காணாமல் போன எப்35 ஜெட்டை கண்டுபிடிக்கும் ரேஸில் அமெரிக்கா & ஐப்பானுக்கு எதிராக ரஷ்யா& சீனா

பசிபிக் பெருங்கடலில் ஜப்பானின் அமோரி எல்லையில்லுள்ள கிழக்கு கடற்கரையில் இருந்து 84 மைல் தொலைவில் அந்த விமானம் தனது தொடர்பை இழந்துள்ளது.

|

ஜப்பான் இராணுவம் தனது F-35 ஸ்டீல்த் ஜெட் விமானத்துடனான தொடர்பை இழந்ததாக அந்நாடு கடந்த வாரம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. பசிபிக் பெருங்கடலில் ஜப்பானின் அமோரி எல்லையில்லுள்ள கிழக்கு கடற்கரையில் இருந்து 84 மைல் தொலைவில் அந்த விமானம் தனது தொடர்பை இழந்துள்ளது. ஜப்பான் ஏற்கனவே தனது பைலட் மற்றும் விமானத்தினை தீவிரமாக தேடிவருகிறது.

எப்35 ஜெட்டை கண்டுபிடிக்கும் ரேஸில் அமெரிக்கா  ரஷ்யா  சீனா

இருப்பினும் ரஷ்யா மற்றும் சீனா ஆகிய இருநாடுகளும் அப்பகுதியில் மெச்சக்கூடிய வகையில் தனது கடற்படை இருப்பை வலுவாக கொண்டிருப்பதால், அவை முதலில் அந்த ஜெட் விமானத்தை கண்டறியலாம் மற்றும் அமெரிக்க விமானப்படையின் சகாப்தம் அதன் உண்மையான திறனைக் கண்டுபிடிப்பதற்கு முன்னரே முடிந்துவிடலாம். காணாமல் போன் விமானத்தை ஜப்பான் அல்லது அமெரிக்கா கண்டுபிடிக்க முடியாதது குறித்து ஓய்வு பெற்ற அமெரிக்க விமானப்படை லெப்டினெட் ஜெனரல் டேவிட் டெப்டுலா கூறுகையில் 'சுருக்கமாக கூறவேண்டுமானால் இது அமெரிக்க விமானப்படைக்கு நல்லதல்ல' என குறிப்பிட்டுள்ளார்

டாம் மூரே

டாம் மூரே

ரஷ்ய மற்றும் ஆயுதப் பெருக்க நிபுணரான டாம் மூரே சமூக ஊடகங்களில் கூறியதாவது, "சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் ஜப்பானின் காணாமல் போன F-35 ஜெட்-ஐ கண்டுபிடிப்பதற்காக இந்த உலகத்தில் எந்தவொரு விலையையும் கொடுக்கலாம். இது ஒரு ஃபிக் டீல். ' என்கிறார்.

ஆழ்கடல் பயணம்

ஆழ்கடல் பயணம்

ரஷ்யா ஆழ்கடல் பயணம் மற்றும் ஆராய்ச்சிகளுக்காக நீர்மூழ்கிக் கப்பல்களை தனது கப்பற்படையில் வைத்துள்ளது. அதேநேரம் ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் மீட்பு பணிகளுக்கு சரிபட்டுவராத இணைகளான, அமெரிக்காவின் இரண்டு பழைய மீட்பு மற்றும் பாதுகாப்பு கப்பல்களுடன், அணு நீர்மூழ்கி கப்பல்களை மட்டுமே நம்பியிருக்கின்றன. இந்த தேடுதல்வேட்டை இன்னும் அற்புதமாக மாற்றுவது என்னவெனில், விமானம் எங்கு விழுந்தது என்பது யாருக்கும் தெரியாது. நீரோட்டங்களின் கணக்கியல் படி, அந்த விமானம் இப்போது எங்குவேண்டுமானாலும் இருக்கலாம்.

சீனா

சீனா

சீனா F-35 க்கான திட்டங்களை திருடியதாக ஆதாரங்களுடன் வதந்திகள் பரவிவரும் நிலையில், அந்த தகவல்கள் வைத்துக்கொண்டு மற்றும் காணாமல் போன F-35 ஜெட் விமானத்தை கண்டுபிடிப்பதாலும் அவற்றை சீனாவால் உருவாக்கமுடியாது . ஏனெனில் அவற்றை உருவாக்குவதற்கு தேவையான மேம்பட்ட உற்பத்தி தொழில்நுட்பங்களில் அவ்விரு நாடுகளும் பின்தங்கியுள்ளன.

நெட்வொர்க்கிங்

நெட்வொர்க்கிங்

F-35 ஜெட் விமானம் அதன் நெட்வொர்க்கிங், சென்சார் ஃபுஷன் மற்றும் பாதுகாப்பான தகவல்தொடர்புகளால் அமெரிக்காவிற்கு மிகவும் முக்கியமானது. பசிபிக் கடலின் உப்புநீரில் மூழ்கியுள்ள அந்த சேதமடைந்த விமானத்தை வைத்து அதன் முக்கிய மென்பொருள்கள் மற்றும் கட்டமைப்புகளை மீள் உருவாக்கம் செய்வது மிகவும் கடினமானது. ஏனெனில் இந்த ஜெட் இன் முக்கிய அமைப்புகள் புரிந்துகொள்வதற்கு மிகவும் கடினமாக, ஏற்றுமதி செய்யும் வகையில் பொறியாளர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. வேண்டுமானால் விமானத்தின் பைபர்மேட்.கோட்டிங் மாதிரிகளை வேண்டுமானால் சேகரிக்கமுடியும்.

யார் வெற்றி பெறுவார்கள்?

யார் வெற்றி பெறுவார்கள்?

காணாமல் போன ஜெட் விமானத்தை கண்டுபிடிக்கும் இந்த பந்தயத்தில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.

Best Mobiles in India

English summary
Russia And China In A Race Against US & Japan To Find The Lost F-35 Jet: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X