மணிக்கு சுமார் 67,000 மீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வரும் விண்கல்: பூமி தப்புமா.?

|

உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபாவை விட பெரிய விண்கல் ஒன்று பெரும் சப்தத்துடன் பூமி கிரகத்தை நோக்கி வந்துகொண்டுருக்கிறது.

2002 ஏஜே129 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல், 'சாத்தியமான முறையில் அபாயகரமானது' என அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவினால் வகைப்படுத்தப்பட்டுள்ள ஒரு விண்பொருளாகும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மணிக்கு சுமார் 67,000 மீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வரும் விண்கல்.!

உலகின் அதிவேகமான விமானத்தை விட 15 மடங்கு அதிக வேகத்தில், அதாவது மணிக்கு சுமார் 67,000 மீட்டர் (அதாவது 107,826 கி.மீ) வேகத்தில் பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கும் இந்த விண்கல் பூமி கிரகத்தோடு மோதல் நிகழ்த்த அல்லது பூமி மீதான சாத்தியமான தாக்கத்தை ஏற்படுத்துமா.?

கடந்து

கடந்து

சுமார் 0.7 மைல் (1.1 கிமீ) பரப்பளவு கொண்டுள்ள இந்த விண்கல் ஆனது முன்னர் குறிப்பிட்டப்படி, துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டிடமாக புர்ஜ் கலீஃபாவைவிட (0.5 மைல் உயரம்) அளவில் பெரியதாக உள்ளது. வருகிற பிப்ரவரி 4-ஆம் தேதி பூமியை கடந்து செல்கிறது

இடைவெளி

இடைவெளி

இந்த நிகழ்வின் போது (கடக்கும் போது) பூமிக்கும் விண்கல்லுக்கும் உள்ள இடைவெளி தூரமானது சுமார் 2,615,128 மைல்கள் (4,208,641 கிமீ) இருக்கும் என்பது பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்தினாலும் கூட விண்வெளி அறிவியலை பொறுத்தமட்டில் இது ஒப்பீட்டளவில் நெருக்கமான ஒரு நிகழ்வாகும்.

Nuclear Weapons : எந்தெந்த நாடுகளிடம் எத்தனை அணுவாயுதங்கள் உள்ளன.? இந்தியாவின் நிலை என்ன.?
சாத்தியமான அபாயம்

சாத்தியமான அபாயம்

பூமிக்கும் நிலவுக்கும் இடையே உள்ள தூரம் 238,855 மைல் (384,400 கிமீ) ஆகும் என்பதோடு ஒப்பிட்டு பார்த்தால் உங்களுக்கே அது புரியும். அதனால் தான், நாசா இந்த விண்கல்லை சாத்தியமான அபாயம் என்று விவரிக்கிறது. இது மட்டுமல்ல நமது பூமி கிரகத்தோடு சுமார் 4,600,000 மைல்கள் (7,403,00 கிலோமீட்டர்) என்ற எல்லைக்குள் நுழையும் எந்தவொரு விண்கல்லுமே 'அபாயகரமானது' தான்.

பனி யுகத்திற்குள்

பனி யுகத்திற்குள்

இந்த 2018-ஆம் ஆண்டில் பூமி கிரகத்தை கடக்கும் மிகப்பெரிய விண்வெளிப் பாறையான 2002 ஏஜே129 ஆனது 'கிட்டத்தட்ட' பாதுகாப்பான வழியிலேயே தான் பயணிக்கிறது. இருப்பினும் இந்த அளவிலான விண்கல் ஒன்று பூமியோடு மோதல் நிகழ்த்தினால் நாம் அனைவரும் மீண்டுமொரு சிறிய பனி யுகத்திற்குள் (ICE AGE) வாழ நேரிடும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

வெப்பநிலை

வெப்பநிலை

அப்படியானதொரு தாக்கம் (2016-ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட ஒரு ஆய்வின் படி) உலகெங்கிலும் உள்ள வெப்பநிலையை பாழாக்கி, சராசரியாக 8 டிகிரி செல்சியஸ் என்ற அளவிற்கு கொண்டுசெல்லும். சுமார் 0.6 மைல் அகலம் (1கிமீ) கொண்ட சிறுகோள் ஒன்றின் தாக்கமே இதை நிகழ்த்துமென்பது குறிப்பிடத்தக்கது.

அதிர்ஷ்டவசமாக

அதிர்ஷ்டவசமாக

எல்லாவற்றை விடவும் 'மிக மோசமான' விண்கல் மோதல் நிகழ்ந்தால், அடுத்த 10 ஆண்டுகளுக்கு பூமியின் வளிமண்டலத்தில் கரும்புகை சூழ்ந்திருக்கும். அந்த தாக்கத்தினால் கிளம்பிய தூசுகள் அமுங்க 6 ஆண்டுகள் எடுக்கும். அதிர்ஷ்டவசமாக நமது வாழ்நாளில் இதுபோன்ற விண்கல் மோதல் நிகழ்வை சந்திக்க மாட்டோம் மற்றும் அது நடக்கும் போது அதை தடுக்கும் அளவிலான அறிவியல்-தொழில்நுட்ப சக்திகளை பூமி கிரக வாசிகள் கொண்டிருப்பர்.

தலையின் எல்லா பக்கங்களிலும் கத்திகள்

தலையின் எல்லா பக்கங்களிலும் கத்திகள்

கடந்த டிசம்பர் 24 அன்று வரையிலாக பூமியைச் சுற்றியுள்ள சுமார் 17,495 நியர் எர்த் ஆப்ஜெக்ட்ஸ் (பூமியின் அருகாமை விண்வெளி பொருட்கள்) கண்டறியப்பட்டுள்ளது. அதில் 17,389 விண்பொருட்களானது விண்கற்களாகும். அதன் பின்னர் மட்டுமே 1,985 புதிய விண்கல் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துள்ளது. இதிலிருந்து நம் தலைக்கு மேல் மட்டுமல்ல, தலையின் எல்லா பக்கங்களிலும் கத்திகள் தொங்குகிறதென்பதை அறிய முடிகிறது.

Best Mobiles in India

English summary
Potentially hazardous’ asteroid the size of the Burj Khalifa is heading towards Earth at 67,000mph. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X