கடலுக்கடியில் ஒளிரும் பச்சை நுண்ணுயிரிகள்.. செவ்வாயில் இதுபோல உயிர்கள் இருக்க சாத்தியமா?

|

கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல் dailymail.co.uk என்ற வலைதளத்தில் பெறப்பட்டது என கூறவிரும்புகிறோம். ஒளிரும் பச்சை நுண்ணுயிரிகளால் செவ்வாய் கிரகமானது நிரம்பி இருக்கக்கூடும் என்று , கடல் அடிதளத்திற்கு அடியில் உள்ள எரிமலை பாறைகளில் வாழும் பாக்டீரியாக்களை கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அடர்த்தியாக நிரம்பிய

செவ்வாய் கிரகத்தை போல அடர்த்தியாக நிரம்பிய கூட்டங்களாக பூமியின் பெருங்கடல்களுக்கு கீழே ஆழமான பாறைகளில் பலவகையான பாக்டீரியாக்கள் செழித்து வளர்ந்துள்ளன.

செல் உயிரினங்களைக் கண்டுபிடித்தனர்

செல் உயிரினங்களைக் கண்டுபிடித்தனர்

டோக்கியோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 2010 ஆம் ஆண்டில் தென் பசிபிக் பெருங்கடலில் காணப்பட்ட பாறைகளைப் பற்றி ஒரு தசாப்தம் ஆராய்ந்ந பின்னர் ஒற்றை செல் உயிரினங்களைக் கண்டுபிடித்தனர்.

EMI தள்ளிப்போட OTP சொல்லுங்கோ சார்., இந்தா ஆரம்பிச்சிட்டாங்க: உஷார் ஆகிக்கோங்க!EMI தள்ளிப்போட OTP சொல்லுங்கோ சார்., இந்தா ஆரம்பிச்சிட்டாங்க: உஷார் ஆகிக்கோங்க!

400 அடி ஆழத்தில் சிறிய இரும்புச்சத்து

கடந்த ஆண்டு நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் செவ்வாய் கிரகத்தில் களிமண் நிறைந்த பகுதிகளை அடையாளம் கண்டது. டோக்கியோ ஆய்வுக் குழு இது பச்சை பாக்டீரியாவை வைத்திருக்கும் தாதுக்களுக்கு ஒத்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறது.

யோஹே சுசுகி தலைமையிலான ஆய்வுக்குழு, கடலின் அடிப்பரப்பிற்கு 400 அடி ஆழத்தில் சிறிய இரும்புச்சத்து நிறைந்த களிமண் நரம்புகளுக்குள் 'பளபளப்பான பச்சை' நுண்ணுயிரிகள் இருப்பதை கண்டுபிடித்துள்ளதாக கூறுகின்றனர்.

ரோவர் பணியின்

உயிரினங்களின் பசுமையான குளோபுல்களைக் கண்டுபிடிக்க, சுசுகி பாறை மாதிரிகளை மிக மெல்லியதாக நறுக்கி, அவற்றில் நுண்ணோக்கின் கீழ் டி.என்.ஏவை முன்னிலைப்படுத்தும் ஒரு சாயத்தை பூச வேண்டும்.

இந்த குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பைத் தொடர்ந்து நாசா ஏற்கனவே அவர்களை இந்த ஆண்டு தொடங்கும் மார்ஸ் பர்சீவரென்ஸ் ரோவர் பணியின் ஒரு பகுதியாக இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தில்

"செவ்வாய் கிரகத்தில் உயிர்களை கண்டுபிடிக்க முடியும் என்று இப்போது நான் அதிகமாக எதிர்பார்க்கிறேன்.அப்படி இல்லையென்றால், டெக்டோனிக்ஸ் தட்டு போன்ற செவ்வாய் கிரகத்திற்கு இல்லாத வேறு சில செயல்முறைகளை உயிரினங்கள் நம்பியிருக்க வேண்டும்.' என்கிறார் சுசுகி.

104 மில்லியன் ஆண்டுகள் பழமையான பால்சாமிக் எரிமலை மாதிரிகளுக்குள் அடர்த்தியான கூட்டங்களில் வாழும் பாக்டீரியாக்களை அவரது குழு அடையாளம் கண்டது.
மனித தலைமுடியை விட மெல்லிய சிறிய பிளவுகள், டிரில்லியன் கணக்கான பாக்டீரியாக்களின் தாயகமாக இருந்தன.இவை கடல் தளத்திலிருந்து 328 அடிக்கு கீழே ஊட்டச்சத்துக்களால் நிறைந்து காணப்பட்டது.

0.04 அங்குலங்களுக்கும் கு

0.04 அங்குலங்களுக்கும் குறைவான அளவுள்ள விரிசல்கள் மில்லியன்கணக்கான ஆண்டுகளாக மட்பாண்டங்களை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் அதே களிமண் தாதுக்களால் நிரப்பப்படுகின்றன.எப்படியோ பாக்டீரியாக்கள் அவற்றில் வழியை கண்டுபிடித்து நுழைந்து பெருகுகின்றன.

'இந்த விரிசல்கள் உயிரினங்களுக்கு மிகவும் நட்பான இடம் . களிமண் தாதுக்கள் பூமியில் ஒரு மாயப் பொருள் போன்றவை . நீங்கள் களிமண் தாதுக்களைக் கண்டுபிடிக்க முடிந்தால், அவற்றில் வாழும் நுண்ணுயிரிகளை நீங்கள் எப்போதும் காணலாம்.' என்று சுசுகி கூறுகிறார்.

.

அவர்கள் கடல்

ஆழ்கடல் பாறைகளில் பாக்டீரியாவைத் தேடுவது 2010 ஆம் ஆண்டில் பசிபிக் பெருங்கடலுக்கான ஒரு திட்டத்துடன் தொடங்கியது. அப்போது சுசுகி மாதிரிகளுக்காக கடல் மேற்பரப்பில் துளையிடும் குழுவில் சேர்ந்தார்.


அவர்கள் கடல் தளத்தை அடைய 3.5 மைல் நீளமுள்ள ஒரு உலோகக் குழாயைப் பயன்படுத்தினர். பின்னர் அவர்கள் கோர் மாதிரிகளை வெளியேற்றுவதற்காக கடலுக்கு அடியில் 410 அடி துளைத்தனர். இதில் மண் வண்டல் மற்றும் 131 அடி திட பாறை போன்றவற்றில் பெரும்பாலான விஞ்ஞானிகள் பூமியில் உயிரினங்களின் தீவிர உதாரணங்களைத் தேடுகிறார்கள்.

Best Mobiles in India

English summary
Researchers found microbes in Pacific Ocean may lead to signs of life on mars: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X