இஸ்ரோவின் பாகுபலி (சந்திராயன் 2) திட்டம் நிறுத்தப்பட்டதற்கான உண்மை காரணம் இதுதான்!

|

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோவின் கனவுத் திட்டமான சந்திராயன் 2 திட்டம் தாற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. விண்ணில் பாயத் தயாராகக் காத்திருந்த சந்திராயன் 2 விண்கலம் இறுதி நேரத்தில் உடனடியாக நிறுத்தப்பட்டதற்கான கரணம் என்ன என்று அனைவரும் குழப்பத்திலுள்ளனர்.

தூர்தர்ஷன் மற்றும் இஸ்ரோ தளத்தில் நேரடி ஒளிபரப்பு

தூர்தர்ஷன் மற்றும் இஸ்ரோ தளத்தில் நேரடி ஒளிபரப்பு

ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள ஏவுதளத்திலிருந்து திட்டமிட்டபடி, இன்று அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் பாய சந்திராயன் 2 விண்கலம் தயாராக இருந்து கவுண்டவுன் தயார்நிலையில் சென்றுகொண்டு இருந்தது. தூர்தர்ஷன் மற்றும் இஸ்ரோ தளத்தில் இந்நிகழ்வு நேரடி ஒளிபரப்பும் செய்யப்பட்டுக்கொண்டிருந்தது.

எதிர்பார்த்திடாத நேரத்தில் நிறுத்தப்பட்ட கவுண்டவுன்

எதிர்பார்த்திடாத நேரத்தில் நிறுத்தப்பட்ட கவுண்டவுன்

இன்று அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் பாய வேண்டிய சந்திராயன் 2 விண்கலத்தின் கவுண்டவுன் அதிகாலை 1.55 மணி 24 வினாடியில் நிறுத்தப்பட்டது. யாரும் எதிர்பார்த்திடாத நேரத்தில் கவுண்டவுன் நிறுத்தப்பட்டு சந்திராயன் 2 திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது என்று அறிவிக்கப்பட்டது.

இந்தியாவின் கனவு திட்டம்

இந்தியாவின் கனவு திட்டம்

இந்தியாவின் கனவு திட்டமானான சந்திராயன் 2 திட்டம் இறுதி நேரத்தில் நிறுத்தப்பட்டதற்குக் காரணம் என்ன? விண்ணில் பாய்வதற்குத் தயாராக இருந்த சந்திராயன் 2 விண்கலத்தில் சிறிய தொழில்நுட்ப கோளாறு இறுதி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதினால் உடனடியாக கவுண்டவுன் நிறுத்தப்பட்டு, இத்திட்டமும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

<span style=அப்டேட் ஆகிறது சாம்சங் பே-ஆப்: கிரெடிட் கார்ட், லோன் கிடைக்க வாய்ப்பு" title="அப்டேட் ஆகிறது சாம்சங் பே-ஆப்: கிரெடிட் கார்ட், லோன் கிடைக்க வாய்ப்பு" loading="lazy" width="100" height="56" />அப்டேட் ஆகிறது சாம்சங் பே-ஆப்: கிரெடிட் கார்ட், லோன் கிடைக்க வாய்ப்பு

ரூ.1,000 கோடி திட்டம்! தோல்வி அடையாமல் காத்த இஸ்ரோ

ரூ.1,000 கோடி திட்டம்! தோல்வி அடையாமல் காத்த இஸ்ரோ

விண்வெளித் துறையில் இன்னொரு மாபெரும் மைல்கல்லை நிலைநிறுத்த இஸ்ரோ தயாராகிவிட்டது. இந்தியாவின் லட்சிய திட்டமான ரூ.1,000 கோடி நிலவு திட்டத்திற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி விண்ணில் பாய்வதற்கு முன் நிறுத்தப்பட்டுள்ளது வருத்தத்தை அளிக்கிறது. இருப்பினும் உரிய நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டுத் திட்டத்தைத் தோல்வி அடையாமல் காத்த இஸ்ரோவை பாராட்டியாக வேண்டும்.

விண்ணில் பாயும் சந்திராயன் 2

விண்ணில் பாயும் சந்திராயன் 2

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின், ரூ.1000 கோடி செலவில் நிலவு திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள சந்திராயன் 2 விண்கலம், வரும் ஜுலை 15 ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விண்கலம் சந்திரனின் தென் துருவப் பகுதிக்குச் செல்ல உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எந்த நாடும் சென்றிடாத இடத்திற்குச் செல்லும் இஸ்ரோ

எந்த நாடும் சென்றிடாத இடத்திற்குச் செல்லும் இஸ்ரோ

உலக நாடுகளில், இதற்கு முன்னர் எந்த நாடும் நிலவின் தென் துருவ பகுதிக்குச் சென்றதில்லை என்பதும், முதல் முறையாக இந்தியா மட்டுமே நிலவின் தென் துருவ பகுதிக்குச் செல்லவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அண்மையில் இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் நிலவு குறித்து ஒரு பதிவையும் பதிவு செய்திருந்தது.

<span style=தீங்கான 16ஆப்பை நீக்கியது கூகுள்: உடனடியாக ஸ்மார்ட்போனில் டெலீட் செய்யுங்க.! " title="தீங்கான 16ஆப்பை நீக்கியது கூகுள்: உடனடியாக ஸ்மார்ட்போனில் டெலீட் செய்யுங்க.! " loading="lazy" width="100" height="56" />தீங்கான 16ஆப்பை நீக்கியது கூகுள்: உடனடியாக ஸ்மார்ட்போனில் டெலீட் செய்யுங்க.!

