பார்கள்? யார் பின் வாங்குவார்கள் ?போன்ற பல கேள்விகள் எழுகின்றன.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  விறுவிறுப்பான ஆபத்தில் இருக்கின்றன!

  சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், எந்த உலக நாடுகளை காட்டிலும், ரஷ்யா மற்றும் சீனா என்கிற இரண்டு நாடுகளும் விறுவிறுப்பான ஆபத்தில் இருக்கின்றன. பெரிய மரபு ரீதியான சக்திகள், ஒரு நீண்ட பகிரப்பட்ட எல்லைப்பகுதி, பொருளாதார இடையூறு மற்றும் இரு தரப்பிலும் அணுசக்தி ஆயுதங்களின் இருப்பு போன்ற விடயங்கள், இன்னும் பரபரப்பை கிளப்புகின்றன.

  சீனாவின் கைகள் தான் ஓங்கும்! எப்படி?

  மேற்கத்திய பசிபிக் பிராந்தியத்தில், அமெரிக்கப் படைகளுக்கு எதிராக பொதுவாக பயன்படுத்தப்படுவதாக கருதப்படும் நீண்ட தூர ஆயுத அமைப்புகளின் ஒரு ஆயுதத்தை சீனா உருவாக்கி வருகிறது. இவ்வகையான ஆயுதங்களின் தாக்குதல் வரம்பிற்குள் பல வகைகள் உள்ளது. அதனால் போர் என்று வந்துவிட்டால், சீனாவின் ​​இந்த ஆயுதங்களில் பலவும் ரஷ்யாவிற்கெதிராக வடக்கிலும், மேற்கிலும் பாய்ந்து செல்லும் என்பதில் சந்தேகமே வேண்டாம். அதிலும் குறிப்பாக சீனாவின் ஐந்து பிராதான ஆயுதங்கள் ரஷ்யாவிற்குள் "புகுந்து விளையாடும்" என்றே கூறலாம். அவைகள் என்னென்ன? அவைகளை கண்டு ஏன் ரஷ்யா அஞ்சுகிறது?

  01. டபுள்யூ யூ 14 ஹைபர்சோனிக் வெப்பன் சிஸ்டம்:

  ஹைபர்சோனிக் ஆயுத துறையில் சீனா மிகவும் தீவிரமாக வளர்ந்தும், ஆராய்ந்தும் வருகின்றது. ஹைபர்சோனிக்ஸ் ஆனது வழக்கமான ஆயுதங்களைவிட மிக விரைவான பயணத்தை மேற்கொள்கிறது, எதிரியின் எதிர்வினை முறைகளைக் குறைத்து, இலக்கில் மிகப்பெரிய இயக்க ஆற்றலையும் அளிக்கிறது. அத்தகைய ஆயுதங்கள் சீனாவின் பரந்த தாக்குதல் எல்லையை வழங்குகின்றன. அதாவது, மேற்கு சீனாவில் இருந்து தொடங்கப்பட்ட ஒரு ஹைபர்சோனிக் ஆயுதம் ஆனது இருபது நிமிடங்களுக்குள் மாஸ்கோவை சென்று தாக்கும் அளவு வல்லமை கொண்டு இருக்கும்.

  குறுக்கீடுகளை ஒன்றுமில்லாமல் செய்யும்!

  சீனா கடந்த பதினைந்து மாதங்களில், நான்காவது முறையாக அதன் டபுள்யூ யூ 14 நுண்ணறிவு ஆயுதத்தை பரிசோதனை செய்துள்ளதும், மார்க் 10 வரையிலான வேகத்தை அடையும் இவ்வகை ஆயுதமானது வழக்கமான மேற்பரப்பு-காற்று-ஏவுகணைகள் மற்றும் ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைகள் மூலம் நிகழும் குறுக்கீடுகளை ஒன்றுமில்லாமல் செய்யும் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது வரையிலாக இந்த ஹைபர்சோனிக் ஆயுதமானது சீன ராணுவத்தில் இணைக்கப்படவில்லை. ஆனால் கூடிய விரைவில் அது நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  02. டிஎஃப் -10 ஏ க்ரூஸ் மிஸைல் (ஏவுகணை)!

