ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி மூலம் பிரபஞ்சத்தையே பூதக்கண்ணாடியாக மாற்றி ஆராய்ந்த விஞ்ஞானிகள்!

|

யு.சி.எல்.ஏ மற்றும் நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தின் ஆராய்ச்சியாளர்கள் குழு, இதுவரை கண்டுபிடித்ததிலேயே இருண்ட பொருளின் மிகச்சிறிய அளவைக் கண்டறிந்துள்ளது. ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியிலிருந்து கிடைத்த புதிய தரவுகளின் மூலம் அடையாளம் காணப்பட்ட குவாசர்களுக்கு அருகில் மெதுவாக இவை நகர்கின்றன.

ஹப்பிள் தொலைநோக்கி

ஹப்பிள் தொலைநோக்கி

இருண்ட பொருள் என்ன என்பதைப் புரிந்துகொள்வதில் இந்த ஆராய்ச்சி ஒரு குறிப்பிடத்தக்க படியைக் குறிக்கிறது. இது முன்னர் கவனித்ததை விட சிறியதாக 1 / 10,000 வது மற்றும் 1 / 100,000 வது க்கு இடையில் எவ்வாறு நடந்துகொள்கிறது என்பதைப் பற்றி புதிய தரவுகள் தெரிவிக்கின்றன . "ஏறக்குறைய 30 ஆண்டுகால செயல்பாட்டிற்குப் பிறகு, ஹப்பிள் தொலைநோக்கி ஏவப்பட்டபோது நாங்கள் கனவு கூட காணாத, அடிப்படை இயற்பியல் மற்றும் பிரபஞ்சத்தின் தன்மை ஆகியவற்றில் அதிநவீன மாற்றங்களுக்கு வித்திட்டுள்ளது. ' என்கிறார் யு.சி.எல்.ஏவின் டாம்மாசோ ட்ரூ.

இருண்ட பொருள் என்பது என்ன

இருண்ட பொருள் என்பது என்ன

இருண்ட பொருள் என்பது பிரபஞ்சத்தின் அடிப்படை துகள்களில் ஒன்றாக கருதப்படுகிறது மற்றும் விஞ்ஞானிகள் அதைப் பற்றி மேலும் அறிய ஆர்வமாக உள்ளனர். இது பிரபஞ்சம் எவ்வாறு உருவானது என்பதைப் பற்றி நன்கு புரிந்துகொள்ள வழிவகுக்கும். ஆயினும்கூட, இந்த துகள்களில் தனித்துவமான பண்புகள் இருப்பதால், அது ஒளியை வெளியிடுவதில்லை அல்லது பிரதிபலிக்காது மற்றும் நேரடியாகக் கவனிக்க இயலாது. விஞ்ஞானிகள் அதற்கு பதிலாக நட்சத்திரங்கள் அல்லது முழு விண்மீன் திரள்கள் போன்ற பெரிய ஆற்றல் உமிழும் பொருட்களில் இருந்து ஒளியின் ஈர்ப்பு விளைவுகளை கணக்கிடுவதன் மூலம் அதன் இருப்பை ஊகிக்க வேண்டியிருந்தது.
முன்னதாக, விஞ்ஞானிகள் சிறிய தொகுதிகளில் இருண்ட பொருள் வெறுமனே பிரபஞ்சத்தின் வழியாக மிக வேகமாக கவனிக்க முடியாத வேகத்தில் செல்லும் என்று ஊகித்திருந்தனர். அவற்றை ‘வெப்பமான' இருண்ட பொருள் என்று அழைத்தனர்.

குளிர் இருண்ட பொருள்

குளிர் இருண்ட பொருள்

பிரபஞ்சத்தில் மெதுவாக நகரும் ‘குளிர் இருண்ட பொருள்' இருக்கலாம் என யு.சி.எல்.ஏ இன் ஆராய்ச்சியாளர்களின் குழுவுக்கு மற்றொரு யோசனையும் இருந்தது. அவர்களின் இந்த யோசனையை சோதிக்க, வேறு யாரும் இதுவரை செய்யாத ஒன்றை முயற்சி செய்ய முடிவு செய்தனர். எட்டு வெவ்வேறு குவாசர்களைச் சுற்றியுள்ள துகள்களிலிருந்து வெளிப்படும் ஒளியின் அளவீடுகளை சேகரித்தனர். குவாசர்கள் என்பது கருந்துளைகளைச் சுற்றியுள்ள செயல்பாட்டில் உள்ள பகுதிகள் ஆகும். அவை அதிக அளவு ஒளி மற்றும் ஆற்றலை வெளியிடுகின்றன. எந்தவொரு ஈர்ப்பு குறுக்கீடும் இல்லாமல் ஒளி எவ்வாறு பயணிக்க வேண்டும் என்பதுடன், ஒளியின் உண்மையான பாதைகளின் கணினி மாதிரிகளுடன் ஆராய்ச்சியாளர்கள் ஒப்பிட்டனர்.

விண்மீன் திரள்கள்

விண்மீன் திரள்கள்

"இந்த எட்டு விண்மீன் திரள்களில் ஒவ்வொன்றும் ஒரு மாபெரும் பூதக்கண்ணாடி என்று கற்பனை செய்து பாருங்கள். சிறிய இருண்ட பொருள்களின் கிளம்புகள் பூதக்கண்ணாடியில் சிறிய விரிசல்களாக செயல்படுகின்றன. கண்ணாடி சீராக இருக்கிறதா என்று நீங்கள் எதிர்பார்ப்பதை ஒப்பிடும்போது நான்கு குவாசர் படங்களின் பிரகாசத்தையும் நிலையையும் மாற்றுகிறது. 'என்று யு.சி.எல்.ஏவின் டேனியல் கில்மேன் கூறினார். ஆராய்ச்சியாளர்கள் ஹப்பிளின் ஒளி அளவீடுகளில் கணிசமான குறுக்கீட்டை கண்டறிந்தனர்.இது மெதுவாக நகரும் இருண்ட பொருளின் சிறிய ‘கிளம்புகள்' இருப்பதைக் குறிக்கிறது.

நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன்

நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன்

'வானியலாளர்கள் இதற்கு முன்னர் இருண்ட பொருளின் கோட்பாடுகளின் பிற அவதானிப்பு சோதனைகளை மேற்கொண்டனர். ஆனால் குளிர்ந்த இருண்ட பொருளின் சிறிய தொகுப்புகள் இருப்பதற்கு இன்னும் வலுவான சான்றுகளை எங்களுடைய ஆய்வு அளிக்கிறது என்று நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தின் அனா நீரன்பெர்க் கூறினார்.

தத்துவார்த்த கணிப்புகள்

தத்துவார்த்த கணிப்புகள்

'சமீபத்திய தத்துவார்த்த கணிப்புகள், புள்ளிவிவர கருவிகள் மற்றும் புதிய ஹப்பிள் அவதானிப்புகள் ஆகியவற்றை இணைப்பதன் மூலம், முன்பு இருந்ததை விட இப்போது மிகவும் வலுவான ஆய்வு முடிவை கொண்டுள்ளோம்' என்கிறார் அவர்.

Best Mobiles in India

English summary
Researchers turn the galaxy into a giant 'magnifying glass' with the help of the Hubble Space Telescope to capture evidence of the smallest 'clumps' of dark matter ever recorded

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X