அடடே இவ்வளவு அழகா.. இஸ்ரோ செயற்கைக்கோள் அனுப்பிய படத்தைப் பகிர்ந்த பிரதமர் மோடி.!

|

இஸ்ரோ அமைப்பு தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் இஸ்ரோ அமைப்பு விண்ணுக்கு அனுப்பிய இஓஎஸ்-06 செயற்கைக்கோள் எடுத்த படங்களைப் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார். மேலும் இதுசார்ந்த விவரங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

இஓஎஸ்-06 செயற்கைக்கோள்

இஓஎஸ்-06 செயற்கைக்கோள்

அதாவது கடந்த 26-ந் தேதி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து இஓஎஸ்-06 செயற்கைக்கோள் உட்பட சில செயற்கைக்கோள்களை ஏவி இருந்தது.

1.117 கிலோ எடை கொண்டது

குறிப்பாக இஓஎஸ்-06 என்பது ஓசன்சாட் வகை செயற்கைக்கோளில் 6-வது தலைமுறையைச் சேர்ந்ததாகும். மேலும் இந்த செயற்கைக்கோள் 1.117 கிலோஎடை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

குலசாமி பேரு ஆப்பிள்னு சொல்லுவாங்க போல! குலசாமி பேரு ஆப்பிள்னு சொல்லுவாங்க போல! "அவதாரம் எடுத்து மனிதர்களை காப்பாற்றும் Apple" விஷயத்த பாருங்க!

ஒளியியல் மாற்றங்கள்

அதேபோல் கடல் நிறம், மேற்பரப்பு, வெப்பநிலை, காற்றின் திசை மாறுபாடுகள், வளிமண்டலத்தின் நிகழும் ஒளியியல் மாற்றங்கள் உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளை இந்த செயற்கைக்கோள் தொடர்ந்து கண்காணித்து தரவுகளை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

48,500 ஆண்டு பழமையான ஸோம்பி வைரஸ் கண்டுபிடிப்பு.! பதட்டத்தில் மக்கள்.! இது ஆபத்தானதா?48,500 ஆண்டு பழமையான ஸோம்பி வைரஸ் கண்டுபிடிப்பு.! பதட்டத்தில் மக்கள்.! இது ஆபத்தானதா?

 இஓஎஸ்-06 செயற்கைக்கோள்

இந்நிலையில் இஓஎஸ்-06 செயற்கைக்கோள் எடுத்த படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார் பிரதமர் மோடி. அதாவது விண்வெளி தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள இந்த முன்னேற்றத்தின் மூலம் புயல்களைச் சிறப்பாகக் கணிக்கவும், கடலோரப் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் முடியும் என்று தெரிவித்தார்.

மேலும் குஜராத் மாநிலத்தின் நான்கு செயற்கைக்கோள் படங்களைப் பகிர்ந்து தான் பிரதமர் மோடி இதனைத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட இஓஎஸ்-06 செயற்கைக்கோள் எடுத்த ஆச்சரியமளிக்கும் படங்களை நீங்கள் பார்த்தீர்களா? குஜராத்தின் சில அழகான படங்களைப் பகிர்கிறேன்" எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திரயான் 3

சந்திரயான் 3

அதேபோல் நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்கான சந்திரயான் 3 விண்கலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார். ஏற்கனவே நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்கு சந்திரயான் 2 எனும் விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ 2019-ம் ஆண்டு விண்ணில் ஏவியது. ஆனால் இந்த சந்திரயான் 2 விண்கலத்தின் லேண்டர் கலன் மட்டும் தொழில்நுட்பக் கோளாறால் வேகமாக சென்று நிலவின் தரையில் மோதி உடைந்ததாகக் கூறப்படுகிறது.

மொபைல் Settings-ல் இதை ON பண்ணாம 5G டேட்டாவை யூஸ் பண்ணிடாதீங்க.. கதறும் Jio மற்றும் Airtel பயனர்கள்!மொபைல் Settings-ல் இதை ON பண்ணாம 5G டேட்டாவை யூஸ் பண்ணிடாதீங்க.. கதறும் Jio மற்றும் Airtel பயனர்கள்!

ஆர்பிட்டர் நிலவின் சுற்றுப்பாதை

இருந்தபோதிலும் சந்திரயான் 2 விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர் நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. மேலும் ஆர்பிட்டர் நிலவைச் சுற்றிவந்து ஆய்வு செய்வதுடன், பல அசத்தலான புகைப்படங்களையும் அனுப்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திராயன் 3 விண்கலம்

சந்திரயான்-2 திட்டத்திலிருந்து கற்றுக்கொண்ட படிப்பினை, தேசிய அளவிலான நிபுணர்களின் ஆலோசனை அடிப்படையில், நிலவை ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள சந்திராயன் 3 விண்கலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர்சோம்நாத் கூறினார்.

 இஸ்ரோ தலைவர்

சமீபத்தில் செய்தியாளர்களுடன் பேசிய இஸ்ரோ தலைவர், நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 3 விண்கலம் தயாராக உள்ளது. பின்பு இந்த சந்திரயான் 3 விண்கலம் ஆண்டு ஜூன் மாதம் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக சந்திரயான் 2 இல் ஏற்பட்டபிரச்சனைகள் இதில் இருக்காது எனவும், சந்திராயன் 3 மிகவும் வலிமையானதாக உருவாக்கி இருப்பதாகவும், விண்கலத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Best Mobiles in India

English summary
Prime Minister Modi shared images of Gujarat taken by ISRO satellite: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X