Home
Scitech

வன விலங்குகளைக் கண்டறிந்து ஆய்வு செய்ய செயற்கை அறிவுத் (AI) தொழில்நுட்பம்.!

இந்த கேமரா பற்றிய ஆய்வு அறிக்கை தேசிய அறிவியல் கழக ஆய்விதழில் (Proceedings of the National Academy of Sciences (PNAS)) வெளியிடப்பட்டுள்ளது.

By Gizbot Bureau

வன விலங்குகளைக் கண்டறிந்து, அதனைக் கணக்கிட்டு அது தொடர்பான விவரங்களைத் தானாகவே தெரிவிக்கும் வகையில் செயற்கை அறிவுத் தொழில் நுட்பத்துடன் (artificial intelligence (AI)) இயங்கக் கூடிய கேமராவைக் கண்டுபிடித்துள்ளனர் ஆய்வாளர்கள்.

வன விலங்குகளைக் கண்டறிந்து ஆய்வு செய்ய  செயற்கை (AI) தொழில்நுட்பம்.!

தான் எடுக்கும் புகைப்படங்கள் மூலமாக இத்தகைய தகவல்களை வெளியிடும் இக்கருவிக்கு “கேமரா டிராப்ஸ் (camera traps)” எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதனை, “நகர்வு உணர்வுக் கேமரா (motion-sensor cameras) எனவும் அழைக்கலாம்.

96.6 சதவிகிதம் துல்லியம்

96.6 சதவிகிதம் துல்லியம்

இந்த கேமரா பற்றிய ஆய்வு அறிக்கை தேசிய அறிவியல் கழக ஆய்விதழில் (Proceedings of the National Academy of Sciences (PNAS)) வெளியிடப்பட்டுள்ளது. செயற்கை அறிவு நுட்பத் தொழில் நுட்பம் மூலமாக புகைப்படங்களின் வழியாக விலங்குகளை 99.3 சதவிகிம் கண்டறிய முடியும். தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் பணியாளர்கள் மூலமாக வன விலங்குகளைக் கண்டறிவதைப் போல 96.6 சதவிகிதம் அளவுக்கு மிகத் துல்லியமாக இக்கருவியின் மூலம் வனவிலங்குகளைக் கண்டறிந்து அதனுடைய விவரங்களைச் சேகரிக்க முடியும்.

வனவிலங்குகள் ஆராய்ச்சிக்கு பெரும் துணை

வனவிலங்குகள் ஆராய்ச்சிக்கு பெரும் துணை

"இந்தத் தொழில் நுட்பம், மிகத் துல்லியமாகவும், அதிகச் செலவில்வாமலும் மிக எளிதாகவும் வன விலங்குகள் தொடர்பான தகவல்களைச் சேகரிக்க உதவுகிறது. சுற்றுச் சூழலியல், வனவிலங்கு உயிரியல், பாதுகாப்பு உயிரியல், விலங்குள் நடத்தையியல் ஆகிய துறைகளைச் சேர்ந்த அறிவியல் ஆய்வுகளுக்கு மிகப் பெரும் அளவில் தகவல்களைத் திரட்டுவதற்கு இந்தத் தொழில் நுட்பம் துணையாக நிற்கிறது." என்கிறார், அமெரிக்காவில் உள்ள வயோமிங் பல்கலைக்கழகத்தில் (University of Wyoming) இணைப் பேராசிரியராகப் பணிபுரியும் ஜெஃப் குளுன் (Jeff Clune) என்பவர். வனவிலங்குகளைப் பற்றிய ஆராய்ச்சிக்கும் அதனைப் பாதுகாப்பதற்கும் இத் தொழில்நுட்பம் பெரும் பங்காற்றும் எனவும் அவர் கூறுகிறார்.

டீப் லேர்னிங் தொழில் நுட்பம்

டீப் லேர்னிங் தொழில் நுட்பம்

வனவிலங்குகளைப் பற்றிய ஆய்வுக்காகப் பயன்படுத்தப்படும் செயற்கையறிவுத் தொழில் நுட்பத்தை டீப் லேர்னிங் (deep learning ) என ஆய்வாளர்கள் அழைக்கின்றனர். விலங்குகள் இந்த உலகத்தை எவ்வாறு பார்க்கின்றன, தாங்கள் பார்க்கும் காட்சிகளை எவ்வாறு புரிந்து கொள்கின்றன என்பதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கணக்கீட்டு நுண்ணறிவு (computational intelligence) மூலமாக டீப் லேர்னிங் தொழில் நுட்பம் இயங்குகிறது. வன விலங்குகளின் உருவங்கள், அவை பற்றிய தகவல்கள், அவைகளின் நடத்தைகள், அவற்றின் எண்ணிக்கை ஆகியவை குறித்த புள்ளி விவரங்களை அடிப்படையாகக் கொண்டு இக்கருவி செயல்படுகிறது.

ஆய்வுக்குத் துணை செய்யும் இலட்சக்கணக்கான பதிவுகள்

ஆய்வுக்குத் துணை செய்யும் இலட்சக்கணக்கான பதிவுகள்

இந்த ஆய்வுக்குத் தேவையான தகவல்கள், ஜீனிவெர்ஸ் (Zooniverse) நிறுவனம் நடத்தும் பொதுநபர்கள் பங்கேற்பு அறிவியல் ஆய்வுத் திட்டமான ஸ்நாப்சாட் செரங்கிடி (Snapshot Serengeti) என்னும் தளத்திலிருந்து பெறப்படுகிறது. தான்சானியாவில் உள்ள வன உயிரியல் கேமராவில் (camera traps) பதிவான சிங்கம், சிறுத்தை, யானை போன்ற விலங்குகளின் இயற்கைக் குணங்களை வெளிப்படுத்தும் இலட்சக்கணக்கான புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகள் இவ்வாய்வுக்கு உறுதுணையாக இருக்கின்றன. புகைப்படப் பதிவுகளில் உள்ள தகவல்கள் எழுத்துக்களாகவும் எண்களாகவும் மாற்றப்பட்டுப் பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

மனித உழைப்பும் நேரமும் சேமிக்கப்படுகிறது

மனித உழைப்பும் நேரமும் சேமிக்கப்படுகிறது

பல ஆண்டுகளாக இத்தகைய வனவிலங்கு ஆய்வுகளுக்கு மனிதர்கள் பல குழுக்களாகச் செயல்பட்டு எடுத்த வனவிலங்குப் பதிவுகள்தான் பயன்பட்டன. இந்தப் புதிய டீப் லேர்னிங் தொழில் நுட்பம், மனிதர்களின் விலைமதிப்பற்ற உழைப்பையும் நேரத்தையும் சேமிக்க உதவுகிறது.

பல துறைகளுக்கும் பயன்படும்

பல துறைகளுக்கும் பயன்படும்

"டீப் லேர்னிங் தொழில் நுட்பத்தின் அடிப்படையிலான வழிமுறைகள் எதிர்பார்த்ததற்கும் மேலான முடிவுகளைத் தந்துள்ளன. வனவிலங்கு சூழலியல் துறையில் இது மிகப்பெறும் மாற்றத்தைக் கொண்டு வரும்" என்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த பல்கலைக்கழகப் பேராசிரியர் கிரெய்க் பெக்கர்.

Best Mobiles in India

English summary
Researchers Develop AI to Identify, Describe Wild Animals : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X