நாசா ஓரமாபோய் விளையாடு: உலக அரங்கில் இந்தியாவை தலைநிமிரச் செய்த இஸ்ரோ & டிஆர்டிஓ.!

பூமியின் சுற்றுப்பாதையில் அச்சுறுத்தலாக இருப்பவற்றை இலக்காககொள்ளும் வகையிலான ஏவுகணைகளை வெற்றிகரமாக இவ்விரு அமைப்புகளும் பரிசோதித்துள்ளன.

|

நேற்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ (ISRO) மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) இணைந்து விண்வெளி ஆய்வில் மற்றொரு மைல்கலை அடைந்து இந்திய நாட்டிற்கு பெருமை தேடித்தந்துள்ளனர்.

உலக அரங்கில் இந்தியாவை தலைநிமிரச் செய்த இஸ்ரோ & டிஆர்டிஓ

பூமியின் சுற்றுப்பாதையில் அச்சுறுத்தலாக இருப்பவற்றை இலக்காககொள்ளும் வகையிலான ஏவுகணைகளை வெற்றிகரமாக இவ்விரு அமைப்புகளும் பரிசோதித்துள்ளன. மிஷன் சக்தி என்ற ASAT தொழில்நுட்பத்தின் மூலம் நம் நாடு விண்வெளி வல்லரசு ஆகியுள்ளது.

விண்வெளி ஆராய்ச்சி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியவற்றில் விஞ்ஞான மற்றும் மூலோபாய முன்னேற்றங்களில் இந்தியாவை தலைநிமிர வைத்த இஸ்ரோ மற்றும் டி.ஆர்.டி.ஓ ஆகியவற்றின் சமீபத்திய முக்கிய பங்களிப்புகளை நாம் இங்கே காணலாம்.

 1.ரோபோ காவல்

1.ரோபோ காவல்

2017 ஆம் ஆண்டில் டி.ஆர்.டி.ஓ ரோபோசென் என்ற ரோபோவை வெளியிட்டது. இது முக்கியமான அரசாங்க அல்லது இராணுவ பகுதிகளில் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படக்கூடியது. மொபைல் ஆட்டோமேசன் மூலம் இயங்கும் இதை தொலைதூரமாக கட்டுப்படுத்தவும், ரோந்து பாதையில் பயன்படுத்தவும் முடியும். பின்னர் அதன் கேமரா மற்றும் சென்சார்களை பயன்படுத்தி சந்தேகத்திற்கிடமான பொருள்களைப் போன்றவை புகைப்படம் எடுத்து அருகில் உள்ள வயர்லெஸ் கட்டளை மையத்திற்கு அனுப்பும்.

2.தானாக வெளியேறும் கருப்பு பெட்டி

2.தானாக வெளியேறும் கருப்பு பெட்டி

விமான விபத்து ஏற்பட்டால் அதற்கான காரணத்தைத் தீர்மானிக்க உதவும் கருப்பு பெட்டியை கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமில்லை. எனவே விபத்தின் போது தானாக வெளியேறும் வகையில் தண்ணீருடன் தொடர்பு கொள்ளும்போது வெடித்து வெளியேறும் திறன் கொண்ட கருப்புபெட்டியை டிஆர்டிஓ கண்டுபிடித்துள்ளது.

3. ஆளில்லா இராணுவ டாங்கி

3. ஆளில்லா இராணுவ டாங்கி

அதே வருடம் பாதுகாப்பு குழு முந்த்ரா எனும் ஆளில்லா பீரங்கி டாங்கியை நாட்டிற்கு அர்பணித்தது. கண்காணிப்பு கண்டறிதல் மற்றும் மறுசீரமைப்புக்கு என மூன்று வகையிலான இந்த இராணுவ டாங்கிகளை,15கிமீ தொலைவில் இருந்து இயக்கலாம்.

4.ரஸ்டம் ட்ரோன்

4.ரஸ்டம் ட்ரோன்

கடந்த ஆண்டு தொடக்கத்தில் முழுதும் உள்நாட்டிலேயே தய்ரிக்கப்பட்ட இந்தியாவின் இராணுவ ட்ரோனை தனது முதல் விமானத்தில் வெற்றிகரமாக பரிசோதித்தது டிஆர்டிஓ. ரஸ்டம் 2 என பெயரிடப்பட்டுள்ள இது, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ட்ரோன்களுக்கு மாற்றாக ஆளில்லா வான்வழி கண்காணிப்பு வாகனமாக பயன்படுத்தப்படவுள்ளது.

