அணு ஆயுதத்தை விட மோசமானது செயற்கை நுண்ணறிவு ரோபோட்கள்.! திடுக்கிடும் தகவல்.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் திரைப்படத்தில் சிட்டி ரோபோட்டை ராணுவ பரிசோதைக்கு ஒப்புதல் வாங்க வசீகரன் கூட்டி செல்லும் காட்சியை யாராலும் மறக்க முடியாது.

|

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் திரைப்படத்தில் சிட்டி ரோபோட்டை ராணுவ பரிசோதைக்கு ஒப்புதல் வாங்க வசீகரன் கூட்டி செல்லும் காட்சியை யாராலும் மறக்க முடியாது. வில்லன் சிட்டிக்கு முரண்பாடான கட்டளைகளை கொடுத்துக் கத்தியால் வசீகரனை குத்தும்போழுது நாம் அனைவரும் சீட்டின் நுனிக்கே வந்திருப்போம்.

இனி வரும் காலங்களில் இது நிஜமாகப் போகிறது என்ற செய்தி அனைவரையும் திடுக்கிட வைத்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த சில ஆராய்ச்சியாளர்கள் இதற்கு ஏதிராக கருத்துக்களைப் பதிவு செய்த வண்ணம் உள்ளனர்.

மனித உயிருக்கு ஆபத்து

மனித உயிருக்கு ஆபத்து

ஒக்லஹோமா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சுபாஷ் கக் கூறுகையில் " ரோபோட்களுக்கு தவறான கோடிங் கொடுப்பதன் மூலம் அவற்றை மனிதர்களுக்கு எதிராகச் செயல்படுத்த முடியும். இதனால் மனித உயிருக்கு ஆபத்து நேர வாய்ப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

கொலை செய்யும் கொடூரமான ரோபோட்

கொலை செய்யும் கொடூரமான ரோபோட்

அத்துடன் தவறான கோடிங்கினால் ரோபோட்கள் தீவிரவாதத்திற்கு நிகராக உருமாறி அனைவரின் இயல்பு வாழ்க்கை முறையைப் பாதிக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ரோபோட்டிற்கு கொடுக்கும் கோடிங்கில் ஒரு சிறிய பக் செலுத்தி, கட்டளைக்குக் கட்டுப்பட்டு இருக்கும் சாதுவான ரோபோட்டை கூட கொலை செய்யும் கொடூரமான ரோபோட்டாக எளிதில் மாற்றிவிடலாம் இன்றி அவர் தெரிவித்திருக்கிறார்.

அழிவிற்கான ரோபோட்

அழிவிற்கான ரோபோட்

இத்துடன் தவறான கோடிங் கொடுக்க பட ரோபோட் அழிவிற்கான ஒரு ஆயுதமாக மாற அதிகம் வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். இன்றைய கலக்கட்டத்தில் இது நமக்குச் சிறிதாக தெரிந்தாலும் எதிர்காலத்தில் இது மிகவும் கவனிக்க படவேண்டிய விஷயமாகும் என்று டாக்டர் கக் கூறியிருக்கிறார்.

எலன் மஸ்க் எச்சரிக்கை

எலன் மஸ்க் எச்சரிக்கை

இதே போல் முன்னணி தொழிலதிபரான எலன் மஸ்கும் செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோட்களால் ஏற்படவிருக்கும் பிரச்சினைகளை பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளார். இவர் செயற்கை நுண்ணறிவு ரோபோட்களை அணு ஆயுதத்தை விட ஆபத்தானது என்றும் அவற்றை ஆதரிப்பது பிசாசை வீட்டிற்கு அழைப்பதற்குச் சமம் என்றும் அவர் விழா ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

 800 மில்லியன் ரோபோட்

800 மில்லியன் ரோபோட்

மேலும் ரோபோட்களின் ஆக்கிரமிப்பினால் மனிதர்களுக்கு வேலைவாய்ப்பு குறைய வாய்ப்புள்ளதாகவும் இது மனிதர்களைக் காரணமில்லாத பல மனவழுத்தத்திற்கு கொண்டு செல்லும் என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த ஆண்டு வெளியான ஒரு பதிவில், 2030ல் 800 மில்லியன் வேலையாட்களுக்குப் பதிலாக இயந்திரங்கள் மாட்டப்பட்டிருக்கும் என்று ஒரு கருத்து கணிப்பு தெரிவித்திருக்கிறது.

அடிமை மக்கள்

அடிமை மக்கள்

இது நடந்தால் மக்கள் மிகவும் அவதிப்படுவர். மேலும் மனஅழுத்ததால் அவர்கள் தீய பழக்கத்திற்கும் போதைப்பழக்கத்திற்கும் அடிமையாகிப் போகும் வாய்ப்பு இருப்பதாகவும் டாக்டர் காக் தெரிவித்திருக்கிறார்.

ஆபத்தை தவிர நல்லது எதையும் செய்யாது

ஆபத்தை தவிர நல்லது எதையும் செய்யாது

இந்தச் செயற்கை நுண்ணறிவு ரோபோட்கள், மக்களுக்குப் பல இன்னல்களையும் ஆபத்தையும் மட்டுமே தருமே தவிர நல்லது எதையும் செய்யாது என்பதே பல அறிஞர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக உள்ளது.

Best Mobiles in India

English summary
Robots could become radicalised and commit MASS MURDER if they are badly coded : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X