இவர் முன்னால செல்லுலார் ராஜுலாம் பச்சை குழந்தை போல.! அப்படி என்ன பண்ணாரு.?

|

"உலகின் மூத்தகுடி மக்களென்று கூறிக்கொள்ளும் கூட்டம் ஆடையில்லாத ஆதிவாசிகளை உலாவிய காலக்கட்டத்தில் தமிழர்கள் இயல், இசை, நாடகம் இயற்றிக்கொண்டிருந்தனர்" என்பதொரு பேச்சுவழக்காகும். அந்த வழக்கின் கீழ் பார்த்தால் உலகின் அத்துணை முதன்மையான கண்டுபிடிப்புகளும் இந்தியாவில் தான் நிகழ்ந்திருக்க வேண்டும்.

இவர் முன்னால செல்லுலார் ராஜுலாம் குழந்தை போல.! அப்படி என்ன பண்ணாரு.?

அப்படியாக பெரும்பாலான ஆதிகால கண்டுபிடிப்புகளுக்கு பிள்ளையார்சுழி போட்டது இந்தியர்கள் தான் என்பதற்கு பல ஆதாரங்களை எடுத்துக்கூறலாம் (இதையெல்லாம் பண்டைய இந்திய நூல்கள் மற்றும் அதன் ஆளுமைகளுடன் இணைத்த பெருமக்களுக்கு நன்றி). உலகின் முதல் விமானம் தொடங்கி உலகின் முதல் பிளாஸ்டிக் அறுவைசிகிச்சை வரை இந்தியர்கள் தான் உலக அறிவியலின் ஆதரப்புள்ளியாக திகழ்கின்றனர்.

ஐசக் நியூட்டனுக்கு சொந்தம் இல்லை

ஐசக் நியூட்டனுக்கு சொந்தம் இல்லை

இந்த "பிள்ளையார்சுழி போடும்" பட்டியலில் சமீபத்திய இணைப்பொன்று நம்மையெல்லாம் அதிர்ச்சியூட்டும் வண்னம் ஒரு விடயத்தை வெளிப்படுத்துகிறது. அது 'கிராவிடேஷனல் தியேரி' எனப்படும் ஈர்ப்பு கோட்பாடானது ஐசக் நியூட்டனுக்கு சொந்தம் இல்லை என்கிறது.

ஏழாம் நூற்றாண்டு வானியலாளர்

ஏழாம் நூற்றாண்டு வானியலாளர்

சரி அப்போது ஈர்ப்பு கோட்பாட்டை யார் தான் உருவாக்கியது.? என்று கேட்டால் ராஜஸ்தான் கல்வி அமைச்சரான வாசுதேவ் தேவ்னானியின் பதில்: "முதன் முதலில் ஈர்ப்பு விசையை கண்டறிந்தது ஒரு இந்தியர் ஆவார். அது நியூட்டன் காலத்துடன் ஒப்பிடும்போது சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஏழாம் நூற்றாண்டு வானியலாளரான இரண்டாம் பிரம்மகுப்தா" என்பதுதான்.

நியூட்டனை காலி செய்தது மட்டுமின்றி

நியூட்டனை காலி செய்தது மட்டுமின்றி

ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தின் 72-வது அடித்தள கொண்டாட்ட விழாவில் பேசிய வாசுதேவ் தேவ்னானி நியூட்டனை காலி செய்தது மட்டுமின்றி "இதுபோன்ற உண்மைகள் எல்லாம் கல்வி பாடத்திட்டத்தில் இல்லை, இவைகளெல்லாம் கற்பிக்கப்பட வேண்டும்" என்றும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

செல்லுலார் ராஜு பார்ட் 2

செல்லுலார் ராஜு பார்ட் 2

இத்தகைய அபத்தமான கோரிக்கைகளை வாசுதேவ் தேவ்னானி முன்வைப்பதோன்ரும் முதல் முறையல்ல, கடந்த ஆண்டு நமது செல்லுலார் ராஜுஅவர்கள் தலைப்பு செய்திகளில் மற்றும் மீம்ஸ்களில் சிக்கியது போல இவரும் தனக்கே உரிய "விஞ்ஞான ஆராய்ச்சி கருத்துகளுக்காக மேற்கோளிடப்பட்டார்.

பசுக்களால் மட்டுமே முடியும்

பசுக்களால் மட்டுமே முடியும்

இவரின் முந்தைய கருத்தானது இன்னும் சுவாரசியமானது. உலகிலுள்ள எந்தவொரு விலங்கினத்தாலும் முடியாத ஒன்று பசுக்களால் மட்டுமே முடியும் என்று கூறினார். அது "பசுக்கள் மட்டுமே ஆக்ஸிஜனை உள்வாங்கி மற்றும் வெளியிடக் கூடிய ஒரே விலங்கு" என்பதேயாகும்.

Best Mobiles in India

English summary
Rajasthan Minister Claims, It's Not Newton But Brahmagupta II Who Gave The Gravitation Theory. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X