30 செயற்கைகோள்களை வெற்றிரமாக நிலைநிறுத்திய இஸ்ரோ.!
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டரி கோட்ட சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1 ஏவு தளத்தில் உள்ள பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட் இன்று 9.57 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா,
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா கோட்ட சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1 ஏவு தளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட்
இன்று 9.57 காலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, கொலம்பியா, பின்லாந்து, மலேசியா, நெதர்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளை சேர்ந்த 1 மைக்ரோ, 29 நானோ வகையை கொண்ட 30 வணிக ரீதியிலான செயற்கைகோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.

இஸ்ரோ வர்த்தகதளம்:
இஸ்ரோ நிறுவனம் வரும் வியாழனன்று ஒரே நேரத்தில் 30 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது. இதில் நானோ செயற்கைக்கோள்கள், சிறிய அளவிலான செயற்கைக்கோள்களும் அடங்கும். மொத்தம் 30 சாட்டிலைட்டுக்களில் 23 செயற்கைக்கோள்கள் அமெரிக்காவுடையது. இவை அனைத்தும் PSLV C43 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வியாழக்கிழமை காலை 9.59 மணியளவில் விண்ணில் செலுத்தியது.

30 செயற்கைகோள்:
சிறிய அளவிலான 30 நானோ செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த செயற்கைக்கோள்கள் அனைத்தும் ஹைப்பர்ஸ்பெக்ட்ரல் இமேஜிங் சாட்டிலைட் ஆகும். (HyperSpectral Imaging Satelite ,HySIS). அதாவது நிறமாலை செயற்கைக்கோள்கள். பூமியில் இருந்து 623 கிமீ தொலைவில் விண்ணில் நிலை நிறுத்தப்படும் இந்த செயற்கைக்கோள்கள், பூமியை நிறமாலை மின்காந்தஅலை உதவியுடன் படம்பிடிக்கும்.

பயன்பாடுகள்:
இதன் மூலம் பூமியில் உள்ள பொருட்களை மிகதுல்லியமாக அதன் அளவு, பரிமாணம், தட்பவெப்பம் உள்ளிட்ட தகவல்களை பெற முடியும். குறிப்பாக வேளாண்மை, காட்டுப்பகுதி, கடற்கரை பகுதி, நில வளம், நீர் வளம் இன்னும் பிற இயற்கை வளங்கள் குறித்த தகவல்களை தொலைத்தூரத்தில் இருந்து கொண்டே பெற முடியும்.

பிரதமர் மோடி வாழ்த்து:
இஸ்ரோ சார்பில் வெற்றிகரமாக விண்ணில் ராக்கெட்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இச்செய்தியறிந்த மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், அவர்களுக்கு டுவிட்டரில் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

இஸ்ரோ தலைவர் சிவன்:
இத்தகைய செயற்கைகோள்களை உருவாக்கப் பயன்படுத்தப்படும் கம்யூட்டர் சிப் உள்ளிட்ட கருவிகள் அனைத்தும் சண்டீகரில் தயாரிக்கப்பட்டது. என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications