சூரியனுக்கே செல்லும் நாசா விண்கலம்.! பேர கேட்டாலே சும்மா அதிருதல்ல.!

மனிதன் கற்பனைக்கு எட்டாமல் கனவு கண்டதை தற்போது கண்முன்னாள் நடத்தி காட்டிக் கொண்டிருகின்றான். நம்மால் முடியாது என்பது அல்ல. நம்மால் எதுவும் முடியும். ஆதிகாலத்தில் இருந்த மனிதன் நாகரீகமாக வளர தொடங்கினா

|

மனிதன் கற்பனைக்கு எட்டாமல் கனவு கண்டதை தற்போது கண்முன்னாள் நடத்தி காட்டிக் கொண்டிருகின்றான். நம்மால் முடியாது என்பது அல்ல. நம்மால் எதுவும் முடியும். ஆதிகாலத்தில் இருந்த மனிதன் நாகரீகமாக வளர தொடங்கினான்.

சூரியனுக்கே செல்லும் நாசா விண்கலம்.! பேர கேட்டாலே சும்மா அதிருதல்ல.!

அவ்வாறு நாகரீகம் வளர தொடங்கிய போது, கற்காலத்தில் கலப்பையைம் கத்தியும் கண்டுபிடித்து விவசாயம் செய்து வாழ பழகினான். பிறகு படிப்பாடியாக விஞ்ஞான உலகத்திற்கு அடியெடுத்து வைத்தான். இதன்பிறகு ஒவ்வொரு கண்டுபிடிப்பாக நிகழ்த்தினான் மனிதன்.

இதுஎல்லாம் பிரமிப்பே?

இதுஎல்லாம் பிரமிப்பே?

தற்போது உள்ள யுகத்தில் இருந்து கொண்டு சற்று பின்னோக்கி சென்று பார்த்தால் மனித இனமா இப்படி வளர்ந்து இருக்கிறது நமக்கே பிரமிப்பு ஊட்டுகிறது. இந்த அளவுக்கு மனித இனம் விஞ்ஞான வளர்ச்சியின் வேகமாக சென்று கொண்டிருக்கிறது.

வேற்று நாடுகளை கண்டுபிடித்தான்:

வேற்று நாடுகளை கண்டுபிடித்தான்:

இயற்கையை சார்ந்து இருந்த மனிதன் அறிவால் உயர்தான். பிறகு இயற்கையிடம் இருந்த பொருட்களை வைத்து அதனையே வளைத்து வாழ்ந்தான். பிறகு ஓட்டங்களை நவீன மாக்கி அதன் மூலம் பயணம் செய்து மற்ற நாடுகளையும் கண்டுபிடித்தான். பிறகு தொழிற்சாலை அமைத்து இயந்திரங்களை தயாரித்தும், அதற்கும் மேலாக கணிணியை கண்டறிந்து பல்வேறு வளர்ச்சிக்கும் பயன்படுத்தி வருகிறான் மனிதன்.

விண்வெளி ஆராய்ச்சி:

விண்வெளி ஆராய்ச்சி:

சந்திரன், புதன், செவ்வாய், வெள்ளி, சனி உள்ளிட்ட கிரங்களை மனிதன் ஆய்வு செய்துள்ளான். இந்த விஞ்ஞான உலகத்தில் நவீனமாக கணிணி உதவியோடு செயற்கைகோள்களையும் அனுப்பியும் ஆராய்ந்து உள்ளான். சந்திரன், செவ்வாய் உள்ளிட்ட கிரங்களுக்கும் விண்வெளிக்கும் சென்று அங்கு வசிக்கும் சூழ்நிலையும் உருவாக்கியுள்ளனான். தற்போது, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, இந்தியா உள்ளிட்ட நாடுகள் விண்வெளிக்கு அதிமாக செயற்கை கோள்களையும் அனுப்பி ஆய்வு செய்து வருகின்றன.

சூரியனின் வெப்பநிலை:

சூரியனின் வெப்பநிலை:

சூரியனை சார்ந்த கோள்களுக்கு செயற்கைகோள்களும் விண்கலத்தையும் அனுப்பி செய்து இருந்தாலும் சூரியனில் உள்ள உச்ச வெப்ப நிலை காரணமாக யாரும் அங்கு செல்ல நெருங்க கூட முடியவில்லை. தற்போது நெருப்புடா நெருங்கறன் டா பார்ப்போம்னு சொல்லி அமெரிக்காவின் நாசாவின் விண்கலம் செல்கிறது.

பார்க்கர் சோலார் ப்ரோப்:

பார்க்கர் சோலார் ப்ரோப்:

சூரியனில் சுமார் 1,337 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை நிலவும் சூரியன் சுற்றுவட்டபாதைக்கு மணிக்கு 7 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் வந்து ஆய்வு செய்யும் பார்க்கர் சோலார் ப்ரோப் என்னும் விண்கலம் வரும் 23ம் தேதி நாசா விண்வெளி மையம் செலுத்த திட்டமிட்டுள்ளது.

2024ம் ஆண்டு சென்றுவிடும்:

2024ம் ஆண்டு சென்றுவிடும்:

இதுவரை எந்த விண்கலமும் நெருங்க முடியாத கொரோனா என்னும் சூரியனின் வெளியடுக்கை இந்த விண்கலம் சுமார் 6 ஆண்டுகளில், அதாவது 2024ம் ஆண்டில் சென்று விடும். அங்கு இருந்து பூமியை தாக்கும் சூரிய காற்று எப்படி உருவாகிறது என்று கண்டறிவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Public Invited to Come Aboard NASA s First Mission to Touch the Sun: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X