தாய் தின்ற மண்ணே.. கடலுக்குள் மூழ்கிய சோழர்கால பூம்புகார்- டிஜிட்டல் முறையில் மறுஉருவாக்கம்.,எப்படி?

|

பண்டைய தமிழர்களின் பாரம்பரியத்தில் ஏணைய வகை இன்னும் மண்ணுக்குள்ளும், கடலுக்குள்ளும் புதையுண்டு கிடைக்கிறது. அகழாய்வு என்ற பெயரில் வெளி கொண்டு வருவபை மிகச் சொற்பம் என்றே கூறலாம். அந்த வகையில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை பூம்புகார் பட்டினம்.

பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும்

பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும்

பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும்

வீங்குநீர் வேலியுலகிற் கவன்குலத்தொரு

ஓங்கிப் பரந்தொழுகலான்- என்கிறது சிலப்பதிகாரம்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை வட்டத்தில் இருந்து சுமார் 26 கிலோமீட்டர் தொலைவிலும், சீர்காழியில் இருந்து சுமார் 19 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது பூம்புகார். காவிரிபூம்பட்டினம் சங்க காலச் சோழர்களின் துறைமுகப் பட்டினமாக திகழ்ந்த பூமி. வங்கக் கடற்கரையில் வரலாற்று படைத்த பகுதி என்றே கூறும் அளவிற்கு இதன் போற்றுதல் பாடல்கள் கூறுகிறது.

வணிக பண்டமாற்றம்

வணிக பண்டமாற்றம்

தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் இலங்கை பர்மா, சீனா, ரோம் போன்ற நாட்டு மக்கள் பூம்புகார் பட்டினம் வந்துதான் வணிக பண்டமாற்றம் செய்ததற்கான பல்வேறு சான்றுகள் உள்ளது. இந்தியர்களுக்கு மட்டுமின்றி பல்வேறு நாட்டு மக்களுக்கு இது வணிக நகரமாக இருந்துள்ளது என்பதை தொல்லியல் அகழாய்வுச் சான்றுகள் வாயிலாகவும், சங்க இலக்கியங்களின் வழியாகவும் நாம் நன்கு அறிய முடிகிறது.

ரூ.8,500 மட்டுமே: அட்டகாச Samsung Galaxy A01 - என்னென்ன சிறப்பம்சங்கள் தெரியுமா?ரூ.8,500 மட்டுமே: அட்டகாச Samsung Galaxy A01 - என்னென்ன சிறப்பம்சங்கள் தெரியுமா?

காவிரி கடலில் சங்கமிக்கும் பூம்புகார்

காவிரி கடலில் சங்கமிக்கும் பூம்புகார்

காவிரி, கர்நாடக மாநிலத்தில் உற்பத்தி ஆகி தமிழகத்தின் கடற்கரைப் பகுதியில் கடலோடு சங்கமிக்கிறது. அப்படி உருவாகும் காவிரி ஆறு கடலில் கலக்கும் இடம் தான் பூம்புகார். அதன் காரணமாகவே காவிரிபுகும் பட்டினம் என்ற சொல் மருவி காவிரிபூம்பட்டினம் என்றானது.

தமிழகம் நாகரிகத்தில் சிறந்து விளங்கியது

தமிழகம் நாகரிகத்தில் சிறந்து விளங்கியது

கடல் கொண்ட பூம்புகார் நகரம் இயற்கையின் சீற்றத்தால் நீருக்குள் மூழ்கடிக்கப்பட்டது என்ற உண்மையைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிகிறது. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகம் நாகரிகத்தில் சிறந்து விளங்கியது என்பதும், கடல் வாணிகத்தில் சிறப்பு பெற்றிருந்தது என்பதும் இலக்கியங்கள் உள்ளிட்ட பலவற்றாலும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த குடி தம் தமிழ்க்குடி என்பதற்கான சான்றுகள் இங்கு ஏராளம்.

எஞ்சியுள்ள பகுதி சிறிதளவுதான்

எஞ்சியுள்ள பகுதி சிறிதளவுதான்

பட்டினப்பாலை சிறப்பித்துக் கூறும் காவிரிப்பூம்பட்டினத்தின் (பூம்புகார்) ஒரு பகுதியை கடல்கோளால் கடல் கொண்டது. தற்போது எஞ்சியுள்ள பகுதி சிறிதளவுதான் என்பது, அகழ்வாய்வுகள் மற்றும் மேற்பரப்பு ஆய்வுகள் நமக்குத் தெளிவுபடுத்துகின்றன. கடல் கொண்ட பூம்புகாரை கண்டுபிடிக்க இரண்டு கட்ட ஆய்வு நடத்தப்பட்டது. ஒன்று, நிலப்பரப்பில் அகழாய்வு, இரண்டாவது, நீர்ப்பரப்பில் (கடலில்) அகழாய்வு.

மேலும் ஆய்வுக்குரியவை

மேலும் ஆய்வுக்குரியவை

ஆழ்கடல் ஆய்வின் மூன்று இடங்களில், கட்டடப் பகுதிகள் போன்ற அமைப்பு இருப்பதை இவ்வாய்வுகள் மூலம் தெரிய வந்தது. கட்டடப் பகுதிகளின் நீளம் 40 மீ, அகலம் 25 மீ, தடிமன் 5 மீ எனக் தெரிவிக்கப்பட்டது. கடலின் ஆழம் 24 மீட்டர் எனவும் குறிக்கப்பட்டதோடு. அடுத்து, வானகிரி கடற்கரையிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில், 19 மீட்டர் ஆழத்தில் ஒரு கப்பலின் உடைந்த பகுதிகள் இருப்பது கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டது. இதில் குறிப்பிடத்தக்கவை என்னவென்றால் இந்த இடம் மேலும் ஆய்வுக்குரியவை என தெரிவு செய்யப்பட்டன.

