அணுகுண்டு தயாரிக்கும் இரிடியம் மிஸ்ஸிங்: ஐ.நா., எச்சரிக்கை.!

23 கிலோ எடை கொண்ட இந்த இரிடியம், ரேடியோகிராபி தொழில்துறையில் பயன்படுத்தக்கூடியது ஆகும். கதிரியக்க தன்மை கொண்ட இந்த பொருள் பயங்கரவாதிகள் கையில் கிடைத்தால், தவறான வழிக்கு பயன்படுத்தும் அபாயம் உள்ளது.

|

கதிரியக்க தன்மை வாய்ந்த இரிடியம் தற்போது மலேசியாவில் மாயமாகியுள்ளது. இந்த கடத்தல் செயலில் தீவிரவாதிகள் ஈட்டுள்ளனரா என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

அணுகுண்டு தயாரிக்கும் இரிடியம் மிஸ்ஸிங்: ஐ.நா., எச்சரிக்கை.!

மேலும், இந்த இரிடியம் தீவிரவாதிகள் கையில் கிடைத்துவிட்டால், உயிருக்கு ஆபத்து ஏற்படும் ஆயுதங்களை தயாரித்து விடுவார்கள் என்று ஐ.நா அணுசக்தி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கதிரியக்க இரிடியம் மாயம்:

கதிரியக்க இரிடியம் மாயம்:

மலேசிய தலைநகர் கோலாலம்பூர் அருகே ஷா ஆலம் பகுதியில் உள்ள தொழிற்சாலைக்காக செரம்பன் பகுதியில் இருந்து கதிரியக்க தன்மை வாய்ந்த இரிடியத்தை எடுத்துக்கொண்டு மினி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. கோலாலம்பூர் அருகே சென்றபோது இந்த பொருள் மாயமாகி இருப்பது தெரியவந்தது.

23 கிலோ இரிடியம்:

23 கிலோ இரிடியம்:

23 கிலோ எடை கொண்ட இந்த இரிடியம், ரேடியோகிராபி தொழில்துறையில் பயன்படுத்தக்கூடியது ஆகும். கதிரியக்க தன்மை கொண்ட இந்த பொருள் பயங்கரவாதிகள் கையில் கிடைத்தால், தவறான வழிக்கு பயன்படுத்தும் அபாயம் உள்ளது.

தீவிர தேடுதல் வேட்டை:

தீவிர தேடுதல் வேட்டை:

இரிடியம் மாயமான சம்பவம், மலேசிய அரசின் உயர்மட்ட அதிகாரிகள் வரை அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் நாடு முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கி உள்ளனர்.

ஐநா அணுசக்தி நிறுவனம் எச்சரிக்கை:

ஐநா அணுசக்தி நிறுவனம் எச்சரிக்கை:

மிகவும் ஆபத்தான இரிடியம் மாயமான தகவலை அறிந்த ஐ.நா. அணுசக்தி நிறுவனம், ‘கதிரியக்க பொருள் மாயமாகி அல்லது திருடப்பட்டு பயங்கரவாதிகளின் கையில் சிக்கிவிட்டால், அணுகுண்டு அல்லது பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை உருவாக்க வழிவகுத்துவிடும்' என எச்சரிக்கை விடுத்துள்ளது.

சர்வதேச தீவிரவாதிகளா கடத்தினர்:

சர்வதேச தீவிரவாதிகளா கடத்தினர்:

கதிரியக்க தன்மை கொண்ட இரிடியத்தை சர்வ தேச தீவிரவாதிகளாக திட்டமிட்டு கடத்தி சென்று உள்ளனரா என்று அமெரிக்க உளவு நிறுவனங்களும் தீவிரமாக விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தீவிரவாதிகளிடம் கிடைக்காமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் முழுமையாக எடுக்கப்பட்டு வருவதாக மலேசியாவும் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Radioactive material reported in Malaysia : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X