'மரம் ஏறினது' இந்தியாவும் சிங்கப்பூரும் 'தேங்காய் தின்றது' சீனாவா..?!

|

சமீபத்தில் சீனா, உலகின் முதல் குவாண்டம் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி மாபெரும் சாதனையை நிகழ்த்தியது. சீனாவின் இந்த செயற்கைகோள் தான் உலகின் முதல் ஹேக் ப்ரூப் வசதி கொண்ட செயற்கைகோள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதாவது விண்வெளி மற்றும் தரையின் இடையே நிகழும் தொடர்புகளை ஹேக் செய்ய இயலாது.

செலுத்தப்பட்ட செயற்கைக்கோள் 500 கி.மீ. உயரத்தில் சூரிய-சின்க்ரோனஸ் கோளப்பாதை நுழைந்து, ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கு ஒருமுறை பூமியை வட்டமிடும், சீனாவின் இந்த குவாண்டம் இயற்பியல் ஆய்வு உலக நாடுகளை சீனாவின் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது என்று கூறலாம். ஆனால், இவ்வளவு பெருமைக்கும் சீனா மட்டுமே காரணம் இல்லை..!

சிங்கப்பூர் - இந்தியா :

சிங்கப்பூர் - இந்தியா :

முதல் குவாண்டம் இயற்பியல் ஆய்வு என்ற இந்த நாவல் தொழில்நுட்பதிற்கான உண்மையான பாராட்டு சிறிய நாடான சிங்கப்பூரை சேர்ந்ததாக இருக்கலாம். ஏனெனில் இதை துவக்கியது சிங்கப்பூர் தான், இன்னும் சொல்லப்போனால் அதில் இந்தியாவிற்கும் பெரும் பங்குண்டு.!

கலஸ்ஸியா :

கலஸ்ஸியா :

சுமார் 1.65 கிலோ எடைக்கொண்ட கலஸ்ஸியா (Galassia) என்ற நானோ செயற்கைக்கோள் ஆனது சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் கட்டமைக்கப்ட்டது.

அடிப்படை கூறு :

அடிப்படை கூறு :

அது குவாண்டம் தகவல் தொடர்பு மற்றும் செயல்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் அடிப்படை கூறுகளை கொண்ட ஒரு பெட்டி அளவிலான ஒரு அறிவியல் பேலோடு ஆகும்.

போலார் எஸ்.எல்.வி :

போலார் எஸ்.எல்.வி :

அது (கலஸ்ஸியா) டிசம்பர் 2015-ல் இந்தியாவின் போலார் எஸ்.எல்.வியோடு விண்ணில் செலுத்தப்பட்ட ஆறு செயற்கைக்கோள்களில் ஒன்றாகும்.

லேசர் டையோடு  :

லேசர் டையோடு :

ஸ்மால் ஃபோட்டான் எண்டாங்லிங் குவாண்டம் சிஸ்டம் (Small Photon-Entangling Quantum System) என்ற அந்த சிறிய சாதனமானது தன்னுள் ஒரு லேசர் டையோடு, படிகங்கள், கண்ணாடிகள் மற்றும் ஃபோட்டான் போன்றவைகளை கொண்டிருந்தது.

சுற்றுப்பாதை :

சுற்றுப்பாதை :

அதை வெளியிட்ட பல்கலைக்கழக இணையதளத்தின் படி, அந்த செயற்கைக்கோளின் ஸ்மால் ஃபோட்டான் எண்டாங்லிங் குவாண்டம் சிஸ்டம் ஆனது போட்டான்களின் இணைகளை உருவாக்குகிறது.

தரவுகள் :

தரவுகள் :

மேலும் அது வெற்றிகரமாக நிர்ணயிக்கப்பட்ட சுற்றுப்பாதையில் பணியாற்றுகிறது மற்றும் அது சேகரித்த தரவுகள் ஆனது மே 2016-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

குவாண்டம் நெட்வொர்க் :

குவாண்டம் நெட்வொர்க் :

சிங்கப்பூரின் இந்த ஆய்வு தான் முதல் முறையாக நிகழ்த்தப்பட்ட குவாண்டம் தொழில்நுட்ப சோதனையாகும். உடன் இதுவொரு விண்வெளி-உலகம் சார்ந்த குவாண்டம் நெட்வொர்க்கில் நிகழ்த்தப்பட்ட ஒரு முக்கியமான மைல்கல் சோதனை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒளி சக்தி :

ஒளி சக்தி :

சீனா செலுத்திய க்யூயூஇஎஸ்எஸ் (QUESS) செயற்கைக்கோள் ஆனது கலஸ்ஸியா போன்ற ஒளி சக்தி மூலம் தான் இயங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பெரிய தொழில்நுட்ப சாதனை :

பெரிய தொழில்நுட்ப சாதனை :

க்யூயூஇஎஸ்எஸ் (QUESS) செயற்கைக்கோளில் உள்ள ஃபோட்டான்களை விண்வெளியில் இருந்து தரை நிலையத்திற்கு அனுப்பும் தொலைநோக்கிகள் ஒரு பெரிய தொழில்நுட்ப சாதனை தான் ஆனால் குவாண்டம் இயற்பியல் சார்ந்த முதல் முயற்சி சீனாவினுடையது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

இஸ்ரோவின் அபார திட்டம் - 'மை'ப்போட்டு பேசிய மயில்சாமி..!


பேராபத்தை 18-ஆம் நூற்றாண்டிலேயே கணித்த தீர்க்கதரிசி..!


நாஸ்கா கோடு ஒரு விமான ஓடுதளம்..!? பூமிக்கு வருகை தந்தது யார்..?

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

Read more about:
English summary
Quantum satellite: Singapore’s giant leap. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X