இது சாதாரண மனிதர்களால் சாத்தியமே இல்லை, இருப்பினும் சாத்தியமானது எப்படி.?

70 டன்கள் எடையிலான கற்களை பரிபூரணமான கணித சீரமைப்பில் உருவாக்கி கட்டமைப்பதென்பது சாத்தியமேயில்லை என்பது அவர்களின் வாதம்.

|

பண்டைய எகிப்து மீதான ஆயிரக்கணக்காக மர்மங்கள் இன்னும் கட்ட்டவிழ்க்கப்படாமலேயே மெல்ல மெல்ல அழிந்த வண்ணம் உள்ளன. அதற்கு மிக வெளிப்படையான எடுத்துக்காட்டுகளாய் அதன் பிரமிட்கள் திகழ்கின்றன.

இது சாதாரண மனிதர்களால் சாத்தியமே இல்லை, சாத்தியமானது  எப்படி.?

மற்றொரு உலகில் இருந்து வந்த "வெளிநாட்டினர்கள்" தான் எகிப்தில் உள்ள கிசாவின் பெரும் பிரமிடுகளை கட்டமைக்க உதவியிருக்கலாம் என்றும், அதன் வழியாகத்தான் மனித இனம் மிக அற்புதமான மற்றும் மர்மமான பொறியியல் அனுபவங்கள் எவ்வாறு நிறைவேற்றலாம் என்பதை கற்றுக்கொண்டதாகவும் பல சதியாலோசனை கோட்பாடுகள் உண்டு.

இன்றுகூட  நிகழ்த்த முடியாத காரியம்

இன்றுகூட நிகழ்த்த முடியாத காரியம்

மிகப்பெரிய கற்களை பல மைல் தொலைவில் இருந்தும் வெளிப்படையாகத் துண்டிக்கப்பட்டு நகர்த்தி, அவற்றை மிகப்பெரியதாகவும், துல்லியமாகவும் ஒன்று சேர்ப்பதென்பது இன்றுகூட நிகழ்த்த முடியாத காரியமாகவே தோன்றுகிறது. பண்டைய எகிப்தில் அது சாத்தியமானது எப்படி.?

நமக்கு தெரியாத எதோ ஒன்று

நமக்கு தெரியாத எதோ ஒன்று

நவீன கட்டுமான நுணுக்கங்களைப் பயன்படுத்தாமலே ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் அதை எவ்வாறு நிர்வகித்தனர்.? தர்க்கரீதியாக, பழங்கால எகிப்தியர்கள் நமக்கு தெரியாத ஒன்றை அல்லது தெரியாத யாரையோ ஒன்றை தன்னுள் மறைந்துள்ளது என்பது எகிப்து சார்ந்து எழும் வெகுஜன கேள்விகளுள் ஒன்றாகும்.

பரிபூரணமான கணித சீரமைப்பு

பரிபூரணமான கணித சீரமைப்பு

அட்வான்ஸ்டு டெக்னாலஜி தான் பிரமிட் கட்டமைப்புகளை உருவாக்க அனுமதித்திருக்க வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள். இல்லையேல் 70 டன்கள் எடையிலான கற்களை பரிபூரணமான கணித சீரமைப்பில் உருவாக்கி கட்டமைப்பதென்பது சாத்தியமேயில்லை என்பது அவர்களின் வாதம்.

இந்த ஒரு காரணம் போதாதா.?

இந்த ஒரு காரணம் போதாதா.?

"இன்றும், உலகெங்கிலும் உள்ள பண்டைய நாகரிகங்கள் நமக்குத் தொலைவில் உள்ள அறிவு மற்றும் தொழில்நுட்பங்களைப் பெற்றிருக்கின்றனவா.? இந்த ஒரு காரணம் போதாதா, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பிற கிரகித்து "வெளிநாட்டினர்" பூமிக்கு வருகை தந்துள்ளனர், இதனால் தான் பூமியின் புராதன நாகரீக வளர்ச்சியை காலத்திற்கு முன்பே முன்னேற்றம் கண்டுள்ளது" என்கிறது ஒரு பண்டைய எகிப்து சார்ந்த கான்ஸ்பிரசி தியேரி.

முக்கியமான மூன்று கேள்விகள்

முக்கியமான மூன்று கேள்விகள்

உலகின் எந்தவொரு பிரதேசத்தை காட்டிலும் பண்டைய எகிப்து மட்டும் ஏன் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் அதிகம் இணைக்கப்பட்டு பேசப்படுகிறது.? ஒவ்வொருமுறையும் பூர்வ எகிப்தைப் பற்றி நாம் பேசும்போதும் - சக்கரம் போன்ற தொழில்நுட்ப பயன்பாடு இல்லாமல் பிரமிட் போன்ற பிரம்மாண்டங்களை எப்படி கட்டியெழுப்பி இருப்பார்கள்.? கிசா உருவானது எப்படி.? ஏலியன்கள் பிரமிட்களை கட்டமைக்க உதவினார்களா.? இப்படி பல கேள்விகள் எழுவது ஏன்.? அதில் முக்கியமான மூன்று கேள்விகள் தான் பண்டைய எகிப்தை மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் அதிகம் இணைக்க காரணிகளாய் திகழ்கின்றது.

