வீனஸ் கிரகத்தில் உயிர்கள் இருப்பதற்கான அடையாளம்! விஞ்ஞானிகள் போட்டுடைத்த உண்மை!

|

வீனஸ் பூமியின் மிக நெருக்கமான அண்டை கிரகம், இந்த கிரகம் தனது கட்டமைப்பில் கூட பூமியை போன்று ஒத்தாக இருக்கிறது. ஆனால், பூமியை விட சற்று சிறிய கிரகம். வீனஸ், சூரியனுக்கு மிக அருகாமையில் உள்ள ஒரு கிரகமாகும். சூரியனிலிருந்து இரண்டாவது கிரகமாக வீனஸ் இருக்கிறது. மூன்றாவது கிரகமாக பூமி இருக்கிறது. தற்பொழுது இந்த கிரகத்தில் உயிர்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

உண்மையில் பூமியின் சகோதரி தான் வீனஸ்

உண்மையில் பூமியின் சகோதரி தான் வீனஸ்

வீனஸ் உண்மையில் பூமியின் சகோதரி என்று அழைக்கப்படுகிறது. காரணம் பூமிக்கு நிகரான வளிமண்டலத்தை இந்த கிரகம் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே கொண்டிருந்திருக்கிறது. இப்பொழுது இந்த கிரகத்தின் நிலை பூமியை விட பல மடங்கு வேறுபாட்டுடன் காணப்படுகிறது. இது 96% க்கும் மேற்பட்ட கார்பன் டை ஆக்சைடுகளைக் கொண்ட நான்கு நிலப்பரப்பு கிரகங்களின் அடர்த்தியான வளிமண்டலத்தைக் கொண்டுள்ளது.

பால்வெளி விண்மீன் அண்டத்தில் தனித்து நிற்கும் கிரகம்

பால்வெளி விண்மீன் அண்டத்தில் தனித்து நிற்கும் கிரகம்

வீனஸின் வளிமண்டல அழுத்தம் என்பது பூமியை விட சுமார் 92 மடங்கு அதிகமாக உள்ளது. பால்வெளி விண்மீன் அண்டத்தில் அதிக வெப்பத்துடன் இருக்கும் ஒரே கிரகம் வீனஸ் மட்டும் தான், அடர்த்தியான நச்சு வாயுக்கள் வளிமண்டலத்தில் மூடப்பட்டிருப்பதும் இதற்கு ஒரு காரணம். வீனஸின் மேற்பரப்பு வெப்பநிலை 880 டிகிரி பாரன்ஹீட்டை (471 டிகிரி செல்சியஸ்) ஆகும். இது ஈயத்தை உருகும் அளவுக்கு வெப்பமாக இருக்கிறது.

மனித இனத்திற்கு இப்படியொரு சோதனை வருமா? பதற வைக்கும் ஆய்வு முடிவு.!!மனித இனத்திற்கு இப்படியொரு சோதனை வருமா? பதற வைக்கும் ஆய்வு முடிவு.!!

வீனஸ் கிரகத்தில் பாஸ்பைனின் இருப்பு கண்டுபிடிப்பு

வீனஸ் கிரகத்தில் பாஸ்பைனின் இருப்பு கண்டுபிடிப்பு

விஞ்ஞானிகள் திங்களன்று வீனஸின் கடுமையான அமில மேகங்களில் பாஸ்பைன் என்ற வாயுவைக் கண்டறிந்துள்ளனர். பாஸ்பைனின் இருப்பு, நுண்ணுயிரிகள் பூமியின் அருகில் உள்ள அண்டை கிரகங்களில் வசிக்கக்கூடும் என்பதைக் குறிக்கிறது, இது பூமிக்கு அப்பாற்பட்ட சாத்தியமான வாழ்க்கையின் ஒரு அடையாளமாகும். பூமியைவிட்டு வெளியில் இருக்கும் உயிர்களை ஏலியன்கள் என்று விஞ்ஞானிகள் அழைக்கின்றனர்.

 யாரும் மறுக்க முடியாத அறிவியல் உண்மை

யாரும் மறுக்க முடியாத அறிவியல் உண்மை

வீனஸில் ஆராய்ச்சியாளர்கள் உண்மையான வாழ்க்கை வடிவங்களை இன்னும் கண்டுபிடிக்கவில்லை, ஆனால் பாஸ்பைன் பின்னணியில் மறைந்திருக்கும் ஒரு மாபெரும் உண்மையைப் போட்டு உடைத்துள்ளனர். இந்த அறிவியல் உண்மையை யாரும் மறுக்கவே முடியாது என்று விஞ்ஞானிகள் உறுதிபட தெரிவித்துள்ளனர்.

1940-ல் காணாமல் போன போர்க்கப்பல் கண்டுபிடிப்பு! கப்பலுக்குள் மறைக்கப்பட்டுள்ள உண்மை என்ன?1940-ல் காணாமல் போன போர்க்கப்பல் கண்டுபிடிப்பு! கப்பலுக்குள் மறைக்கப்பட்டுள்ள உண்மை என்ன?

