Just In
- 42 min ago
முரட்டுத்தனமான ஸ்மார்ட்வாட்ச் மாடலை கம்மி விலையில் இறக்கிவிட்ட Noise.! என்னென்ன அம்சங்கள்?
- 2 hrs ago
ஒட்டுமொத்த பட்ஜெட் போன்களையும் பேக்கில் ஓடவிடப்போகும் OnePlus Nord 3.! இது தான் காரணமா?
- 3 hrs ago
பட்ஜெட் விலை Poco எக்ஸ்5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி வெளியானது.! ரெடியா இருங்க.!
- 4 hrs ago
பிரபஞ்சத்தின் மறுபக்கத்தில் இருந்து வந்த ரேடியோ சிக்னல்.! திறமையாகக் கண்டுபிடித்த இந்தியர்கள்.!
Don't Miss
- News
அறுசுவை சோறு போடக்கூடியவர் அமைச்சர் நேரு! எப்போதும் நான்கு கால் பாய்ச்சல் தான்! ஸ்டாலின் புகழாரம்!
- Movies
பக்கத்து வீட்டு பிரச்சனை.. பாஜகவில் சேரப்போகிறேன்.. அதிரடி முடிவெடுத்த தாடி பாலாஜி மனைவி !
- Finance
கிராமமும், விவசாயமும் ரொம்ப முக்கியம்.. பொருளாதார ஆய்வறிக்கையில் அரசுக்கு முக்கியக் கோரிக்கை..!
- Automobiles
போதும் போதும்னு சொல்ற அளவுக்கு மைலேஜ் தரும்! புதிய காரின் வருகையால் மாருதி ஷோரூம்களுக்கு மக்கள் படையெடுப்பு!
- Sports
அடி தூள்.. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்.. இந்தியாவுக்காக பிசிசிஐ செய்த ஸ்பெஷல் ஏற்பாடு.. வீரர்கள் குஷி!
- Lifestyle
இந்த 4 அறிகுறிகள் உங்களுக்கு இருந்தா? இரத்த சர்க்கரையால் தீவிரமான நரம்பு பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்காம்!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பூமியில் விழுந்த விண்கல்.. 2 புது ஏலியன் தாதுக்கள்.! ஆடிப்போன விஞ்ஞானிகள்.! 3வது வேற இருக்கா?
சோமாலியாவில் (Somalia) கண்டுபிடிக்கப்பட்ட "15 டன் எடையுள்ள விண்கல்"-லில் இருந்து நமது கிரகத்தில் இதுவரை கண்டிராத இரண்டு ஏலியன் கனிமங்களை (2 new alien minerals) ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆம், இதுவரை பூமியில் கண்டறியப்படாத - 2 வெவ்வேறு விதமான களிமங்களை இந்த விண்கல் (meteorite) கொண்டுள்ளது என்பதை ஆராய்ச்சியாளர்கள் இப்போது கண்டுபிடித்துள்ளனர்.

விண்கல்லில் அடையாளம் தெரியாத 2 ஏலியன் கனிமங்களா?
இதில் சுவாரசியம் என்னவென்றால், இந்த விண்கல்லில் நாம் எதிர்பார்த்திடாத மற்றொரு கனிமமும் ஒளிந்திருக்க வாய்ப்புள்ளது என்று விஞ்ஞானிகள் சந்தேகித்துள்ளனர்.
ஆம், மூன்றாவதாக ஒரு ஏலியன் கனிமம் இந்த விண்கல்லில் இருந்து கிடைக்கவும் வாய்ப்புள்ளது என்று அவர்கள் கூறியுள்ளனர்.
அடையாளம் கண்டுபிடிக்கப்பட்ட ஏலியன் கனிமங்கள் எத்தகையது? இதை எப்படி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர் என்று பார்க்கலாம்.

15 டன் எடை கொண்ட மிகப்பெரிய விண்கல்.!
15 டன் எடை கொண்ட மிகப்பெரிய விண்கல்லில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட 70 கிராம் துண்டை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்த போது, அதில் இருக்கும் தாதுக்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.
இது ஆல்பர்ட்டா பல்கலைக்கழகத்தின் விண்கல் சேகரிப்புக்கு வகைப்படுத்தப்பட்டது. உண்மையில், இந்த பரிசீலனையில் இருக்கக்கூடிய மூன்றாவது கனிமமும் ஏற்கனவே இருப்பதாகத் தோன்றுகிறது.

பெரிய பகுதியில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட சிறிய துண்டில்..?
இந்த பல்கலைக்கழகத்திற்குக் கிடைத்த ஒரு சிறிய துண்டில் இருந்து இந்த 2 புதிய கனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இன்னும் கூடுதல் மாதிரிகள் இவர்களுக்கு கிடைத்தால், இன்னும் அதிகமான பொருட்களைக் கண்டுபிடிக்க முடியும் என்று பூமி மற்றும் வளிமண்டல அறிவியல் துறையின் பேராசிரியரும், ஆல்பர்ட்டா பல்கலைக்கழகத்தின் விண்கல் சேகரிப்பின் கண்காணிப்பாளருமான கிறிஸ் ஹெர்ட் கூறுகிறார்.