பிரமிட்களை கட்டமைத்தது எப்படி.?

பிரமிட்களை கட்டமைத்தது எப்படி.?

மிகப்பழமையான எகிப்திய பிரமிடுகளின் கட்டுமானம் அறிவியல் பற்றிய பல கேள்விகளை எழுப்புகிறது. பூமிக்குரிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் தான் இது கட்டமைக்கப்பட்டது என்பதை பலர் நம்ப மறுக்கின்றனர். மாறாக இது பிற கிரகத்தின் "வெளிநாட்டினரால்" கட்டப்பட்டிருக்கலாம் என்று பலர் நம்புகிறார்கள்.

மம்மி அதனுள் கண்டுபிடிக்கப்படவில்லை

மம்மி அதனுள் கண்டுபிடிக்கப்படவில்லை

ஆகமொத்தம் பிரமிட்களுக்கு நம் மூதாதையர்கள் காரணமில்லை என்பது உட்பட கிசாவின் பிரமிடுகள் மற்றும் பண்டைய எகிப்திய நாகரீகமானது பல புதிர்களை தன்னுள் கொண்டுள்ளது. கிரேட் பிரமிட்கள் ஒரு கல்லறை என்று பிரதான விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இருப்பினும் பெரும்பாலும் எந்தவொரு மம்மிகளும் அதனுள் கண்டுபிடிக்கப்படவில்லை அது ஏன்.? மேலும் பிரமிடுகளின் நோக்கம் என்ன.? குறிப்பாக ஜிசாவின் பெரிய பிரமிடு பற்றி விவரிக்கும் எந்த ஹைரோகிளிப்களும் (குறிப்பிட்ட பொருளை குறிக்கும் ஒரு இரகசிய அல்லது புரியாத சின்னம்.) இல்லையே அது ஏன்.? இவைகள் எல்லாமே கடைசி வரை புதிர்கள்தான்.

விசித்திரமான ஹைரோகிளிப்ஸ்.?

விசித்திரமான ஹைரோகிளிப்ஸ்.?

ஒருபக்கம் சில பிரமிட்களுக்கான ஹைரோகிளிப்ஸ் கிடைக்கவில்லை மறுபக்கம் பண்டைய எகிப்து தன்னுள் பல விசித்திரமான ஹைரோகிளிப்ஸ்களை கொண்டுள்ளது. அவைகளில் குறிப்பிடத்தக்க வண்ணம் சில பறக்கும் வாகனங்கள், அன்னிய-மனிதர்கள் போன்ற மற்றும் இராட்சதர்கள் போன்ற உருவங்களுக்கு தெளிவான விளக்கங்கள் இல்லை.

தன்னுள் கொண்டிருத்துள்ளது

தன்னுள் கொண்டிருத்துள்ளது

அத்தகைய விசித்திரமான அடையாளங்களுக்கான விளக்கங்கள் குறைவாகவே உள்ளது. ஆக இந்த குறிப்பிட்ட ஹைரோகிளிப்ஸ்கள், பழங்கால எகிப்தானது வேற்றுகிரகவாசிகளை தன்னுள் கொண்டிருத்துள்ளது என்பதற்கான பிராதன சான்றாய் உள்ளன.

பண்டைய எகிப்தின் மின்சார அணுகல்.?

பண்டைய எகிப்தின் மின்சார அணுகல்.?

பூர்வ எகிப்தியர்கள் தங்கள் பிரம்மாண்டமான பிரமிடுகள் மற்றும் கோவில்களை மேம்பட்ட தொழில்நுட்பம் இன்றி எவ்வாறு கட்டியிருக்கிறார்கள் என்பதை கற்பனை செய்வது எந்த அளவு கடினமோ அதே அளவு பண்டைய எகிப்தில் மின்சாரம் இன்றி தான் இதெல்லாம் சாத்தியமானது என்பதை உறுதி செய்வதும் கடினமே.

அளவில்லாத மின்சார அணுகல் கிடைத்துள்ளது

அளவில்லாத மின்சார அணுகல் கிடைத்துள்ளது

பூர்வ எகிப்தில் முன்னேறிய தொழில்நுட்பத்தின் சான்றுகள் இருப்பதாகவும், எகிப்தை ஆண்ட மன்னர்களும் (ஃபரோஸ் - Pharaohs) மற்றும் நாகரீகங்களை நிர்வகித்தவர்களுக்கும் கணக்கில் அடங்காத அளவிலான மின்சார அணுகல் கிடைத்துள்ளதாகவும் நம்ப்படுகிறது. இந்த கோட்பாட்டின் ஆதரவாளர்கள் டெண்டெரா கோயிலின் தண்டேரா பல்ப் மற்றும் ஹதோர் கோவிலின் பாக்தாத் பேட்டரிகளையும் இந்த பண்டைய மின்சார புதிருக்குள் திணிக்கின்றனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Reasons why Ancient Egypt is linked with advanced technology . Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X