Just In
- 17 min ago
வாட்ஸ்ஆப் வாய்ஸ் கால் வசதிக்கு கிடைத்தது புதிய அப்டேட்.!
- 1 hr ago
ஏர்டெல், வோடபோன்-ஐடியாவிற்கு பதிலடி கொடுத்த ஜியோ! மீண்டும் ரூ.149 & ரூ.98 திட்டம் அறிமுகம்!
- 1 hr ago
வன விலங்குகளை வேட்டையாடி யூடியூபில் வெளியீடு: 4பேர் கைது.!
- 2 hrs ago
புதிய சலுகைகளுடன் இன்று விற்பனைக்கு வரும் விவோ U20 ஸ்மார்ட்போன்.!
Don't Miss
- News
25 வருஷத்துக்கு வாக்குரிமை தரக்கூடாது.. இந்து-முஸ்லீம் பிரிவினைக்கு வழிவகுக்கும்.. சிவசேனா தாக்கு
- Automobiles
கேடிஎம் 250 ட்யூக்கிற்கும் ஹஸ்க்வர்ணா 250 பைக்கிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
- Sports
என் 400 ரன் ரெக்கார்டை இந்த 19 வயது இந்திய வீரர் உடைப்பார்.. சர்ப்ரைஸ் பதில் சொன்ன பிரையன் லாரா!
- Finance
இந்தியாவின் உண்மையான வளர்ச்சி 5%-க்கு கீழ் குறையும்.. IHS Markit தகவல்..!
- Movies
என்ன தமிழகத்தை மகிழ்விக்கவா? நீங்க ஜல்சா பண்ண ஊரு பேர கெடுக்காதீங்க.. நடிகையை விளாசும் நெட்டிசன்ஸ்!
- Lifestyle
சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடுவது பாதுகாப்பானதா?.. கண்டிப்பா படிங்க…!
- Education
நாடாளுமன்றத்தில் வேலை, ஊதியம் ரூ.1.42 லட்சம்..! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பூமிக்கு மேலே காட்சிப்பட்ட மர்ம கிரகம்? புகைப்படத்தில் சிக்கியது!
வழக்கமாக பூமிக்கு "மேலே" சூரியன் தெரியும், இரவில் நிலவும், நட்சத்திரங்களும் தெரியும். சில குறிப்பிட்ட விண்வெளி நிகழ்வுகளின் போது தொலைநோக்கி வழியாகவோ (பெரும்பாலும்) அல்லது வெறும் கண்களினாலோ (எப்போதாவது) அண்டை கிரங்கள் தெரியும். ஆனால் இவான் ஈடரின் கண்களுக்கு புறப்பட்ட ஒன்றே மிகவும் விசித்திரமான ஒன்றாக உள்ளது.
இவான் ஈடர், ஹங்கேரியில் வசிக்கும் ஒரு அமெச்சூர் புகைப்படக்காரர். சமீபத்தில் இவான் ஈடர் எடுத்த ஒரு புகைப்படம் ஆனது வெளியான நொடிப்பொழுதில், "டக்கென்று" வைரல் ஆனது. சதியாலோசனை கோட்பாட்டாளர்களின் மத்தியில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் அந்த புகைப்படத்தில் அப்படி என்ன தான் உள்ளது?

சந்திர கிரகத்தின் பின்னணியில் ஒரு மர்மமான கிரகம்!
புகைப்பட கலையை பழகி கொண்டு இருக்கும் அமெச்சூர் புகைப்படக்காரர் ஆன இவான் ஈடர், ஹங்கேரியின் தலைநகரமான புடாபெஸ்டின் வான்வெளி பகுதியில் காணப்பட்ட சந்திரனை அழகான முறையில் புகைப்படம் எடுக்க விரும்பி உள்ளார். ஆனால் சந்திரனுடன் சேர்த்து ஒரு "மர்மமான" கிரகத்தையும் புகைப்படம் எடுப்பார் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. ஆம் இவான் எடுத்த புகைப்படத்தில் சந்திர கிரகத்தின் பின்னணியில் ஒரு மர்மமான கிரகம் இருப்பதும் பதிவாகி உள்ளது.

