ரெட் பிளானெட்டில் ரெட் ஒயின்.! செவ்வாயில் திராட்சை வளர்க்க ஜோர்ஜியா முடிவு.!

ஒயின் தயாரிக்கும் நாடுகளில் முதல் நாடக இருக்கும் ஜோர்ஜியா, அதன் பண்டைக்கால ஒயின் தயாரிக்கும் முறையைச் செவ்வாய்க் கிரகத்தில் செய்ய வேண்டும் என்று தீவிரமாக திட்டம் தீட்டி வருகிறது.

|

ஒயின் தயாரிக்கும் நாடுகளில் முதல் நாடக இருக்கும் ஜோர்ஜியா, அதன் பண்டைக்கால ஒயின் தயாரிக்கும் முறையைச் செவ்வாய்க் கிரகத்தில் செய்ய வேண்டும் என்று தீவிரமாக திட்டம் தீட்டி வருகிறது.

அதிகப்படியான திராட்சைகளை விளைவிக்கும் நாடு

அதிகப்படியான திராட்சைகளை விளைவிக்கும் நாடு

கிரேட் காகசஸ் மலை மற்றும் பிளாக் ஸீ கடலுக்கு இடையில் அமைந்திருக்கும் ஜோர்ஜியா, திராட்சை தோட்டத்திற்கு ஏற்ற தட்ப வெப்பநிலையைக் கொண்டுள்ளது. அதிகப்படியான திராட்சைகளை விளைவிக்கும் நாடு என்ற பெருமையும் ஜோர்ஜியாவிற்கு உரியது.

பண்டைக்கால ஜோர்ஜியா ஒயின்

பண்டைக்கால ஜோர்ஜியா ஒயின்

பண்டைக்கால முறைப்படி தயாரிக்கும் ஒயின்களை ருசிப்பதற்காகவே பல நாட்டிலிருந்து சுற்றுலாப் பயணிகள் ஜோர்ஜியா நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். தனது நாட்டிற்கென்ற தனிப் பெருமையை ஒயின் தயாரிப்பு மூலம் ஜோர்ஜியா பெற்றிருக்கிறது.

செவ்வாய்க் கிரகத்தில் வளரக்கூடிய திராட்சை

செவ்வாய்க் கிரகத்தில் வளரக்கூடிய திராட்சை

தற்பொழுது நிக்கோலஸ் டோபோர்ஜ்ஜயினிடஸி, செவ்வாய்க் கிரகத்தில் வளரக்கூடிய திராட்சை வகைகளை உருவாக்க புதிய ஆராய்ச்சி திட்டத்தை நிறுவியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ரெட் பிளானெட்டில் ரெட் ஒயின்

ரெட் பிளானெட்டில் ரெட் ஒயின்

"சஸ்டைன்டு ஹியூமன் ப்ரெசென்ஸ்"(sustained human presence) என்ற செவ்வாய்க்கிரக திட்டத்தின் கீழ் நாசா பொதுமக்களுக்கு விடுத்த அறிவிப்பின் படி, ஜோர்ஜியா செவ்வாய்க் கிரகத்தில் திராட்சை விளைவித்து ஒயின் தயாரிக்க முடிவு செய்துள்ளது.

IX மில்லினியம்

IX மில்லினியம்

செவ்வாய்க் கிரகத்தில் ஒயின் தயாரிக்கும் இந்த திட்டத்திற்கு 'IX மில்லினியம்' என ஜோர்ஜியா பெயரிட்டுள்ளது. இந்தப் பெயரின் பின்னால் ஜோர்ஜியாவின் நீண்ட கால ஒயின் வரலாறு ஒளிந்துள்ளது என்று ஜோர்ஜியா தெரிவித்துள்ளது.

கிரகங்களுக்கிடையிலான புதிய ஒயின்

கிரகங்களுக்கிடையிலான புதிய ஒயின்

இன்னும் 25 ஆண்டுகளுக்குள் நிச்சயம் செவ்வாய் திட்டம் நிறைவடைந்துவிடும். அதற்கு முன் செவ்வாயின் நிலையில் வளரும் திறன் கொண்ட திராட்சை வகைகளை ஜோர்ஜியா உருவாகுமென்றும், கிரகங்களுக்கிடையிலான புதிய ஒயின் கலாச்சாரத்தையும் ஜோர்ஜியா துவங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Red wine on Red Planet Georgia aims to grow grapes on Mars : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X