300 வருஷத்தில் இப்படி ஒரு வைரத்தை பூமியில யாரும் கண்டுபிடிக்கல.! மதிப்பு எவ்வளவு தெரியுமா?

|

Lulo Rose Pink Diamond: மனிதனுக்குத் தெரியாத ஏராளமான பிரமிக்கத்தக்க விஷயங்கள் பூமிக்குள் புதைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பூமிக்குள் ஏராளமான பொக்கிஷங்கள் புதைக்கப்பட்டுள்ளன. பூமியிலேயே மிகவும் விலை உயர்ந்த பொருள் என்றால், நாம் வைரத்தைத் தான் குறிப்பிடுவோம். ஒரு கல்லிற்கு இவ்வளவு மதிப்பா என்று நாம் சில நேரங்களில் யோசித்திருந்தால் கூட, உண்மையிலேயே இதன் மீது மனிதர்களுக்கு ஒரு தனி மோகம் இருக்கிறது.

இது வெறும் கல்லு தானே சாமி.. இதுக்கா இந்த ரேட்.!

இது வெறும் கல்லு தானே சாமி.. இதுக்கா இந்த ரேட்.!

"இது வெறும் கல்லு தான் சாமி" என்று கூறினாலும், "கல்லு தான்.. ஆனா, இது சாதாரண கல் இல்லையே.! இதற்குப் பூமியில் எவ்வளவு மதிப்பென்று தெரியுமா?" என்று பக்கம் பக்கமாக டயாளக் விடும் மக்களே இங்கு ஏராளம். வைரம் என்றாலே, விலை அதிகமானது - மதிப்பு அதிகமானது என்று நாம் அனைவருமே நினைத்திருப்போம். ஆனால், வைரங்களிலேயே மிகவும் விலை உயர்ந்த வைரம் எது தெரியுமா?

பூமியில் மிக-மிக அரிதான வைரம் எது தெரியுமா?

பூமியில் மிக-மிக அரிதான வைரம் எது தெரியுமா?

இந்த பதிவில் நாம் பார்க்க போகும், பிங்க் நிற வைரங்கள் தான் பூமியிலேயே மிகவும் அரிதானது மற்றும் அதிக விலை கொண்டதாக இருக்கிறது என்று கூறப்படுகிறது. பொதுவாக வைரம் என்றாலே, வெள்ளை நிறத்தில் தான் இருக்கும். ஆனால், இந்த பிங்க் நிற வைரங்கள் (Rare pink diamond) பூமியில் மிக-மிக அரிதாகவே தோன்றுகிறதாம். அதனாலேயே இதன் மதிப்பு மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கிறது.

Samsung பயனர்களுக்கு Airtel வெளியிட்ட அறிவிப்பு.! எல்லா போனிலும் 5G.! ஆனா இந்த 2 போனுக்கு மட்டும்?Samsung பயனர்களுக்கு Airtel வெளியிட்ட அறிவிப்பு.! எல்லா போனிலும் 5G.! ஆனா இந்த 2 போனுக்கு மட்டும்?

300 ஆண்டுகளுக்கு பிறகு பூமியில் கிடைத்த பிங்க் வைரம்.!

300 ஆண்டுகளுக்கு பிறகு பூமியில் கிடைத்த பிங்க் வைரம்.!

இதற்கு முன்னால், இது போன்ற ஒரு பிங்க் நிற வைரம் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட இடைவெளிக்குப் பின்பு, இப்போது 300 வருடங்களுக்கு பிறகு ஒரு பெரிய சைஸ் பிங்க் நிற வைரம் (Large size pink diamond) ஆப்பிரிக்கா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் கிடைத்திடாத வகையில் இது பெரியது என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியால அடுத்த தீ-யா விற்பனையாக போகும் Vivo Y02.! காரணம் இதன் விலை தானா?இந்தியால அடுத்த தீ-யா விற்பனையாக போகும் Vivo Y02.! காரணம் இதன் விலை தானா?