பல்வேறு இயற்கை சீற்றங்கள்

பல்வேறு இயற்கை சீற்றங்கள்

கடந்த 20,000 ஆண்டுகளில் நிலச்சரிவு, கடல் மட்ட உயர்வு, காவேரியின் இடம்பெயர்வு, வெள்ளம், சுனாமி, சூறாவளி மற்றும் அரிப்பு போன்ற புவி இயக்கவியல் செயல்முறைகளும் பூம்புகார் கடலுக்குள் புதைந்ததை குறிக்கும்.

கடலில் மறைந்துபோன சோழ வம்ச துறைமுகம்

கடலில் மறைந்துபோன சோழ வம்ச துறைமுகம்

வரலாற்றின் காலச்சுவட்டில் சுமார் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மறைந்துபோன தமிழ்நாட்டின் சோழ வம்ச துறைமுக நகரமான பூம்புகாரை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தலைமையிலான கூட்டமைப்பால் டிஜிட்டல் முறையில் புனரமைக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குஜராத்தின் துவாரகா நகரம்

குஜராத்தின் துவாரகா நகரம்

குஜராத்தின் துவாரகா நகரத்திலும் இதேபோன்ற திட்டம் தொடங்கப்பட்டு வருவதாக டிஎஸ்டியில் ஐசிபிஎஸ் (ICPS) பிரிவின் தலைவர் டாக்டர் கே ஆர் ​​முரளி மோகன் தெரிவித்தார். துவாரகாவை வரைபடமாக்க ஏற்கனவே நிறைய நல்ல வேலைகள் செய்யப்பட்டுள்ளன, ஆனால் பூம்புகாரில் இதற்கான அதிக வேலைகள் நடைபெறவில்லை. இந்த இரண்டு தளங்களும் புவியியல் ரீதியாக இணைக்கப்படுமா என்பது தெரியாது என்றும் ஆய்வில் கண்டறியப்படும் எனவும் கூறினார்.

BSNL-பதுங்கிய புலி பாய்ந்தது: ஜியோவை விட இரு மடங்கு நன்மை- குறைந்த விலையில் தினசரி 3ஜிபி டேட்டா!BSNL-பதுங்கிய புலி பாய்ந்தது: ஜியோவை விட இரு மடங்கு நன்மை- குறைந்த விலையில் தினசரி 3ஜிபி டேட்டா!

டிஜிட்டல் ஹாம்பி

டிஜிட்டல் ஹாம்பி

பூம்புகாரின் புனரமைப்பு டிஎஸ்டியின் இந்திய டிஜிட்டல் பாரம்பரிய திட்டத்தின் ஒரு பகுதியாகும். அதன் முதல் திட்டமான டிஜிட்டல் ஹாம்பி (Digital Hampi) கண்காட்சி தற்போது இங்குள்ள தேசிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டமானது இந்த பகுதியில் தெளிவான மற்றும் தெளிவற்ற பாரம்பரியத்தை உயிர்பிக்க செய்யும்.

பண்டைய நகரத்தின் வரலாறு

பண்டைய நகரத்தின் வரலாறு

அதேபோல், தங்களது இரண்டாம் கட்டத்தில், குஜராத் மற்றும் தமிழ்நாட்டில் தற்போது நீருக்கடியில் இருக்கும் பாரம்பரியத்தை பார்த்து ஆராய்ந்து வருவதாகவும்.
இந்த கட்டமைப்புகள் எவ்வாறு கட்டப்பட்டன எனவும் கட்டமைப்புகளின் புகைப்படங்கள் கிடைக்கின்றனவா மற்றும் நகரங்கள் நீரில் மூழ்குவதற்கு காரணங்கள் என்ன என்பதற்கான ஆதாரங்களைக் கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவிக்கின்றனர். பூம்புகார் திட்டத்திற்காக, பண்டைய நகரத்தின் வரலாற்றைக் கண்டறிய 13 கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் வலையமைப்பை டிஎஸ்டி அமைத்துள்ளது.

15,000 ஆண்டுகளுக்கு முன்பு

15,000 ஆண்டுகளுக்கு முன்பு

இந்திய ரிமோட் சென்சிங் செயற்கைக்கோள்களால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட ஆய்வுகளில், இந்த நகரம் 15,000 ஆண்டுகளுக்கு முன்பு, இப்போதுள்ள பூம்புகார் நகரத்திலிருந்து 30 கி.மீ தூரத்தில் உள்ள காவிரி டெல்டா பகுதியில் அமைந்திருந்தது தெரியவந்துள்ளது.இந்த ஆய்வு பூம்புகாரின் வாழ்க்கை வரலாறு மற்றும் சமூக-கலாச்சார பரிணாமம் மட்டுமல்லாமல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பரிணாமம் ஆகிய பல்வேறு தொகுப்புகளை வழங்கும் என அதிகாரி கூறுகிறார்.

Best Mobiles in India

English summary
poompuhar scientist said digitally reconstruct tamilnadu port city

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X