பிண்ணனியில் காட்சிப்படும் அந்த மிகப்பெரிய கிரகத்தின்
விளிம்பில் தான் சந்திரன் இருக்கிறது, அப்போது அதன் அளவை நீங்கள் யூகித்து கொள்ளுங்கள்! பதிவான புகைப்படத்தை முழுமையாக ஆராய்ந்த பின்னரும் கூட இவானால் அந்த "மர்மமான" கிரகத்தை பற்றிய எந்தவொரு பகுத்தறிவு விளக்கத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் இவானுக்கு ஒன்று மட்டும் நிச்சயமாக புரிந்தது. புகைப்படத்தில் பதிவான கிரகம் ஆனது அளவில் மிகவும் பெரியதாக இருக்க வேண்டும் அல்லது அது நமது பூமி கிரகத்திற்கு மிகவும் நெருக்கமாக இருக்க வேண்டும்.
ஏலியன்ஷிப் என கூறப்பட்ட ஓமுயும்யா வேற்றுகிரக விண்கலம் பற்றிய புதிய சர்ச்சை!

அதன் இருப்பை நிரூபிக்க உறுதியான ஆதாரங்கள் இல்லை!
தனது புகைப்படத்தில் தோன்றும் "மர்ம கிரகம்" பற்றி மேலும் அறிய விரும்பிய இவான் அதை இணையத்தில் வெளியிட்டார். பின்னர் பற்றிக்கொண்டது வைரல் தீ! பொதுவெளியில் இவானின் புகைப்படம் பகிரங்கப்படுத்தப்பட்டவுடன், புகைப்படத்தில் காட்சிப்படும் அந்த "மர்ம கிரகம்" ஆனது ஒருவேளை "நிபிரு" என்று அழைக்கப்படும் ஒரு கிரகமாக இருக்கலாம் என்கிற ஊகங்கள் கிளம்ப தொடங்கியது. புகழ்பெற்ற நிபிருவின் இருப்பு பற்றி நிறைய கோட்பாடுகள் உள்ளன. ஆனால் இன்றுவரையிலாக அதன் இருப்பை நிரூபிக்க உறுதியான ஆதாரங்களை யாரும் கொண்டு வரவில்லை.

வாதமும், விளக்கமும் கிளம்பியது!
மறுகையில், இவானின் புகைப்படத்தில் காணப்படுவது ஒன்றும் மர்மமான கிரகமோ அல்லது நிபிருவோ அல்ல, அது ஒரு இயற்கையான நிகழ்வு தான் என்கிற வாதமும், விளக்கமும் கிளம்பியது. அதாவது இவானின் புகைப்படத்தில் இருப்பது சந்திரனின் சிதைந்த படம் என்றும், அது ஒரு விதமான ஆப்டிகல் மாயை என்றும் சிலர் பதில் அளித்துள்ளனர்.
கில்லாடி ஏ.ஐ உதவியுடன் பிரபஞ்ச மாதிரியை உருவாக்கிய விஞ்ஞானிகள்!

மேட்ரிக்ஸ் போன்ற ஒரு மாயையான உலகில் வாழ்கிறோம்!
மற்ற புகைப்படக் கலைஞர்களோ, காட்சிப்படும் கிரகம் போன்ற அமைப்பானது இவான் பயன்படுத்திய கேமராவில் இருந்த கோளாறால் உருவாகி இருக்கலாம் என்று நம்புகிறார்கள். கற்பனைகளை காத்தாடி போல் பறக்கவிடும் சிலரோ, நாம் மேட்ரிக்ஸ் போன்ற ஒரு மாயையான உலகில் வாழ்கிறோம், இது மேட்ரிக்ஸில் நிகழ்ந்த ஒரு தடுமாற்றம் ஆகும் என்று கூறி வருகின்றனர். ஆனால் அமெச்சூர் புகைப்படக் கலைஞரான இவானின் புகைப்படத்தில் காட்சிப்படுவது என்னெவென்று யாருக்கும் சரியாகத் தெரியவில்லை.
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,990
-
79,999
-
71,990
-
49,999
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
18,200
-
18,270
-
22,300
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790
-
7,090
-
17,090