கூடங்குளம் அணு மின் நிலையம்: எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் ரஷ்யா.!

இந்த எரிபொருளைக் கையாள்வதால் என்ன மாதிரியான அணுக்கழிவு உற்பத்தியாகும்? அணுக்கழிவை கையாள்வதற்கு இந்திய அணுமின் சக்திக் கழகத்திடம் தொழில்நுட்பம் உள்ளதா?

|

தற்சமயம் வெளிவந்த அறிவிப்பு என்னவென்றால் கூடங்குளம் அணுவுலையில் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் எரி பொருளான MTVS-க்குப் பதிலாக புதிய எரிபொருளான TVS_2M என்ற எரிபொருளை பயன்படுத்த ரஷ்ய
அரசின் அணுசக்தி நிறுவனமான ரொசட்டம் தெரிவித்துள்ளது.

கூடங்குளம் அணு மின் நிலையம்:  எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் ரஷ்யா.!

குறிப்பாக கூடங்குளத்தில் இந்தியா - ரஷ்யா கூட்டு முயற்சியில் செயல்பட்டு வரும் 2 உலைகளுக்கான உபகரணங்கள் அனைத்தையும் ரஷ்ய அணு உலை சக்தி கழகமான ரொசட்டம்(ROSATOM ) நிறுவனம் தான் தயாரித்து வழங்கியது.

ரொசட்டோம்

ரொசட்டோம்

பின்பு ஏற்கனவே இருக்கும் இரண்டு உலைகளுக்கும் மற்றும் கட்டப்படவிருக்கும் இரண்டு உலைகளுக்குமான உபகரணங்களையும் ரொசட்டோம் நிறுவனம்தான் தயாரித்து வழங்கவுள்ளது.

ஒலெக் க்ரிகோரிவ்

ஒலெக் க்ரிகோரிவ்

கடந்த ஏப்ரல் 15-ம் தேதி மற்றும் 15ம் தேதிகளில் ரஷ்யாவின் சோச்சி நகரில் நடந்த 11-வது உலக அணுசக்தி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ரொசட்டோமின் எரிபொருள் நிறுவனமான TVEL-ன் துணைத் தலைவரான
ஒலெக் க்ரிகோரிவ் என்பவர் தெரிவித்தது என்னவென்றால், கூடங்குளத்தில் செயல்பட்டு வரும் இரண்டு உலைகள் மற்றும் புதிதாக வரவிருக்கும் 4 உலைகளுக்கும் புதிய எரிபொருள் ஒன்றை பயன்படுத்தவிருப்பதாக அவர்
தெரிவித்தார்.

MTVS என்ற எரிபொருள்

MTVS என்ற எரிபொருள்

தற்சமயம் MTVS என்ற எரிபொருள் கொண்டுதான் கூடங்குளத்தின் இரண்டு உலைகளிலும் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. அதற்கு பதிலாக வரும் 2021-ம் ஆண்டிலிருந்து இரண்டு உலைகளும் TVS-2M என்ற புதிய எரிபொருளின் மூலம் மின்னுற்பத்தி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பம் உள்ளதா?

தொழில்நுட்பம் உள்ளதா?

ஆனால் இந்த எரிபொருளைக் கையாள்வதால் என்ன மாதிரியான அணுக்கழிவு உற்பத்தியாகும்? அணுக்கழிவை கையாள்வதற்கு இந்திய அணுமின் சக்திக் கழகத்திடம் தொழில்நுட்பம் உள்ளதா? போன்ற கேள்விகளுக்கு மக்களிடம் பதில் சொல்லிவிட்டுத்தான் இந்திய அணுமின் சக்திக் கழகம் புதிய எரிபொருளை பயன்படுத்த வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் கூறியுள்ளனர்.

சட்டவிரோதமாகும்

சட்டவிரோதமாகும்

பின்பு EIA NOTIFICATIONல்உள்ள பத்தி 2ன் படி ஏற்கெனவே செயல்பட்டு வரும் உலையில் ஏதேனும் மாற்றம், விரிவாக்கம் போன்றவை செய்ய வேண்டுமானால் புதிதாக சுற்றுச்சூழல் அனுமதி பெறுவது அவசியம். அப்படி முறையாக சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் அணுவுலையில் மாற்றம் செய்வது சட்டவிரோதமாகும்" என மக்கள் தெரிவித்துள்ளனர்

Best Mobiles in India

English summary
russia-atomic-energy-corporation-to-change-kudankulam-nuclear-power-plant: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X