  சீனாவின் க்ரூஸ் ஏவுகணை திட்டமானது பல தசாப்தங்களாக வளர்ச்சிக்கு உட்பட்டுள்ளது. அதன் சமீபத்திய மற்றும் மிகவும் சக்திவாய்ந்த வளர்ச்சியை- டிஎஃப் -10 ஏ க்ரூஸ் மிஸைல் என்று அழைக்கலாம். இந்த ஏவுகணை ஆனது சீனாவின் வழக்கமான மற்றும் அணுசக்தி ஏவுகணைகளை கட்டுப்படுத்தும் இராணுவ சேவை கிளையின் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  சீனாவின் இந்த புதிய க்ரூஸ் ஏவுகணை ஆனது அமெரிக்க தோமஹாக் ஏவுகணையை போன்றே தோற்றமளிப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது ஒரு ஜோடி கட்டையான இறக்கைகள் மற்றும் ஒரு டர்போ இயந்திரத்தை கொண்டுள்ளதாம். சக்தியை பொறுத்தமட்டில், சுமார் 500 கிலோ கிராம் எடையை சுமார் 941 மைல்கள் அளவிற்கு கொண்டு சென்று சேர்க்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

  03. செங்டு ஜே-20 ஃபைட்டர்:

  இது சீனாவின் முதல் ஐந்தாவது தலைமுறை போர் விமானம் ஆகும். வளர்ச்சி பனியின் கீழ் இருக்கும் இந்த விமானம் ஆனது ஒரு பெரிய, இரட்டை இயந்திரம் கொண்டு உருவாக்கம் பெற்று வருகிறது. இந்த விமானம் ஏர்-டூ-ஏர் மற்றும் லேண்ட் அட்டாக் ஏவுகணை ஆகிய இரண்டையும் செலுத்தும் திறனை கொண்டிருக்கும். ஜே-20 விமானத்தின் அறிமுகம் பற்றிய விவரங்கள் இல்லை. ஆனால் இது சு-27 அல்லது எஃப்-15ஏ ஸ்ட்ரைக் ஈகிள் அல்லது ரஷ்யாவின் தந்திரோபாய குண்டுவீசும் ரஷியன் சு -24 போன்ற எதைக்காட்டிலும் சிறந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

  04. எஸ்-400 சர்பேஸ் டூ ஏர் மிஸைல்:

  போர்க்காலம் என்று வந்துவிட்டால் ரஷ்ய இராணுவத்தின் வயிற்றை கலக்கும் ஒரு ஆயுதமாக இது திகழும். ஏனெனில் இது சீனாவால் தயாரிக்கப்படவில்லை, ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்டுள்ளது. எந்தவொரு நாட்டின் விமானப்படையாலும் சமாளிக்க முடியாத இந்த ஆயுத அமைப்பை ரஷ்யாவிலும் சமாளிக்க முடியாது என்பது ரஷ்யாவிற்கே தெரியும்.

  05. டைப் 071 லேண்டிங் பிளாட்பார்ம் டாக்:

  விளாடிவோஸ்டோக் போன்ற ரஷ்ய பகுதியை கைப்பற்ற சீனாவிற்கு இருக்கும் ஒரே வழி - கடல் வழி தாக்குதல் தான். சீனா தற்போது நான்கு டைப் 071 நீர்மூழ்கிக் கப்பல் தளங்களை உடைய கப்பல்களைக் கொண்டுள்ளது, ஒவ்வொன்றும் சீன கடற்படையின் ஏறத்தாழ ஒரு படைப்பிரிவை தரையிறக்கும் திறன் கொண்டது (ஒவ்வொரு கப்பலிலும் கிட்டத்தட்ட 700 அடி நீளமானது). அதாவது ஒரு டைப் 071 கப்பல் ஆனது கிட்டத்தட்ட 400 முதல் 800 துருப்புக்கள் மற்றும் 18 கவச வாகனங்கள் ஆகியவற்றை உள்ளடக்கும்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  Russia-China War 5 Weapons China Would Strike With: Read more about this in Tamil GizBot
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more