Home
Scitech

மனிதர்களுக்கு பதிலாக பலியிடப்பட்ட நாய்க்குட்டிகள்! பழங்கால சீன கல்லறையில் கண்டுபிடிப்பு..

ஷாங் வம்சம் சீனாவை 1766 மற்றும் கிமு 1046 க்கு இடைப்பட்ட காலத்தில் ஆண்டது.

நீண்ட காலங்களுக்கு முன்பு பல கலாச்சாரங்களில், மனிதர்கள் மற்றும் விலங்குகளை பலியிடும் ஒரு முக்கிய சடங்கு இருந்தது. சீனாவின் பழங்கால ஷாங் வம்சத்தின் போது ஆறு மாத வயதுடைய இளம் நாய்க்குட்டிகள் பலியிடப்பட்டு அல்லது சிலசமயங்களில் உயிருடன் மனிதர்களின் கல்லறைகளில் புதைக்கப்பட்டுள்ளதை ஆராய்ச்சியாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.

மனிதர்களுக்கு பதிலாக பலியிடப்பட்ட நாய்க்குட்டிகள்!

ஷாங் வம்சம் சீனாவை 1766 மற்றும் கிமு 1046 க்கு இடைப்பட்ட காலத்தில் ஆண்டது. அந்த சமூகத்தில் விலங்குகள் மற்றும் மனிதர்களை பலியிடும் வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டது மற்றும் பலியிடப்பட்ட பின்னர் வழக்கமாக இறந்தவர்களின் கல்லறைகளில் புதைக்கப்பட்டன.


பன்றிகளும் நாய்களும் பொதுவாக மதரீதியிலான பலியிடல் சடங்குகளுக்கு பயன்படுத்தப்படும் விலங்குகளாகும். காலப்போக்கில், சீனாவிற்கும் மேற்கு யூரேசியாவிற்கும் இடையே வர்த்தகம் பெருகியதால், செம்மறி, ஆடு, மாடு போன்ற கால்நடைகள் மிகவும் பிரபலமாகிவிட்டன.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களான ரோட்ரிக் கேம்பெல் மற்றும் ஹீபெங் லீ ஆகியோர், சீனாவில் கடந்த காலங்களில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் பழைய தொல்லியல் தரவு ஆராய்ந்த போது, பலியிடப்பட்டு புதைக்கப்பட்ட பெரும்பாலான நாய்கள் இறப்பு போது இளம் நாய்க்குட்டிகள் என்று கண்டறியப்பட்டது. பலியிடப்பட்டு புதைக்கப்பட்ட நாய்கள் அனைத்தும் அதன் உரிமையாளர்களால் அன்பான செல்லப்பிராணிகளாக வளர்க்கப்பட்டு அவர்கள் இறந்தபோது அவர்களுடனே புதைக்கப்பட்டதாக கருதப்பட்டது.

மேலும் பலியிடப்பட்ட அந்த இளம் நாய்க்குட்டிகளை காணும் போது, இவை பலியிடுவதற்காகவே பிரத்தியேகமாக வளர்க்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.
"ஏன் அந்த அழகான சிறிய நாய்க்குட்டியை பலியிடுகிறீர்கள்?" என கேள்வியெழுப்புகிறார் நியூயார்க் பல்கலைக்கழகத்தின் பண்டைய உலக ஆராய்ச்சி பிரிவின் தொல்பொருள் நிபுணர் கேம்ப்பெல்.


ஆர்கியாலஜிகல் ரிசர்ச் இன் ஆசியா என்ற ஜேர்னலில் வெளியான இந்த தொல்பொருள் ஆராய்ச்சியில், மனித கல்லறைகளில் காணப்படும் விலங்கு எலும்புகளின் பகுப்பாய்வு நடத்தப்பட்டது. அவற்றில் 73 சதவிகித புதைக்கப்பட்ட நாய்க்குட்டிகள் இறக்கும்போது ஒரு வயதிற்கு குறைவானவை. மேலும் 37 சதவிகித குட்டிகள் 6 மாதங்கள் கூட தாண்டாதவை.வெறும் 8 சதவிகிதம் மட்டும் நன்கு வளர்ந்த நாய்களின் எலும்புகள். அந்த நாய்களை செல்லப்பிராணிகளாக வைத்திருந்தால், அவை அனைத்து வெவ்வேறு வயதுடையதாக இருந்திருக்கவேண்டும் என்கிறார் கேம்ப்பெல்.

மனிதர்களுக்கு பதிலாக பலியிடப்பட்ட நாய்க்குட்டிகள்!

ஆன்யாங்க் என்ற தற்போதைய நவீன நகருக்கு அடியில் உள்ள ஜியோமின்டின் என்ற பகுதியில் உள்ள 2000 கல்லறை தளங்களை தொல்லியல் துறையினர் ஆராய்ந்தபோது, அவற்றில் மூன்றில் ஒரு பகுதி இடங்களில், பலியிடப்பட்ட நாய்களின் எலும்புகள் கிடைத்துள்ளன. இந்த கண்டுபிடிப்புகள் மூலம் ஏன் எதற்காக ஷாங் வம்சத்தினர் நாய்களை பலியிட்டனர் என்ற சில கோட்பாட்டு கேள்விகள் எழுந்துள்ளன.
Best Mobiles in India

English summary
Puppies Found In Ancient Chinese Tombs Were Used As Cheap Sacrifices In Lieu Of Humans: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X