இந்த விஷயம் மட்டும் தெரிஞ்சா.. இனி அடிக்கடி சூரியனை பார்ப்பீங்க!

|

ஒரு நாளைக்கு நீங்கள் எத்தனை முறை சூரியனை (The Sun) பார்ப்பீர்கள்? அதிகபட்சமாக பல முறை பார்க்கலாம். குறைந்தபட்சமாக காலை ஒருமுறை மற்றும் மாலைவேளையில் ஒருமுறை என மொத்தம் 2 முறை பார்க்கலாம்!

அப்படி தானே? ஆனால், இனிமேல் அடிக்கடி பார்ப்பீர்கள்; எப்போதெல்லாம் முடிகிறதோ.. அப்போதெல்லாம் பார்ப்பீர்கள்.. குழப்பத்தோடு பார்ப்பீர்கள்!

ஏனென்றால்.. பல கேள்விகளுக்கு பதில்கள் உள்ளன! ஆனால்?

ஏனென்றால்.. பல கேள்விகளுக்கு பதில்கள் உள்ளன! ஆனால்?

நமது விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் சூரியனை பற்றி என்ன என்னவோ கண்டுபிடித்து இருக்கிறார்கள்!

சூரியனின் வயது என்ன? பூமியில் ஒரு நாள் என்றால் 24 மணிநேரம் என்பது போல சூரியனில் "ஒரு நாள்" என்றால் எத்தனை மணிநேரம் என்று ஏன் அளவிட முடியாது?

சூரியனுக்கும் நாம் வாழும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் எவ்வளவு? சூரியன் தீப்பிடித்து எரியும் சூடான பந்து போல இருக்க என்ன காரணம்?

இப்படி சூரியனை பற்றிய மிகப்பெரிய கேள்விகளுக்கும், குழப்பங்களுக்கும் கூட நம்மிடம் அறிவியல் பூர்வமான பதில்கள் உள்ளன!

சூரியனின் சூரியனின் "மர்ம பகுதி" கண்டுபிடிப்பு.. ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள்!

ஒரு எளிமையான கேள்விக்கு?

ஒரு எளிமையான கேள்விக்கு?

பூமியில் இருந்து 150 மில்லியன் கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள சூரியனை பற்றி மிகவும் எளிமையான ஒரு கேள்வி இருக்கிறது; அது தொடர்பான குழப்பமான பதிலும் இருக்கிறது!

அது என்னவென்றால்.. மஞ்சளாக இருப்பது போல் தெரிவதால், பெரும்பாலான மக்கள் சூரியன் மஞ்சள் நிறத்தில் இருப்பதாக நம்புகிறார்கள்.

அந்த நம்பிக்கை உங்களுக்கும் உண்டா? அதாவது "சூரியனின் நிறம் என்ன?" என்று கேட்டால், சட்டென்று "மஞ்சள்!" என்று பதில் கூறும் பலரில் நீங்களும் ஒருவரா?

இனிமேல் அப்படி கூற மாட்டீர்கள்!

இனிமேல் அப்படி கூற மாட்டீர்கள்!

ஏனென்றால், சூரியனின் நிறம் மஞ்சள் இல்லையாம்! இந்த தகவலை நாங்கள் உறுதிப்படுத்தவில்லை; அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவை சேர்ந்த விண்வெளி வீரர் ஆன ஸ்காட் கெல்லி (Scott Kelly) உறுதிப்படுத்தி உள்ளார்!

ட்வீட்டர் பக்கம் வழியாக சூரியனின் உண்மையான நிறம் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த ஸ்காட் கெல்லி, சூரியனின் உண்மையான நிறம் மஞ்சள் அல்ல என்பதை உறுதிப்படுத்தி உள்ளார்!

செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பச்சை நிற பொருள்! இதெப்படி சாத்தியம்?செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பச்சை நிற பொருள்! இதெப்படி சாத்தியம்?

அப்போது சூரியனின் உண்மையான நிறம் தான் என்ன?

அப்போது சூரியனின் உண்மையான நிறம் தான் என்ன?

சூரியனின் நிறம் - வெள்ளை! ஆம், சூரியன் வெண்மை நிறத்தில் தான் உள்ளது. ஆனால் பூமியின் வளிமண்டலத்தின் காரணமாகவே அது மஞ்சள் நிறத்தில் தோன்றுகிறது

அதாவது நமது வளிமண்டலம், சூரியனை மஞ்சள் நிறத்தில் இருப்பது போல் காட்சிப்படுத்துகிறது. ஒருவேளை நீங்கள் பூமியின் வளிமண்டலத்திற்கு வெளியே வந்து பார்த்தால், சூரியன் முழுவதுமாக வெள்ளை நிறத்திலேயே காட்சியளிக்கும்!

பார்க்க நினைத்தாலும்.. பார்க்க முடியாது!

பார்க்க நினைத்தாலும்.. பார்க்க முடியாது!

சூரியன் மஞ்சளாகவும், வெள்ளையாகவும் தெரிவதற்கு, நம் கண்கள் நிறத்தை பார்க்கும் விதம் தான் இதற்கு காரணம் என்று நாசா கூறுகிறது.

மேலும் சூரிய ஒளியின் அளவு, நம் கண்களில் உள்ள ஒளிச்சேர்க்கை செல்களை (photoreceptor cells) மூழ்கடித்து, அனைத்து வண்ணங்களையும் ஒன்றாக கலப்பதால், சூரியனிலிருந்து ஒரு நிறத்தை மட்டுமே நம்மால் வேறுபடுத்தி பார்க்க முடியாது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது!