விஞ்ஞானிகள் இந்த 2 தாதுகளுக்கு என்ன பெயர் வைத்துள்ளனர் தெரியுமா?
புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு தாதுகளுக்கு ஆராய்ச்சியாளர்கள் பெயரிட்டுள்ளனர். இதில் ஒன்றிற்கு 'எலாலைட் (elaliite)' என்று பெயர் சூட்டியுள்ளனர்.
இது சோமாலியாவின் ஹைரான் பகுதியில் உள்ள எல் அலி நகரில் கண்டுபிடிக்கப்பட்ட விண்கல் என்பதனால், இதன் பெயரில் எல் அலியின் பெயர் மறைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மற்றொரு கனிமத்திற்கு எல்கிஸ்டான்டோனைட் (elkinstantonite) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பல ஆராய்ச்சியாளர்களுடன் சேர்ந்து நடத்தப்பட்ட ஆராய்ச்சி.!
இது ASU இன்டர்பிளானட்டரி முன்முயற்சியின் துணைத் தலைவர் லிண்டி எல்கின்ஸ்-டான்டன் உடன் அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தின் பூமி மற்றும் விண்வெளி ஆய்வுப் பள்ளியில் பேராசிரியர் பெயரை தொடர்ந்து பெயரிடப்பட்டுள்ளது.
யுசிஎல்ஏ (UCLA) மற்றும் கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (California Institute of Technology) ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

ஆராய்ச்சியாளர்களை வியப்படையச் செய்த அரிய வகை விண்கல்.!
இந்த ஆராய்ச்சியாளர்களின் குழு, எட் அலி விண்கற்களை ஐயன் IAB சிக்கலான விண்கல் என வகைப்படுத்தியது. இது குறிப்பிட்ட வகையின் 350-க்கும் மேற்பட்ட விண்கல்லில் ஒன்றாகும்.
இந்த விண்கல்லை வகைப்படுத்தி பகுப்பாய்வு செய்யும் போது, அவர் விசித்திரமான ஒன்றைக் கண்டிருக்கிறார்.
இது ஆராய்ச்சியாளர்களை வியப்படையச் செய்துள்ளது. இதனால் அவர் ஒரு எக்ஸ்பெர்ட்டை அணுக வேண்டியதிருந்தது.

விண்கல் எக்ஸ்பெர்ட் கண்டுபிடித்த விஷயத்தால் ஆடிப்போன விஞ்ஞானிகள்.!
ஹெமனைட் உள்ளிட்ட பிற புதிய கனிம விளக்கங்களின் கண்டுபிடிப்புகளில் ஒரு பகுதியாக இருந்த A இன் U எலக்ட்ரான் மைக்ரோப்ரோப் ஆய்வகத்தின் இன் தலைவர் ஆண்ட்ரூ லோகாக்கின் நிபுணத்துவத்தைப் பெற அவர் ஆராய்ச்சி கூடத்திற்கு அழைக்கப்பட்டிருக்கிறார்.
ஆண்ட்ரூ லோகாக் ஹெர்டிடம் குறைந்தது இந்த விண்கல்லில் இரண்டு புதிய தாதுகள் இருப்பதாக முதற்கட்ட ஆராய்ச்சியில் கூறியிருக்கிறார். இது ஆச்சரியமாக இருந்தது.!

ஏன் இதை ஏலியன் தாதுகள் என்று அழைக்கிறார்கள்?
ஏனெனில் ஒரு அடையாளம் தெரியாத ஏலியன் கனிமத்தைக் கண்டுபிடிக்க நிறைய வேலைகள் தேவைப்பட்டுள்ளது.
ஏலியன் கனிமம் என்று இங்கு நாம் குறிப்பிடக் காரணம், இந்த விண்கல் நமது பூமி கிரகத்திற்கு வெளியில் இருந்து வந்துள்ளது. நமது சொந்த கிரகத்துடன் தொடர்பில்லாத பொருட்களை ஆராய்ச்சியாளர்கள் ஏலியன் பொருட்கள் என்று தான் அழைக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் ஆச்சரியம் என்ன தெரியுமா?
ஆண்ட்ரூ லோகாக்கின் விரைவான அடையாளம் காணும் திறமை, இரண்டு புதிய தாதுகளை அடையாளம் காண உதவியுள்ளது.
இந்த கனிமங்களைக் கண்டுபிடிக்க ஆண்ட்ரூ இதற்கு முன்பு செயற்கையாக உருவாக்கப்பட்ட தாதுகளின் மாதிரியை இயற்கை தாதுகளுடன் கலந்து, விண்கல்லில் இருந்த புதிய வகை தாதுகளைக் கண்டுபிடித்துள்ளார்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால், மனிதனால் உருவாக்கப்பட்ட தாதுகள் இங்கு பெரும் பங்கை வகித்துள்ளது.

பூமிக்கு தொடர்பில்லாத புதிய பொருளால் விஞ்ஞானிகள் ஆர்வம்.!
காரணம், இயற்கை தாதுக்களின் கலவையை உடன் மனிதனால் உருவாக்கப்பட்ட தாதுகள் மிகவும் கச்சிதமாகப் பொருத்த முடிந்துள்ளது.
இந்த கண்டுபிடிப்பின் மூலம் நமக்கு மற்றொரு புதிய கதவு திறந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
ஒரு புதிய பொருள் அறியப்படும் போதெல்லாம், அந்த பொருளின் மீது விஞ்ஞானிகள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

பிற சிறுகோள்களில் மனிதர்கள் சுரங்கம் அமைக்க போகிறார்களா?
ஏனெனில் சமூகத்தில் பரந்த அளவிலான விஷயங்களில் இதன் மூலம் புதிய சாத்தியமான பயன்பாடுகளை உருவாக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
இதன் அடிப்படையில் தான் சிறுகோள்களில் சுரங்கம் அமைத்து அங்குள்ள கனிமங்களை பூமி கொண்டு வர ஒரு திட்டம் நீண்ட காலமாக ரெடி செய்யப்பட்டு வருகிறது.
பிற கோள்கள், சிறுகோள்கள் மற்றும் பெரிய விண்கற்களில் இருக்கும் கனிமங்களை மனிதர்கள் விரைவில் சுரங்கம் அமைத்து எடுக்க போகிறார்கள்.!
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470