கில்லர் ரோபோட் போர்படையை உருவாக்கும் வடகொரியா.! ஆபத்தை அறிந்தே முயற்சி.!

|

போர்க்களத்தில் எதிரிகளை தொம்சம் செய்ய ரோபோட் சோல்ஜர்கள் மற்றும் ரோபோட் விலங்குகளை உருவாக்கப் போவதாகக் தென் கொரியா தெரிவித்துள்ளது.

தென் கொரியா, 2024 ஆம் ஆண்டில் தனது இராணுவ படையில் ரோபோட் சோல்ஜர்களை தயார் செய்திருக்கும் என்று அறிவித்துள்ளது.

பல ஆயிரம் கோடி முதலீடு

பல ஆயிரம் கோடி முதலீடு

அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகள் முன்பே இந்த திட்டத்தைக் கையில் எடுத்து, பல ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது தென் கொரியா அறிவித்துள்ள இந்த அறிவிப்பு அனைத்து நாட்டவரையும் பீதி அடைய வைத்துள்ளது.

பறவைகள், பாம்புகள், பூச்சி போன்ற ரோபோட்கள்

பறவைகள், பாம்புகள், பூச்சி போன்ற ரோபோட்கள்

பறவைகள், பாம்புகள், பூச்சிகள் மற்றும் கடல் இனங்கள் அனைத்தும் இராணுவ ரோபோக்களை உருவாக்க முக்கிய உத்வேகமாக இருக்கின்றன. பயோமெமிட்டிக்ஸ் துறையின் உதவியுடன் பல்வேறு விதமான இராணுவ ரோபோட்களை தயாரிக்க தென் கொரியா திட்டமிட்டுள்ளது.

 மனிதர்கள் போல உள்ள சிப்பாய் ரோபோட்

மனிதர்கள் போல உள்ள சிப்பாய் ரோபோட்

தென் கொரியா தயாரிக்க உள்ள இராணுவ ரோபோட்கள் விலங்குகள் போல் மட்டும் இல்லாமல், மனிதர்கள் போல உள்ள சிப்பாய் ரோபோட்களையும் தயாரிக்க முடிவெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிப்பாய் ரோபோட்கள் தயாரிப்பதினால் ஏற்படும் ஆபத்தை கொரிய அறிந்துள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இயற்கை பேரழிவு உதவிக்கு ரோபோட்கள்

இயற்கை பேரழிவு உதவிக்கு ரோபோட்கள்

பறவை மற்றும் கடல் பயன் ரோபோட்கள் கண்காணிப்பிற்காகப் பயன்படுத்தப்படும் என்றும், பாம்பு போன்ற ரோபோட்கள் மனிதர்கள் செல்ல முடியாத குறுகிய இடம் மற்றும் இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்படும் பகுதிகளில் அணுகுவதற்குப் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆபத்தான இராணுவ சிப்பாய் ரோபோட்கள்

ஆபத்தான இராணுவ சிப்பாய் ரோபோட்கள்

மனிதர்கள் போன்ற இராணுவ சிப்பாய் ரோபோட்கள் ஆபத்தானவை என்பதைப் பல விஞ்ஞானிகள் தெரிவித்து வந்துள்ளனர், இருப்பினும் வடகொரியா சிப்பாய் ரோபோட்களை தயாரிக்க முடிவெடுத்துள்ளது. வில்ஸ் ஸ்மித் நடித்து, 2004 ஆம் ஆண்டு வெளியான ஐ-ரோபோட் திரைப்படத்தின் கதை போல் அசம்பாவிதம் ஏதேனும் நிகழ்ந்து மனித இனம் அழியாமல் இருந்தால் நன்று.

Most Read Articles
Best Mobiles in India

English summary
robots inspired by animals to be foot soldiers in south koreas military by 2024 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X