இன்று பூமிக்கு மிக அருகில் செவ்வாய் கிரகம் வருவதாக தகவல்.!

|

பூமியைத் தவிர உயிரினங்கள் வாழ்வதற்கு ஏதுவான அம்சங்கள் உள்ள கிரகங்களை விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாகத் தேடிக்கொண்டு இருக்கின்றனர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. செவ்வாய் கிரகம் இந்த ஆராய்ச்சியின் முக்கிய கிரகமாக இருந்து வருகிறது. செவ்வாய் கிரகத்தின் அமைப்புகள், சூழ்நிலைகள் ஆகியவற்றை ஆராயப் பல விதமான செயற்கைக்கோள்கள் அதை நோக்கி பயணம் செய்து கொண்டு இருக்கின்றன.

செவ்வாய் கிரகம் சூரியனை சுற்றி

இந்நிலையில் செவ்வாய் கிரகம் சூரியனை சுற்றி வரும் தனது பயணத்தின்போது, அதன் வட்டப்பாதையில் பூமிக்கு மிக நெருக்கமான இடத்தை இன்று அடைகிறது என்று தகவல் வெளிவந்துள்ளது.

சொல்ல வேண்டும் என்றால் பூமிக்கும்

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் பூமிக்கும் செவ்வாய் கிரகத்திற்கும் இடையிலான அதிகபட்ச தூரம் 40கோடியே 13லட்சம் கி.மீ ஆகும். இதில் இன்று பூமிக்கு மிக அருகில் செவ்வாய் கிரகம் வரும்போது, இரண்டுக்கும் இடையிலான தூரம் 6 கோடியே 20 லட்சம் கி.மீ. ஆக இருக்கும் என்று தகவல் கிடைத்துள்ளது.

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு இனி அந்த பிரச்சனை இருக்காது.! அட்டகாசமான திட்டம் அறிமுகம்.!எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு இனி அந்த பிரச்சனை இருக்காது.! அட்டகாசமான திட்டம் அறிமுகம்.!

த தகவலின் அடிப்படையில் இந்திய

வெளிவந்த தகவலின் அடிப்படையில் இந்திய நேரப்படி இன்று இரவு 7.47 மணிக்கு இந்த அரிய வானியல் நிகழ்வு ஏற்படுகிறது என்றும். அதன்பிறகு இன்றும் 13 ஆண்டுகள் கழித்துதான் இந்த நிகழ்வு உருவாகும் என்று கூறப்படுகிறது.

 இந்திய கோள்கள்

இந்த நிகழ்வு குறித்து இந்திய கோள்கள் சமூகத்தின் இயக்குனர் ஸ்ரீரகுநந்தன் குமார் கூறியது என்னவென்றால், வருகிற 14-ம் தேதி பிற்பகல் 2.56மணிக்கு செவ்வாய் கிரகமும், சூரியனும் ஒன்றுக்கொன்று எதிர்எதிரே காணப்படும். நாம் பூமியில் இருந்து பார்க்கும்போது, செவ்வாயும், சூரியனும் ஒரே நேர்கோட்டில் தெரியும்.

சூரியனுக்கு நேர் எதிரில்

மேலும் எந்த கிரகமும் சூரியனுக்கு நேர் எதிரில் வரும்போது, பூமிக்கு மிக நெருக்கமான இடத்தை அடைவது இயல்புதான். அந்த வகையில்,நாம் தொலைநோக்கி மூலம் பார்க்கும்போது,செவ்வாய் கிரகம் பெரிதாகவும், அதிக பிரகாசமாகவும், நெருக்கமாகவும் தெரியும்.

பாஸ்வோர்டு அமைக்கும் போது மனதில் வைத்துக்கொள்ள வேண்டிய 10 முக்கிய விஷயங்கள்!பாஸ்வோர்டு அமைக்கும் போது மனதில் வைத்துக்கொள்ள வேண்டிய 10 முக்கிய விஷயங்கள்!

வானில் செவ்வாய் கிரகத்தை காணலாம்

இந்த ஆண்டு இறுதிவரை வானில் செவ்வாய் கிரகத்தை காணலாம் என்றும், குறிப்பாக மிக பிரகாசமாக பார்க்க வேண்டுமானால் இம்மாத இறுதுவரை காணலாம். ஏனெனில் நாட்கள் ஆக ஆக தூரம் அதிகரிப்பதால் பிரகாசமும் அளவும் குறையும்.

சூரிய அஸ்தமனத்துக்கு பிறகு

பின்பு பொதுமக்கள் சூரிய அஸ்தமனத்துக்கு பிறகு வெறும் கண்ணால் செவ்வாய் கிரகத்தை பார்க்கலாம். சூரியன் மேற்கில் மறைந்தவுடன் கிழக்கும் மற்றும் தென்கிழக்கு திசைக்கு இடையே அரை மணி நேரம் பார்க்கலாம். குறிப்பாக பல வாரங்களுக்கு இப்படி பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரமாக இருந்தால், நமது தலைக்கு

நள்ளிரவு நேரமாக இருந்தால், நமது தலைக்கு மேலே காணமுடியும். காலை நேரத்தில் மேற்கு மற்றும் தென்மேற்குதிசையில் பார்க்கலாம். வெறும் கண்ணால் பார்க்கும்போது, ஆரஞ்சு நிறத்தில் பிரகாசமா தெரியும் என்று ஸ்ரீரகுநந்தன் குமார் கூறியுள்ளது.

Best Mobiles in India

English summary
Red planet Mars is coming very close to earth today: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X