5.எமிசேட்

5.எமிசேட்

அடுத்த மாதம் விண்ணில் செலுத்தப்படவுள்ள எமிசேட், டிஆர்டிஓ-வின் மற்றொரு மைல்கல் ஆகும். நிலப்பகுதி வரைபடங்களை சேகரிப்பதை தவிர, எதிரிநாட்டு தகவல்தொடர்பு அமைப்புகளை கண்டறியும் திறனையும் கொண்டுள்ளது இந்த செயற்கைக்கோள்.

6.மங்கள்யான் மிஷன்

6.மங்கள்யான் மிஷன்

இது செவ்வாய் சுற்றுப்பாதை மிஷன் (எம்ஓஎம்) மட்டுமில்லாமல், விண்வெளிக்கு இந்தியாவின் முதல் பெரிய விண்கலம் என்பதால் மற்ற அனைத்து சாதனைகளையும் முறியடித்தது. இதுவரையிலான செவ்வாய் கிரக பயணத்தில் மிகவும் மலிவான விண்வெளிப் பயணமாக இதற்கு இஸ்ரோ, தனது 460 கோடி ரூபாய் பட்ஜெட்டில் வெறும் 2.61 கோடியை மட்டுமே செலவளித்தது.

7. ஜிசாட்

7. ஜிசாட்

இஸ்ரோ அனுப்பிவரும் ஜிசாட் செயற்கைக்கோள் மூலம் இந்தியா 100Gbps இணைய வேகத்தை பெற முடியும். கூடுதலாக இந்திய இராணுவத்தின் தொலைதொடர்பு மற்றும் கண்காணிப்பு திறன்களை அதிகரிக்கும் வகையில் இந்த வலையமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

8.ஹைசிஸ்(HySIS)

8.ஹைசிஸ்(HySIS)

இந்தியாவின் முதல் ஹைபர்ஸ்பெக்டரல் இமேஜிங் சேட்டிலைட் கடந்த ஆண்டின் பிற்பகுதியில் இஸ்ரோவால் செலுத்தப்பட்டது. மேம்பட்ட புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான இதன் மூலம் பூகம்பம், வேளாண்மை, வனவியல், மண் ஆய்வு, புவியியல், கடலோர மண்டலம், உள்நாட்டு நீர் ஆய்வுகள், சுற்றுச்சூழல் ஆய்வுகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து மாசுபாட்டைக் கண்டறிதல், இராணுவ கண்காணிப்பு போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

9. வெள்ளி செயற்கைகோள்

9. வெள்ளி செயற்கைகோள்

இஸ்ரோ திட்டமிட்ட பணிகளில் 2023ல் வெள்ளி கிரகத்திற்கு செயற்கைக்கோள் அனுப்புவதும் ஒன்றாகும். அதை முடிந்தவரை மிகவும் குறைந்த பட்ஜெட்டில் அனுப்ப திட்டமிட்டுள்ளதால், மற்ற நாடுகளையும், ஆராய்ச்சி குழுக்களையும் அந்த ராக்கெட்டில் தங்கள் சொந்த செயற்கைக்கோள்களை அனுப்ப இஸ்ரோ அழைப்புவிடுத்துள்ளது.

10.கனன்யான் மிஷன்

10.கனன்யான் மிஷன்

இதற்கு முன்பாக இன்னும் வெறும் 3 ஆண்டுகளில் 2022 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் மனிதர் விண்வெளிப் பயணத்தை திட்டமிட்டுள்ளது இஸ்ரோ. வியோம்நாட்ஸ் என்ற மூன்று மனிதர்களின் குழுவை (ஒரு பெண் உட்பட) இது பூமியின் சுற்றுப்பாதைக்கு அழைத்து சென்று, குறைந்தப்டசம் ஒரு வாரம் தங்கியிருந்து பின்னர் பூமிக்குத் திரும்ப அழைத்துவரும்.

11.மிஷன் சக்தி

11.மிஷன் சக்தி

இறுதியாக நேற்றைய மிஷன் சக்தி அறிவிப்பு. டிஆர்டிஓ மற்றும் இஸ்ரோ வெற்றிகரமாக அக்னி5 ஏவுகணை மூலம் 300 கி.மீ. தொலைவில் பூமியில் சுற்றுப்பாதையில் உள்ள இந்திய செயற்கைகோளை சுட்டுவீழ்த்தியுள்ளது. நகரும் புல்லட்டை மற்றொரு புல்லட் கொண்டு சுடுவதை விட கடினமான இந்த சாதனையைத் நிகழ்த்தியுள்ளது இந்தியா. இதன்மூலம் அமெரிக்க, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் மட்டுமே இருந்த விண்வெளி வல்லரசுகள் எலைட் கிளப்பில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Proud Of ISRO DRDO 11 Times India s Scientists Made All Of Us Truly Proud On World Stage: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X