Home
Scitech

அண்டை நாடுகள் கப்சிப்.. 1000 கிலோ.. 500 கிமீ பாயும்.. 2 முறை.. Pralay ஏவுகணை சோதனை வெற்றி!

டிஆர்டிஓ (DRDO) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் புதிதாக உருவாக்கப்பட்ட பிரலே ஏவுகணை (Pralay Missile) ஆனது 2 முறை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த எக்ஸ் தள பதிவில், டிஆர்டிஓ ஆனது ஜூலை 28 மற்றும் 29 தேதிகளில் ஒடிசா கடற்கரையில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இருந்து பிரலே ஏவுகணையின் இரண்டு தொடர்ச்சியான, வெற்றிகரமான விமான சோதனைகளை நடத்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2 முறை.. Pralay ஏவுகணை சோதனை வெற்றி!

சோதனை செய்யப்பட்ட 2 பிரலே ஏவுகணைகளுமே திட்டமிடப்பட்ட பாதையை பின்பற்றி துல்லியமாக இலக்கை அடைந்து, அனைத்து சோதனை நோக்கங்களையும் பூர்த்தி செய்ததாக டிஆர்டிஓ ஒரு எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளது.

பிரலே ஏவுகணை அமைப்பின் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச தூர திறன்களை சரிபார்க்க உதவும் பயனர் மதிப்பீட்டு சோதனைகளின் ஒரு பகுதியாகவே இந்தசோதனைகள் நடத்தப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பிரலே ஏவுகணை ஆனது 500 முதல் 1,000 கிலோ வரை சுமக்கும் திறன் கொண்ட ஒரு குறுகிய தூர தரையிலிருந்து சர்பேஸ்-டூ-சர்பேஸ் ஏவுகணையாகும். இது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட திட எரிபொருள் செமி-பாலிஸ்டிக் ஏவுகணையும் கூட, இது உயர் துல்லியத்தை உறுதி செய்வதற்காக அதிநவீன வழிகாட்டுதல் மற்றும் வழிசெலுத்தலை பயன்படுத்துகிறது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஏவுகணை ஆனது கன்வென்ஷ்னல் வார்ஹெட்ஸ்களை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் இது 150 முதல் 500 கிமீ வரை பாய்ந்து சென்று தாக்கும் திறன் கொண்டது

பிரலே ஏவுகணை திட்டத்தில் ஈடுபட்டுள்ள டிஆர்டிஓ, ஆயுதப்படைகள் மற்றும் தொழில்துறை கூட்டாளர்களை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டினார். மேலும் நவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய இந்த ஏவுகணை ஆயுதப்படைகளின் திறன்களை மேம்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் செயலாளர் மற்றும் டிஆர்டிஓ தலைவர் ஆன டாக்டர் சமீர் வி காமத், பிரலே ஏவுகணை குழுக்களை வாழ்த்தினர், இந்த பேஸ்-1 விமான சோதனைகள் வெற்றிகரமாக நிறைவடைந்திருப்பது, எதிர்காலத்தில் ஆயுதப்படைகளில் பிரலே ஏவுகணை அமைப்பை சேர்ப்பதற்கு வழி வகுக்கும் என்றும் கூறியுள்ளார்.

ஜூலை 25 ஆம் தேதிக்கு முன்னதாக, ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூலில் உள்ள தேசிய திறந்தவெளி பகுதியில் (NOAR) ஆளில்லா வான்வழி வாகனம் மூலம் ஏவப்படும் துல்லிய வழிகாட்டப்பட்ட ஏவுகணை ஆன யுஎல்பிஜிஎம்-வி3 ஒன்றும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது; அதையும் டிஆர்டிஓ வெற்றிகரமாக நடத்தியது.

யுஎல்பிஜிஎம்-வி3 என்பது டிஆர்டிஓ-வால் உருவாக்கப்பட்ட முந்தைய யுஎல்பிஜிஎம்-வி2 ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் ஆகும். அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, இந்த ஏவுகணை பல்வேறு இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட உயர்-வரையறை, டூயல்-சேனல் தேடுபொறியை கொண்டுள்ளது மற்றும் சமவெளி மற்றும் உயரமான பகுதிகளில் ஏவப்படும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பகல்-இரவு திறன் மற்றும் ஏவப்பட்ட பிறகு இலக்குகளை புதுப்பிப்புகளுக்கான இருவழி தரவு இணைப்பையும் கொண்டுள்ளது. இது பகல்-இரவு திறன் மற்றும் ஏவப்பட்ட பிறகு இலக்குகளை புதுப்பிப்புகளுக்கான இருவழி தரவு இணைப்பையும் கொண்டுள்ளது.

இந்த ஏவுகணை மூன்று மாடுலர் வார்ஹெட் விருப்பங்களை வழங்குகிறது: ஒன்று - ரோல்டு ஹோமோஜெனியஸ் ஆர்மர் (Rolled homogeneous armour) மற்றும் எக்ஸ்ப்ளோசிவ் ரியாக்டிவ் ஆர்மர் (Explosive reactive armour (ERA)உடன் கூடிய நவீன கவச வாகனங்களை (Modern armoured vehicles) அழிக்க உதவும் ஒரு ஆன்ட்டி ஆர்மர் வார்ஹெட் (Anti-armour warhead).

இரண்டாவது - பதுங்கு குழி எதிர்ப்பு பயன்பாட்டிற்கான ஊடுருவி தாக்கும் வார்ஹெட் (Penetration cum blast warhead for anti-bunker). மூன்றாவது - அதிக உயிரிழப்பு மண்டலம் கொண்ட ஒரு ப்ரீ-பிராக்மென்டேஷன் வார்ஹெட் (Pre-fragmentation warhead with a high lethality zone).

More from GizBot

Best Mobiles in India

English summary
Pralay Missile With 1000 kg payload capacity 500 km range successfully tested for 2 times by DRDO
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X