பூமியிலிருந்து நிலவிற்கு லிப்ட்! விண்வெளி பயணத்தை எளிதாக்க விஞ்ஞானிகள் திட்டம்.! நடக்குமா குருநாதா?

|

நம் அனைவருக்கும் விண்வெளிக்கு செல்ல வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். ஆனால் அதி சக்திவாய்ந்த ராக்கெட்களை ஏவுவதற்கான செலவுகள் மிக அதிகம். இதன் காரணமாக விண்வெளி பயணம் என்பது மிக விலையுயர்ந்த ஒன்றாகவே உள்ளது.

விண்வெளி மின்தூக்கி

இருப்பினும் விஞ்ஞானிகள் தற்போது "விண்வெளி மின்தூக்கி" (Space Elevator) ஒன்றை கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இதன்மூலம் செலவுகளை குறைப்பதுடன் விண்வெளி பயணத்தை மலிவானதாக்க முடியும் என நம்புகின்றனர்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்

ஆம். இது பைத்தியகாரத்தனமாக தெரிந்தாலும் கோட்பாடுகளின் படி செய்துமுடிக்கக்கூடியதே. கொலம்பியா பல்கலைக்கழகம் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் ArXic நிகழ்வில் வெளியிடப்பட்ட ஆய்வுக்கட்டுரையில் விவரித்துள்ளபடி, ஸ்பேஸ்லைன் எனப்படும் இதன் ஒரு முனையில் நிலவும், மற்றொரு முனை பூமியைச் சுற்றியுள்ள ஜியோஸ்டேசனரி சுற்றுவட்டப்பாதையிலும் இருக்கும். இந்த பகுதியில் இருந்து தான் விண்வெளிவீரர்கள் தங்களது நிலவு பயணத்தை துவங்கலாம்.

இந்த கருத்துருவின் ஆதாரங்களின் படி, தற்போதுள்ள பொருட்களை கொண்டே இந்த ஸ்பேஸ்லைன்-ஐ வடிவமைக்கமுடியும் என்கின்றனர்.

சத்தமின்றி கூகுள் மேப்ஸ் கொண்டுவந்த புதிய அப்டேட்: இன்ப அதிர்ச்சியில் மக்கள்.!சத்தமின்றி கூகுள் மேப்ஸ் கொண்டுவந்த புதிய அப்டேட்: இன்ப அதிர்ச்சியில் மக்கள்.!

இது எவ்வாறு இயங்கும்?

பூமியிலிருந்து நிலவிற்கு செல்லும் விண்வெளிவீரர்கள், வளிமண்டலத்தின் வாயிலாக விண்வெளிக்கு அனுப்பப்பட்டு ஸ்பேஸ்லைனின் ஒரு முனையை அடைவார்கள். ஸ்பேஸ்லைனில் உள்ள சூரியசக்திமூலம் இயங்கும் வாகனம் அவர்களை நிலவின் பரப்பிற்கு அழைத்துச்செல்லும். இந்த வாகனம் விண்கலத்தை சுமந்து செல்லும் அளவிற்கு சக்திவாய்ந்ததாகவும், அதேசமயம் நிலவை சென்றடைய தேவையான ஆற்றலை சேமிக்கக்கூடிய வகையிலும் இருக்கும்.

ஸ்பேஸ்லைன் ப்ராஜெக்ட்

ஸ்பேஸ்லைன் ப்ராஜெக்ட்-ல் பணியாற்றிய கொலம்பியா பல்கலைகழக மாணவரான ஜெப்யர் பெனோரோ கூறுகையில், " முந்தைய கால ரயில்பாதை போன்ற கட்டமைப்பான இது, மக்கள் மற்றும் சரக்குகளை விண்வெளிக்கு அனுப்பும் பயணத்தை மேலும் எளிதானதாகவும், திறனுடையதாகவும் மாற்றும் " என்கிறார்.

உலகின் முதல் 108 எம்.பி கேமரா ஸ்மார்ட்போன்! அறிமுக தேதி லீக்!உலகின் முதல் 108 எம்.பி கேமரா ஸ்மார்ட்போன்! அறிமுக தேதி லீக்!

ஏன் மின்தூக்கி பூமியிருந்து துவங்காது?

இந்த மின்தூக்கியை ஏன் பூமியிலிருந்து துவங்கும் படி கட்டமைக்க முடியாது என்று நீங்கள் ஆச்சர்யப்படுவீர்கள். ஏனெனில் பூமியின் வலுவான புவியீர்ப்புவிசை காரணமாக இதற்கு அழுத்தத்தை ஏற்படுத்தி சிதைக்கும் வாய்ப்புள்ளது. மேலும் இது ஸ்பேஸ்லைனின் மொத்த கட்டைமைப்பையும் பாதிக்கும். இதுபோன்ற பிரச்சனைகள் புவிசுற்றுவட்டப்பாதையில் இல்லை.

கார்பன் நோனோ டியூப்கள்

இந்த ஸ்பேஸ்லைன் இரு முனைகளில் குறுகலாகவும், நடுப்பகுதியில் தடிமனாகவும் இருந்தால் அதன் வடிவமைப்பிற்கு வலுவூட்டும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இதற்கு கார்பன் நோனோ டியூப்கள் சிறந்த தயாரிப்பு பொருளாக இருக்கும் என்றாலும், பெருமளவில் அதன் உற்பத்தி இன்னும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த விண்வெளி மின்தூக்கிகள் என்ற கருத்துரு உண்மையாவதற்கு நீண்ட காலம் இருந்தாலும் , இது ஒரு சிறந்த யோசனை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

Best Mobiles in India

English summary
Researchers Eye Possibilities To Build Space Travel Elevator Connecting Earth And Moon: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X