அங்கோலா சுரங்கத்தில் கிடைத்த பொக்கிஷம்

அங்கோலா சுரங்கத்தில் கிடைத்த பொக்கிஷம்

மத்திய ஆபிரிக்காவில் உள்ள அங்கோலாவைச் சேர்ந்த சுரங்கத் தொழிலாளர்கள் தான் இந்த அரிய தூய இளஞ்சிவப்பு (பிங்க் - Pink) வைரத்தைக் கண்டுபிடித்துள்ளனர். Phys.org இன் அறிக்கையின் படி, இது 300 ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய பிங்க் நிற வைரம் என்று கூறப்படுகிறது. இந்த பிங்க் நிற வைரத்தை லுலோ ரோஸ் (Lulo Rose) என்று பெயரிட்டுள்ளனர்.

ஒட்டுமொத்த வீட்டிற்கு ஒட்டுமொத்த வீட்டிற்கு "1" Jio பிளான்.! 17 OTT பலன் இலவசம்.! 3TB டேட்டாவுடன் இன்னும் ஏராளம்.!

170 காரட் எடையுடன் பூமியின் மிக அரிய வகை வைரம் கண்டுபிடிப்பு.!

170 காரட் எடையுடன் பூமியின் மிக அரிய வகை வைரம் கண்டுபிடிப்பு.!

இந்த பிங்க் நிற லுலோ ரோஸ் வைரம் சுமார் 170 காரட் எடையுடன், ஆப்பிரிக்கா நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள லுலோ சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கிரகத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட அரிய மற்றும் மிகப்பெரிய பிங்க் நிற வைரம் இதுவாகும். லூகாபா வைர நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் சுரங்கத்தில் இருந்து இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

5G போன் கதிர்வீச்சால் கேன்சர் ஏற்படுமா? திடுக்கிட வைத்த ஆராய்ச்சியின் முடிவுகள்.!5G போன் கதிர்வீச்சால் கேன்சர் ஏற்படுமா? திடுக்கிட வைத்த ஆராய்ச்சியின் முடிவுகள்.!

இது தூய்மையான டைப் IIa வகை வைரம் -ஆ?

இது தூய்மையான டைப் IIa வகை வைரம் -ஆ?

அங்கோலா அரசாங்கத்தால் இந்த வைரத்தின் தூய்மை மற்றும் அரிதான தன்மை சோதிக்கப்பட்டு இது IIa வகை வைரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கோலாவின் கனிம வள அமைச்சர் Diamantino Azevedo ஒரு அறிக்கையில், "லுலோவிடம் இருந்து மீட்கப்பட்ட இந்த கண்கவர் பிங்க் வைரமானது, உலக அரங்கில் அங்கோலாவை ஒரு முக்கிய வீரராகக் காட்டுகிறது" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

எது வேணுமோ அள்ளிக்கோங்க.! அதிரடி ஆஃப்பர்.! Redmi 4G / 5G ரெண்டுமே இருக்கு.!எது வேணுமோ அள்ளிக்கோங்க.! அதிரடி ஆஃப்பர்.! Redmi 4G / 5G ரெண்டுமே இருக்கு.!

பூமியில் வைரங்கள் எப்படி உருவாகிறது?

பூமியில் வைரங்கள் எப்படி உருவாகிறது?

பூமியில் வைரங்கள் எப்படி உருவாகிறது என்பது நம்மில் பெரும்பாலானோருக்குத் தெரிந்திருக்கும். தெரியாதவர்களுக்கு எளிமையாகச் சொன்னால், பூமிக்குள் கார்பன் படிவுகள் (மேற்பரப்பிலிருந்து சுமார் 90 முதல் 125 மைல்கள் வரை) அதிக வெப்பநிலை மற்றும் அழுத்தத்திற்கு உட்பட்டால் வைர உருவாக்கம் ஏற்படுகிறது. சில வைரங்கள் சில நாட்கள் அல்லது மாதங்களில் வடிவம் பெறுகின்றன. மற்றவை மில்லியன் கணக்கான ஆண்டுகள் எடுத்துக்கொள்கின்றன.

