நாட்டின் பாதுகாப்பிற்காக விபரீதமான முடிவை எடுத்த புதின்; என்னது அது?

இந்த புள்ளியில், ரஷ்ய அரசாங்கத்திற்கு கட்டுப்படுத்தப்படாத ஊடகங்கள், சமூக நெட்வொர்க்குகள் மற்றும் பிற சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும் என்பது வெளிப்படை.

|

புத்திசாலியும், பலசாலியும் ஆன ஒருவன் ஒரு நாட்டை ஆள்கிறான்? அது எந்த நாடு எனும் கேள்வி கேட்கப்பட்டால், பெரும்பாலோனர்களின் பதில் - ரஷ்யாவாகத்தான் இருக்க கூடும். அதை நாட்டை ஆள்பவன் வேறு யாருமில்லை - விளாமிதிர் புதின்!

நாட்டின் பாதுகாப்பிற்காக விபரீதமான முடிவை எடுத்த புதின்; என்னது அது?

எந்தவொரு நாட்டின் (அமெரிக்க உட்பட) தாக்குதலையும் சமாளிக்கும் அளவிலான ஆயுத பலம், ஆயுத வளர்ச்சி மற்றும் ஆயுத தயாரிப்புகளை தன்வசம் கொண்டுள்ள ரஷ்யா, அதன் பாதுகாப்பை மென்மேலும் உறுதிப்படுத்திக் கொள்ள விரும்புவது போல் தெரிகிறது. அந்த விருப்பத்தின் கீழ், தான் அந்நாட்டின் ஒட்டுமொத்த இணைய சேவையும் முடக்கும் ஒரு பரிசோதனையை செய்து உள்ளது.

அது என்ன பரிசோதனை?

அது என்ன பரிசோதனை?

நம்பினால் நம்புங்கள் ரஷ்யாவின் ஒட்டுமொத்த இணைய சேவையையும் - அதாவது வேர்ல்ட் வைட் வெப் எனப்படும் டபுள்யூ டபுள்யூ டபுள்யூவை (www) துண்டிக்கப்பட்டு- நிறுத்தப்பட்டு, நாட்டின் சைபர் பாதுகாப்பு சோதனை ஒன்று நிகழ்த்தப்பட உள்ளது.

பயிற்சியின் ஒரு பகுதி!

பயிற்சியின் ஒரு பகுதி!

நிச்சயமாக "ரஷ்யாவின் இதயம்" என்று அழைக்கப்படும் கிரெம்ளினில் யாரோ ஒருவர் மிகவும் மோசமான ஹேக் வேலையை செய்து விட்டார் அதனால் தான் ரஷ்யா ஒரு முழு நாளுக்கு இணையத்தை துண்டிக்க உள்ளது என்று நினைக்க வேண்டாம். விடயம் அது அல்ல, உண்மையான காரணம் என்னவெனில், ரஷ்யாவின் சைபர் பாதுகாப்பு பயிற்சியின் ஒரு பகுதியாக தான் இது நிகழ்த்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

புதினின் ஆதரவுடன் உருவான சட்டம்!

புதினின் ஆதரவுடன் உருவான சட்டம்!

உள்ளூர் ரஷ்ய ஊடகங்களின் கூற்றுப்படி (இசெட்டிநெட் - ZDNet) இந்த நகர்வு ஆனது, நாட்டின் கட்டாய டிஜிட்டல் பொருளாதார தேசிய திட்டத்தின் ஒரு பகுதியாகும். இது 2018 ஆம் ஆண்டுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட, மற்றும் ஜனாதிபதி விளாடிமிர் புதினின் ஆதரவுடன் உருவான ஒரு சட்டமாகும்.

ஆபத்தில் கைகொடுக்கும்!

ஆபத்தில் கைகொடுக்கும்!

இந்த சட்டம் அல்லது நடவடிக்கை ஆனது ரஷ்யாவின் இணைப்பு சுயநிர்ணயத்தை உறுதிப்படுத்துகிறது. அதாவது வேறு எதாவது ஒரு நாடு, ரஷ்யாவின் இணையத்தை ஒட்டுமொத்தமாக முடக்கும் நோக்கத்தின் கீழ் சைபர் தாக்குதல் நடத்தினால், அதில் எள்ளளவும் சிக்கி கொள்ளாமல் இருக்க ரஷ்யாவின் இந்த இணைப்பு சுயநிர்ணயம் கைகொடுக்கும்.