விண்வெளியில் வீசப்பட்ட விசித்திரமான அறுகோண வைரங்கள்! பூமியில் வந்து விழுமா?விண்வெளியில் வீசப்பட்ட விசித்திரமான அறுகோண வைரங்கள்! பூமியில் வந்து விழுமா?

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க.. மறுபக்கம் வெள்ளை நிறம் இருக்கிறது!

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க.. மறுபக்கம் வெள்ளை நிறம் இருக்கிறது!

வெள்ளை (White) என்பது ஒளியின் அனைத்து வண்ணங்களையும் இணைப்பதன் (combining all colours of light) விளைவாகும். இதுவும் கூட சூரியன் விண்வெளியில் வெண்மையாகவும், பூமியில் மஞ்சள் நிறமாகவும் தோன்றுவதற்கு ஒரு காரணம் ஆகும்

இதெல்லாம் சரி.. சூரியனின் வயது என்ன.. அங்கே ஏன்

இதெல்லாம் சரி.. சூரியனின் வயது என்ன.. அங்கே ஏன் "ஒரு நாள்" ஐ அளவிட முடியாது?

ஒருவேளை, சூரியனை பற்றி மேலும் அதிகமாக நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால்.. சூரியனை பற்றி நம்ப முடியாத சில உண்மைகள் இதோ:

சூரியன் 4.5 பில்லியன் ஆண்டுகள் பழமையான ஒரு நட்சத்திரம் ஆகும். ஹைட்ரஜன் மற்றும் ஹீலியத்தால் தீப்பற்றி எரிவது போல் ஒளிரும் - சூரிய குடும்பத்தின் மையத்தில் இருக்கும் - ஒரு மிகப்பெரிய விண்வெளி பொருள் ஆகும்.

சீனாவிற்கு.. நிலவில் கிடைத்த 6வது பொக்கிஷம்! மண்டை குடைச்சலில் அமெரிக்கா!சீனாவிற்கு.. நிலவில் கிடைத்த 6வது பொக்கிஷம்! மண்டை குடைச்சலில் அமெரிக்கா!

சூரியனில் ஒரு நாள் என்றால் எத்தனை மணிநேரம்?

சூரியனில் ஒரு நாள் என்றால் எத்தனை மணிநேரம்?

நாசாவின் கூற்றுப்படி, சூரியனில் " ஒரு நாள்" ஐ அளவிடுவது மிகவும் சிக்கலான காரியம் ஆகும். ஏனெனில் அது சுழலும் விதம் அப்படி!

சூரியன் என்கிற நட்சத்திரம் "ஒற்றை மற்றும் திடமான" பந்தாக சுழலவில்லை. ஏனெனில் சூரியனின் மேற்பரப்பானது பூமியை போல திடமானதாக இல்லை. மாறாக, அது பிளாஸ்மா எனப்படும் மிகவும்-சூடான, 'எலெக்ட்ரிக்கலி சார்ஜ்டு' ஆன வாயுவால் ஆனது!

இந்த பிளாஸ்மா சூரியனின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு வேகத்தில் சுழல்கிறது. ஆகையால்
சூரியனின் "ஒரு நாள்" ஐ அளவிடுவது மிகவும் கடினம்!

அதுமட்டுமா?

அதுமட்டுமா?

பூமிக்கு இருப்பது போல சூரியனுக்கு எந்தவொரு நிலவும் கிடையாது.

அதேபோல சூரியனை "நிரப்ப வேண்டும்" என்றால் நமக்கு மொத்தம் 1.3 மில்லியன் பூமிகள் தேவைப்படும்.

இதன் புவியீர்ப்பு தான் மொத்த சூரிய குடும்பத்தை ஒன்றாக வைத்திருக்கிறது.

சூரியனின் மிகவும் வெப்பமான பகுதி - அதன் மையமாகும், அங்கு வெப்பநிலை 27 மில்லியன் டிகிரி பாரன்ஹீட் (15 மில்லியன் டிகிரி செல்சியஸ்) இருக்கும்.

முதல் முறையாக ஏலியன் கிரகத்தை முதல் முறையாக ஏலியன் கிரகத்தை "நேரடியாக" போட்டோ எடுத்த நாசா!

சூரிய கண்காணிப்பு!

சூரிய கண்காணிப்பு!

"சூரியனைப் பற்றிய இந்த தகவல்களையெல்லாம் எப்படிப்பா கண்டுபிடிக்கிறீங்க?" என்று நீங்கள் கேட்டால்..

பார்க்கர் சோலார் ப்ரோப் (Parker Solar Probe), ஸ்டீரியோ (STEREO), சோலார் ஆர்பிட்டர் (Solar Orbiter), சோஹோ (SOHO), சோலார் டைனமிக்ஸ் அப்சர்வேட்டரி (Solar Dynamics Observatory), ஹினோட் (Hinode), ஐஆர்ஐஎஸ் (IRIS) மற்றும் விண்ட் ( Wind) உள்ளிட்ட பல விண்கலங்கள் தற்போது சூரியனை ஆய்வு செய்து வருகின்றன என்பதே எங்களின் பதில்!

Photo Courtesy: NASA, Wikipedia

Best Mobiles in India

English summary
Real colour of the Sun is White But why it appears like Yellow to our Eyes Explained

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X