இந்த பெயரை நல்லா ஞாபகம் வச்சுக்கோங்க.! பட்ஜெட்ல பெஸ்ட் 5ஜி போனா மாறப்போகுது.!இந்த பெயரை நல்லா ஞாபகம் வச்சுக்கோங்க.! பட்ஜெட்ல பெஸ்ட் 5ஜி போனா மாறப்போகுது.!

பிங்க் நிற வைரங்கள் பூமியில் எப்படி உருவாகுகிறது?

பிங்க் நிற வைரங்கள் பூமியில் எப்படி உருவாகுகிறது?

இதேபோல், இந்த பிங்க் நிற வைரங்கள் பூமியில் கல் உருவான பிறகு கடுமையான வெப்பம் மற்றும் அனைத்து திசைகளிலிருந்தும் (ஐசோட்ரோபிக் அல்லாத அழுத்தம்) பெரும் அழுத்தத்தின் விளைவாக உருவாகுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இயற்கையின் அதிசயத்தால் உருவாகும் இத்தகைய தனித்துவமான வைரம், எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை என்றும் கூறுகின்றனர்.

யாரு சாமி இவன்.! சாதா iPhone-அ ஃபோல்டபில் ஐபோனா மாத்திட்டான்.! நெட்டிசனே கலங்கிட்டாங்க.!யாரு சாமி இவன்.! சாதா iPhone-அ ஃபோல்டபில் ஐபோனா மாத்திட்டான்.! நெட்டிசனே கலங்கிட்டாங்க.!

இதன் முழு வைர வடிவத்தை பெற ஏகப்பட்ட லாஸ் இருக்கா?

இதன் முழு வைர வடிவத்தை பெற ஏகப்பட்ட லாஸ் இருக்கா?

இந்த வைரமானது சர்வதேச டெண்டரில் இதுவரை இல்லாத அதிக விலைக்கு விற்கப்படும் என்று கூறப்படுகிறது. எவ்வாறாயினும், லுலோ ரோஸ் அதன் உண்மையான மதிப்பைப் பெற வெட்டப்பட்டு, மெருகூட்டப்பட்டுச் சுத்திகரிக்கப்படும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த செயல்முறையின் போது பிங்க் நிற கல்லின் எடையில் பாதியை இழக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.399 விலைக்கு 3TB டேட்டா! Airtel & Jio-ல இப்படி ரீசார்ஜ் பிளான் கூட இருக்கா? தெரியாம போச்சே.!ரூ.399 விலைக்கு 3TB டேட்டா! Airtel & Jio-ல இப்படி ரீசார்ஜ் பிளான் கூட இருக்கா? தெரியாம போச்சே.!

சாதாரண வைரத்தை விட பிங்க் வைரத்தின் விலை எவ்வளவு இருக்கும்?

சாதாரண வைரத்தை விட பிங்க் வைரத்தின் விலை எவ்வளவு இருக்கும்?

உதாரணமாக, 59.6 காரட் கொண்ட பிங்க் ஸ்டார் வைர கல் 2017 இல் ஹாங்காங்கில் சுமார் $71.2 மில்லியனுக்கு ஏலத்தில் விற்கப்பட்டது. இன்றுவரை, விற்கப்பட்ட மிக விலையுயர்ந்த வைரமாக இது உள்ளது. கடந்த ஆண்டு, 15.8 காரட் கொண்ட மற்றொரு அரிய பிங்க் சகுரா வைரம் 29.3 மில்லியன் டாலர்களுக்கு விற்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள 170 காரட் பிங்க் வைர கல் என்ன விலைக்கு விற்கப்படும் என்பதைப் பார்க்க மிகவும் ஆர்வமாக இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Rare and Large Lulo Rose Pink Diamond Found in Africa by Miners After 300 Years in Earths History

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X