அரசாங்கத்தால் செய்ய முடியாததை, மாணவர்கள் செய்து சாதனை.!

|

அதிநவீன தொழில்நுட்பத்தை ஒரு சாபமென கருதும் மக்கள் ஒருபக்கமிருக்க, அதை ஒரு வரமாக மாற்றும் மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படியானதொரு வரம் தான் - கேரளாவில் உள்ள மாணவர்களின் கூட்டு உழைப்பின்கீழ் உருவாக்கம் பெற்றுள்ள ஒரு ரோபோட்.!

அரசாங்கத்தால் செய்ய முடியாததை, மாணவர்கள் செய்து சாதனை.!

அனுதினமும் நாம் கடந்து செல்லும் ஆயிரக்கணக்கான படைப்புக்களை போல இந்த ரோபோட்டை கடந்து சென்றுவிட இயலாது ஏனெனில் இந்த ரோபோட் ஆனது இதுநாள் வரை நாம் கேள்விப்பட்ட, சந்தித்த, பார்த்து பழகிய மனித மரணங்களை ஒன்றுமில்லாமல் செய்யவுள்ளது.

திருவனந்தபுரத்து கில்லாடிகள்.!

திருவனந்தபுரத்து கில்லாடிகள்.!

கழிவுநீர் தொட்டிகளுக்குள் மூச்சைப்பிடித்து இறங்கும் பணியாளர்கள், விஷவாயு தாக்கி இறக்கும் கொடுமையான சிக்கலை தீர்த்துக்கட்ட திருவனந்தபுரத்து கில்லாடிகள் ஒரு மீட்டர் உயர ரோபோவை வடிவமைத்துள்ளனர். ஆம், இது கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் ஒரு ரோபோட் ஆகும்.

இந்த ரோபோட் எப்படி வேலை செய்யும்.?

இந்த ரோபோட் எப்படி வேலை செய்யும்.?

'பென்டிக்யூட்' என்று அழைக்கப்படும் இந்த ரோபோட் ஆனது மொத்தம் நான்கு கால்களை கொண்டுள்ளது மற்றும் வைஃபை மற்றும் பிற கட்டுப்பாட்டு பேனல்களுடன் இணைக்கப்பெற்றுள்ளது. ஆழமான கழிவுநீர் தொட்டியின் மேல்புறத்தில் இருந்தபடியே அதன் கால்களை உள்ளேவிட்டு, கழிவுகளை வெளியே துப்பரவு செய்கிறது. பின்னர் கழிவுகளைஒரு வாளிக்குள் போடப்படுகிறது.

காற்றழுத்தவியலின் கீழ் இயங்குகிறது.!

காற்றழுத்தவியலின் கீழ் இயங்குகிறது.!

இந்த 'பென்டிக்யூட்' ரோபோட் ஆனது காற்றழுத்தவியலின் கீழ் இயங்குகிறது. அதாவது வாயு அல்லது அழுத்தம் நிறைந்த காற்றைப் பயன்படுத்துவதன் மூலம் இயக்கப்படுகிறது. இந்த செயல்பாட்டில் கனரக மின்னணு உபகரணங்கள் பயன்படுத்த கூடாது. ஏனெனில் அவையள் கழிவுநீர் தொட்டிக்குள் இருந்து வெளிப்படும் வாயுக்களின் விளைவாக வெடிப்புகளை நிகழ்த்தும் ஆபத்துகள் ஏற்படலாம்.

இதுவரை நிகழ்ந்த இறப்புகள்

இதுவரை நிகழ்ந்த இறப்புகள்

கழிவுநீரை சுத்தம் செய்யும் பணியின்கீழ், கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் மொத்தம் 1,670 பேர் இந்தியாவில் இறந்துள்ளனர்.இந்த இறப்பு விகிதத்தை 'பென்டிக்யூட்' போன்ற பல படைப்புகள் குறைக்கும், கடைசியில் ஒன்றுமில்லாமல் ஆகும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

How To Increase the Speed of your Laptop (TAMIL)
கேரள அரசு அங்கீராதித்துள்ளது

கேரள அரசு அங்கீராதித்துள்ளது

பல உயிர்களை காப்பாற்றும் நோக்கத்தின் கீழ் உருவான இந்த கண்டுபிடிப்பை கேரள அரசு அங்கீராதித்துள்ளது என்பதும், பொங்கல் விழாவிற்கு முன்னதாகவே இந்த ரோபோவின் சோதனையை கேரளா நீர் ஆணையம் நிகழ்த்தியது என்பதும் கூடுதல் நற்செய்தி. மேலும் பல தொழில்நுட்ப செய்திகளுக்கு தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
Robots Will Clean Sewage Instead Of Men In Kerala, Something That Rest Of India Must Follow. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X