பாலியல் குற்றங்களை தடுக்க உதவும் "செக்ஸ் ரோபோட்"கள்.! அனுமதிக்குமா இந்தியா?
உலக நாடுகளில் பெண்களுக்கான பாதுகாப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறதென்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே, பெண்களுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டிய ஆண்களினால் தான் இப்பொழுது அவர்களுக்குப் பாதுகாப்பில்லை எ
உலக நாடுகளில் பெண்களுக்கான பாதுகாப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறதென்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே, பெண்களுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டிய ஆண்களினால் தான் இப்பொழுது அவர்களுக்குப் பாதுகாப்பில்லை என்பது கொடுமை.
பெண்களுக்கு பாலியல் கொடுமைகள் நடந்த காலம் மலையேறி, பிஞ்சு குழந்தைகளும் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகும் அவலம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தொடர்ந்து நடைபெறும் இந்தக் கொடுமைக்கு இந்தியா எப்படித் தீர்வு காணப்போகிறது.

பாலியல் குற்றங்கள்
அமெரிக்கா, ஜப்பான் போன்ற அயல் நாடுகளில் செக்ஸ் ரோபோட்களின் பயன்பாட்டிற்கு அந்நாடுகள் அனுமதி வழங்கியுள்ளது. செக்ஸ் ரோபோட்களால், அந்நாடுகளில் நடைபெற்று வந்த பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளதாக அண்மையில் வந்த அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செக்ஸ் அண்ட்ராய்ட்ஸ்
செக்ஸ் ரோபோட்களா.! அப்படி என்றால் என்ன?
குடும்ப வாழ்க்கைக்காகவும், உடலுறவு கொள்வதற்காகவும் பிரத்தியேக செக்ஸ் ரோபோட்களை ரோபோட் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இந்த வகை ரோபோட்களுக்கு "செக்ஸ் அண்ட்ராய்ட்ஸ்" என்ற பெயரையும் விஞ்ஞானிகள் வழங்கியுள்ளனர். ஆண் செக்ஸ் ரோபோட் மற்றும் பெண் செக்ஸ் ரோபோட் என இரண்டு பாலினருக்கும் ஏற்ற வகையில் இந்த ரோபோட்கள் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2025 ஆம் ஆண்டு
பல நாடுகளில் செக்ஸ் டால்ஸ் பயன்படுத்தும் முறை பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்துவருகின்றது. அதனைத் தொடர்ந்து 2025 ஆம் ஆண்டுக்குள் மனிதர்கள் ரோபோக்களுடன் உறவு கொள்ள அதிகம் விரும்புவார்கள் என்றும், விபசார விடுதிகள், கிளப்புகள் போன்ற இடங்களில் நிச்சயம் ரோபோட்களை வைத்து செக்ஸ் பிசினஸ் செய்யும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

கஸ்டமைஸ் ஆப்ஷன்
தற்பொழுது உள்ள அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மனிதருக்கு நிகரான மனிதரைப் போலவே நடந்துகொள்ளும் ரோபோட்களை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் இவற்றின் தோற்றத்தை உங்களுக்குப் பிடித்த விதத்தில் மாற்றிக்கொள்ளும் கஸ்டமைஸ் ஆப்ஷன்களும் வழுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ரோபோட் ஸ்கின் பாகம்
கஸ்டமைஸிங் மாற்றத்திற்காகப் பிரத்தியேக மொபைல் செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது, இதில் உங்கள் ரோபோட் முகம், கூந்தல் மற்றும் மற்ற உறுப்புகளை வடிவமைத்துக்கொள்ள முடியும். நீங்கள் வடிவமைத்த டிசைன்னை ரோபோட் நிறுவனத்தின் வலைத்தளத்தில் ஷேர் செய்து, உங்களின் ரோபோட் ஸ்கின் பாகங்களை ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.ஐ செக்ஸ் ரோபோட்
இந்த செக்ஸ் ரோபோட்கள் ஏ.ஐ சேவையுடன் வருவதால், பயனரின் தேவைகளை அறிந்து நடந்துகொள்ளும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எய்ட்ஸ் மற்றும் பாலின நோய்கள் வராமலும் இவை பாதுகாப்பானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிநாட்டில் அறிமுகமான செக்ஸ் பொம்மைகள் தனிப்பட்ட நபர்களின் இச்சையைத் தீர்த்து வைத்திருக்கிறது, இதனால் அந்நாட்டில் நடைபெற்ற பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளதாக ஆய்வின் மூட்டுகள் தெரிவிக்கின்றது.

விஞ்ஞானிகள் சொல்வது சரியாக இருக்குமா?
இந்தியாவில் செக்ஸ் டாய்ஸ்களுக்கு ஏற்கனவே தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த செக்ஸ் ரோபோட்களை இந்தியா அனுமதிக்குமா என்ற கேள்வியை சிலர் எழுப்பியுள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கான மாற்று வழியாக இந்த செக்ஸ் ரோபோட்கள் இருக்குமென்று விஞ்ஞானிகள் சொல்வது சரியாக இருக்குமா?

பாடிகார்டு ரோபோட்
மனித இனமே அழிய, மனிதனே கண்டுபிடித்த ஒரு அற்புத கண்டுபிடிப்பான ரோபோட்கள் மாறிவிடும் என்று பலதரப்பில் பேசப்பட்டுவந்தாலும். இந்த செக்ஸ் ரோபோட்கள், அழிவை ஏற்படுத்துமா அல்லது நல்ல மாற்றத்தை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். விஞ்ஞானிகள் சொன்ன 2025 மிக அருகில் தான் உள்ளது, பார்க்கலாம் பெண்களின் பாதுகாப்பிற்கு ரோபோட்கள் ஏதேனும் வழி வகுக்குமா என்று. செக்ஸ் ரோபோட்களுக்கு பதிலாக, பெண்களின் பாதுகாவலனாக செயல்படும் பாடிகார்டு ரோபோட்கள் உருவாக்கினால் சிறப்பாக இருக்கும்.