இந்த இணைய சேவை துண்டிப்பு ஆனது ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு முன் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பரிசோதனையின் கீழ், ரஷ்யாவின் இணையம் மற்றும் வலைத்தளங்களில் ரஷ்ய மொழி சமூகமான ரனேட்டின் முதுகெலும்பு (பலம்) பரிசோதிக்க படும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

உள்ளூர் இணையதள சேவை என்னவாகும்?

உள்ளூர் இணையதள சேவை என்னவாகும்?

இந்த சோதனையின் போது, ​​அனைத்து உள்ளூர் இணையதள போக்குவரத்தும் நாட்டிற்குள்ளேயே நடக்கும். அவைகள் தொலைதொடர்பு கண்காணிப்பான ரோச்கோநட்ஸோர் வழியாக அரசாங்க ஒப்புதல் பெற்ற புள்ளிகளின் கீழ் திசைதிருப்படும். இந்த சோதனையின் போது, நேகமாக இண்டர்நெட் ட்ராஃபிக் மற்றும் நிறைய நிறுவனங்களின் இலாபம் ஆகியவற்றில் பெருங்குழப்பம் மற்றும் சரிவு ஏற்படும். ஆனால் இதில் இருந்து தப்பிக்க முடியாதபடி, இந்த சோதனை நடைமுறைக்கு ஒத்துப்போக சொல்லி அனைவரும் நிர்பந்திக்கப்பட்டுள்ளனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சீனா மற்றும் அதன்

சீனா மற்றும் அதன் "கிரேட் ஃபயர்வால்" போன்ற!

இந்த சோதனையானது ரஸ்யாவின் இறுதி திட்டத்தின் ஒரு சிறிய பகுதி மட்டுமே ஆகும். வருகிற 2020 ஆம் ஆண்டளவில் ரஷ்யா தனது இணையத்தை முழுமையாகத் திசைதிருப்ப விரும்புகிறது, அதாவது சீனா மற்றும் அதன் "கிரேட் ஃபயர்வால்" போன்ற ஒன்றை உருவாக்க விரும்புகிறது. இப்போது வரையிலாக, கடந்த ஐந்து ஆண்டுகளாக அபிவிருத்தியில் உள்ள ஒரு டொமைன் பெயர் அமைப்பை (DNS) பயன்படுத்தி, குறிப்பிட்ட இணைப்புகளை மட்டுமே இணைக்க அனுமதிக்கும்.

விபரீதமான ஹேக்கர்களிடம் இருந்து!

விபரீதமான ஹேக்கர்களிடம் இருந்து!

இந்த புள்ளியில், ரஷ்ய அரசாங்கத்திற்கு கட்டுப்படுத்தப்படாத ஊடகங்கள், சமூக நெட்வொர்க்குகள் மற்றும் பிற சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும் என்பது வெளிப்படை. ரஷ்யா இது போன்ற "விசித்திரமான" நடவடிக்கையில் ஈடுபடுவது ஒன்றும் புதிது அல்ல என்பதும், இந்த குறுகிய கால நடவடிக்கை ஆனது மிகவும் விபரீதமான ஹேக்கர்களிடம் இருந்து ரஷ்யாவை பாதுகாக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 பழிவாங்கும் தாக்குதல்!

பழிவாங்கும் தாக்குதல்!

மேலும் ரஷ்யா, உலகின் மிக தீவிரமாக இணைய போர்களை சந்திக்கும் ஒரு குழுவை உருவாக்க வேண்டும் என்று கருதுகிறது. நிச்சயமாக, அந்த குழு ஆனது பழிவாங்கும் தாக்குதல்களைத்தான் அதிகம் சந்திக்கும் என்பதில் ஐயமில்லை.

கடுமையான கொள்கை!

கடுமையான கொள்கை!

நாட்டின் நீண்டகால இலக்குகளை பொறுத்தவரையில், ரஷ்யா ஆனது விளாடிமிர் புதின்னின் நுண்ணோக்கி கட்டுப்பாட்டின் கீழ் கடுமையான கொள்கைகளை கொண்டுள்ளது. அந்த கொள்கைகளில் இதுவும் ஒன்றாகிறதா? அல்லது இதுதான் பிரதானமாகிறதா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Best Mobiles in India

English summary
Putin Is Disconnecting Russia From The Internet, To Fully Check His Nation's Cyber Defense : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X