விஞ்ஞானிகள் போட்டுடைத்த உண்மை

விஞ்ஞானிகள் போட்டுடைத்த உண்மை

பூமியில் இருக்கும் பாஸ்பைன் என்பது, ஆக்சிஜன் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட சூழலில் வளரும் பாக்டீரியாக்களால் தயாரிக்கப்படுகிறது என்ற உண்மையை விஞ்ஞானிகள் தற்பொழுது விளக்கியுள்ளனர். வீனஸில் உள்ள பாஸ்பைன் பின்னணியில் நிச்சயம் உயிர்கள் இருக்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

உறுதிப்படுத்தப்பட்ட ஆதாரம்

உறுதிப்படுத்தப்பட்ட ஆதாரம்

சர்வதேச விஞ்ஞான குழு முதன்முதலில் ஹவாயில் ஜேம்ஸ் கிளார்க் மேக்ஸ்வெல் தொலைநோக்கியைப் பயன்படுத்தி வீனஸில் பாஸ்பைனைக் கண்டறிந்தது, மேலும் சிலியில் உள்ள அட்டகாமா லார்ஜ் மில்லிமீட்டர் / சப்மில்லிமீட்டர் அரே (ALMA) ரேடியோ தொலைநோக்கியைப் பயன்படுத்தி அதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த உறுதியான தகவலைப் பார்த்து விஞ்ஞானிகள் அனைவரும் திகைத்துப் போய் மிகவும் ஆச்சரியப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

வேற்று கிரக வாழ்வின் இருப்பிற்கு இது ஒரு அடையாளம்

வேற்று கிரக வாழ்வின் இருப்பிற்கு இது ஒரு அடையாளம்

வேற்று கிரக வாழ்வின் இருப்பு என்பது அறிவியலின் மிக முக்கியமான கேள்விகளில் ஒன்றாகும். விஞ்ஞானிகள் நமது சூரிய மண்டலத்திலும் அதற்கு அப்பாலும் உள்ள பிற கிரகங்கள் மற்றும் சந்திரன்களில் "உயிர் அடையாளங்களை", உயிரின் மறைமுக அறிகுறிகளைத் தேட, ஆய்வுகள் மற்றும் தொலைநோக்கிகளைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக தற்பொழுது வீனஸின் தகவல் பிரமிக்கவைக்கிறது.

வீனஸில் சல்பூரிக் அமிலம் தான் அதிகம்

வீனஸில் சல்பூரிக் அமிலம் தான் அதிகம்

வீனஸைப் பற்றி தற்போது நாம் அறிந்திருக்கும் பாஸ்பைன் தகவல், உயிர் இருப்பதற்கான மிகவும் நம்பத்தகுந்த விளத்தை வழங்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வீனஸில் அதன் வெப்பத்திற்கு ஏற்றார் போல், அங்கு சல்பூரிக் அமிலம் தான் அதிகமாக இருக்கிறது.சல்பூரிக் மழை, சல்பூரிக் நதிகள், சல்பூரிக் கடல் மற்றும் சல்பூரிக் வாயுக்களால் வீனஸ் கிரகம் சூழப்பட்டிருக்கிறது.

நூற்றுக்கணக்கான மம்மிகள் எகிப்தில் கண்டுபிடிப்பு! எதிர்பாராத விதமாக அவிழும் மர்ம முடிச்சு!நூற்றுக்கணக்கான மம்மிகள் எகிப்தில் கண்டுபிடிப்பு! எதிர்பாராத விதமாக அவிழும் மர்ம முடிச்சு!

பிரமிப்பை உருவாக்கும் வீனஸ்

பிரமிப்பை உருவாக்கும் வீனஸ்

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமி போல் இருந்த வீனஸ் கிரகம், அதிக வெப்பத்தின் காரணமாக வீனஸ் கிரகத்தில் முன்பு இருந்த நீர் ஆதாரங்கள் காலப்போக்கில் இப்படி அமிலத் தன்மை கொண்டதாய் மாறியிருக்கும் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இருப்பினும் இங்கு பாஸ்பைன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் பிரமிப்பை உருவாக்கியுள்ளது என்று கூறியுள்ளனர்.

ஏலியன் உயிர் இப்படி தான் இருக்குமோ? மக்கள் கருத்து

ஏலியன் உயிர் இப்படி தான் இருக்குமோ? மக்கள் கருத்து

வீனஸில் உயிர் அடையாளம் இருக்கிறது என்றஇந்த செய்தி வெளியானதில் இருந்து வலைத்தளம் முழுக்க மக்களின் பேச்சு வீனஸ் கிரகத்தை பற்றியாகத்தான் இருக்கிறது. இப்படியான அமிலத்தன்மை கொண்டசூழ்நிலையில் உயிர் அடையாளம் இருக்கிறது என்றால் அது இப்படித்தான் இருக்குமென்று ஏலியன் புகைப்படங்களை மக்கள் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இன்னும் சிலர் 2020ல் ஏலியன் உயிர் அடையாளமா! உஷாராக இருங்கள் என்றும் பீதியைக் கிளப்பியுள்ளனர்.

Best Mobiles in India

English summary
Potential Sign Of Alien Life Detected On Inhospitable Venus Planet : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X