காலக்கொடுமை : இனி நம் மீது நாமே சந்தேகம் கொள்வோம்.!
15,000 அமெரிக்க டாலர்கள் என்ற விலை நிர்ணயம் கொண்டுள்ள ரீயல்டால் (RealDoll) எனப்படும் "அடுத்தகட்ட" செக்ஸ் ரோபோட் ஆனது செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் என்பதை மீறி இந்த செக்ஸ் ரோபோட் மனிதர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளும் திறனும் கொண்டது என்று வெளியான அறிக்கை ஒட்டுமொத்த மனித உறவுகளையும் கேள்விக்கு குறியாக்கி விட்டது என்றே தோன்றுகிறது.
மிகப்பெரிய அளவிலான தொழில்நுட்ப உந்துதலில் செயல்பட்டு கொண்டிருக்கும் நாம் அனைவரும், விரைவில் - எதிர்காலத்தில் தொழிநுட்பம் மூலம் தான் இயக்கப்பட இருக்கிறோம் என்கிறது ஒரு சர்ச்சைக்குரிய ஆய்வு. அதாவது, எதிர்காலத்தில் செக்ஸ் இயந்திரங்கள் தலை தூக்கும் என்கிறது இந்த ஆய்வு..!

புதிய முகம் :
அதாவது, செக்ஸ் இயந்திரங்கள் தான் எதிர்கால பாலியல் தொழிலின் புதிய முகமாக இருக்க முடியும் என்றும், அவ்வாறாக ரோபோட்கள் தான் எதிர்கால பாலியல் தொழிலாளர்களாக செயல்படும் என்கிறது நிகழ்த்தப்பட்ட ஆய்வொன்று..!

குற்ற உணர்ச்சியற்ற :
இதன் மூலம் சட்டப்பூர்வமான பாலியல் தொழில் நடத்தப்படும் நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் சிவப்பு விளக்கு பகுதியில் மரியாதைக்குரிய 'குற்ற உணர்ச்சியற்ற' பாலியல் தொழில் ஆங்கு நடைபெறும் என்றும்வல்லுனர்கள்நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஆய்வு :
2050-ஆம் ஆண்டிற்குள், ஆம்ஸ்டர்டாம் சிவப்பு விளக்கு பகுதிகள் முழுக்க ரோபோக்கள் தான் பாலியல் தொழிலாளர்களாக ஈடுபடுத்தப்படும் என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

இயன் யோமன் மற்றும் மைக்கேல் மார்ஸ் :
இந்த ஆய்வை நிகழ்த்தியது வெலிங்டன் பல்கலைக்கழகத்தின் எதிர்காலவியலாளர் ஆன இயன் யோமன் மற்றும் பாலியல் ஆய்வாளரான மைக்கேல் மார்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

யுப்-யும் பகுதி :
2008-ஆம் ஆண்டு மூடப்பட்ட ஆம்ஸ்டர்டாமின் முந்தைய சிவப்பு விளக்கு பகுதியான யுப்-யும் பகுதியை வைத்து தான் இந்த ஆய்விற்கான அனுமானங்களானது உருவாக்கம் பெற்றுள்ளது.

உரிமம் :
ஆவண தகவலின் கீழ், நகர சபை உரிமம் பெற்று இயங்கிய மூடப்பட்ட யுப்-யும் சிவப்பு பகுதிக்கான நுழைவு கட்டணமே 10,000 டாலர்களாம்.

கடத்தல் :
இதனையெல்லாம் ஆய்விற்க்கு உட்படுத்தி வருங்கால பாலியல் தொழில் எப்படி அமைய வேண்டும் என்பதயும், 2040-களில் உள்ள பாலியல் தொழிலுக்காக நிகழ்த்தப்படும் கடத்தல்கள் ஆகியவைகளை மனதிற்க் கொண்டு இயன் யோமன்மற்றும் மைக்கேல் மார்ஸ் இந்த ஆய்வை நிகழ்த்தியுள்ளனர்.

சுகாதார பாதிப்பு :
உடன் வளர்ந்து வரும் சுகாதார பாதிப்புகளான பால்வினை நோய்கள், முக்கியமாக எய்ட்ஸ் போன்ற நோய்கள் போன்றவைகளை பற்றியும் இந்த ஆய்வில் கணிப்புகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

உடல் வடிவங்கள் :
பாலியல் தொழிலில் மனிதர்களை ஈடுபடுத்தாமல் இருக்க உருவாக்கப்படும் ரோபோட்க்களில் அனைத்து இனங்கள், உடல் வடிவங்கள், வயது , மொழிகள் மற்றும் பாலியல் அம்சங்கள் இருக்க வேண்டும் என்று பாலியல் தொழிலாளர்கள் கருத்துக் கூறியுள்ளனர்.

உத்தரவாதம் :
உடன் ஆய்வின்கீழ் செக்ஸ் மெஷின்கள் / ரோபோ பாலியல் தொழிலாளர்கள் - நுகர்வோருக்கு எந்த விதமான பாலியல் நோய்கள் பரவாத வண்ணம் உத்தரவாதம் நிறைந்ததாக இருக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது.


Click it and Unblock the Notifications