மேம்படுத்தப்பட்ட நிலவு திட்டம்

மேம்படுத்தப்பட்ட நிலவு திட்டம்

சந்திராயன் 1 திட்டத்தைத் தொடர்ந்து, இஸ்ரோ செய்யும் இரண்டாவது நிலவு திட்டம் சந்திராயன் 2 என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரோவின் கூற்றுப்படி சந்திரயான் 2 இன் பணி, சந்திரயான் 1 இன் கண்டுபிடிப்புகளை வளர்க்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திரனின் பரிணாம வளர்ச்சி

சந்திரனின் பரிணாம வளர்ச்சி

நிலவுக்குச் செல்லும் சந்திராயன் 2 விண்கலம், நிலவின் மேற்பரப்பில் உள்ள நிலப்பரப்பு ஆய்வுகள் மற்றும் கனிமவியல் பகுப்பாய்வுகள் போன்ற பலகட்ட சோதனைகளை நடத்தவுள்ளது. இதன் மூலம், சந்திரனின் தோற்றம் மற்றும் அதன் பரிணாம வளர்ச்சி பற்றிய புரிதலை நன்கு புரிந்துகொள்ள முடியும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

<span style=வாய்ஸ்கால் சலுகையோடு தினமும் 5ஜிபி டேட்டா வழங்கி தெறிக்கவிட்ட ரிலையன்ஸ் ஜியோ.! " title="வாய்ஸ்கால் சலுகையோடு தினமும் 5ஜிபி டேட்டா வழங்கி தெறிக்கவிட்ட ரிலையன்ஸ் ஜியோ.! " loading="lazy" width="100" height="56" />வாய்ஸ்கால் சலுகையோடு தினமும் 5ஜிபி டேட்டா வழங்கி தெறிக்கவிட்ட ரிலையன்ஸ் ஜியோ.!

அதிநவீன ரோவர், லேண்டர், ஆர்பிட்டர்

அதிநவீன ரோவர், லேண்டர், ஆர்பிட்டர்

சந்திரயான் 2 விண்கலத்தில், நிலவை ஆய்வு செய்வதற்காக அதிநவீன ரோவர், லேண்டர் மற்றும் ஆர்பிட்டர் உள்ளிட்ட மூன்று கருவிகள் விண்ணுக்கு அனுப்பவுள்ளது. விண்கலம் சந்திரனில் தரையிறங்கியவுடன், லேண்டர் ஆர்பிட்டரிலிருந்து பிரிந்து செல்லும், பின்னர் விக்ரம் என்று பெயரிடப்பட்ட லேண்டர், செப்டம்பர் 6, 2019 அன்று சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் தரையிறங்கும் என்றும் இஸ்ரோ தெரிவித்திருந்தது. ஆனால் தற்பொழுது இத்திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதனால் இதில் மாற்றம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலவின் ஒரு சந்திர காலம்

நிலவின் ஒரு சந்திர காலம்

நிலவிற்கு அனுப்பப்படும் லேண்டர், நிலவை ஒரு சந்திர காலத்திற்கு நிலவின் மேற்பரப்பைச் சோதனை செய்யும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. நிலவின் ஒரு சந்திர காலம் என்பது பூமியின் 14 நாட்களுக்குச் சமம் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் சந்திரனுக்குச் செல்லும் ஆர்பிட்டர் ஒரு வருட காலத்திற்கு அதன் பணியைச் செய்யும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ரூ.1000 கோடி செலவில் புதிய சாதனை

ரூ.1000 கோடி செலவில் புதிய சாதனை

இதுவரை, எந்த நாடும் தென் துருவ பகுதிக்குச் சென்றதில்லை என்பதனால், இந்தியா புதிய சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும், சந்திராயன் 1 இன் பணிகளை மேம்படுத்தி நிலவின் பரிணாம வளர்ச்சியைக் கண்டறிவதற்காகவும் இந்த சந்திராயன் 2 நிலவு திட்டம் ரூ.1000 கோடி செலவில் உருவாக்கப்பட்டு தயார்நிலையில் உள்ளதென்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

<span style=செல்போனை ஹெல்மெட்டுக்குள் வைத்துப் பேசிய இளைஞர்: நேர்ந்த வீபரிதம்-இது நமக்கொரு பாடம்.! " title="செல்போனை ஹெல்மெட்டுக்குள் வைத்துப் பேசிய இளைஞர்: நேர்ந்த வீபரிதம்-இது நமக்கொரு பாடம்.! " loading="lazy" width="100" height="56" />செல்போனை ஹெல்மெட்டுக்குள் வைத்துப் பேசிய இளைஞர்: நேர்ந்த வீபரிதம்-இது நமக்கொரு பாடம்.!

விண்ணில் பாய்ந்து சாதனை படைக்கும்

விண்ணில் பாய்ந்து சாதனை படைக்கும்

தற்பொழுது எதிர்பார்த்த விதமாக ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணத்தினால் சந்திராயன் 2 திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. விரைவில் தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்டு சந்திராயன் 2 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்து சாதனை படைக்குமென்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Reason behind ISRO's Chandrayaan 2 launch called off today : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X