20 ஆண்டுக்கு பிறகு இந்தியாவுக்கு அணு ஆயுத சோதனையில் வெற்றி.!
ஐஎன்எஸ் அரிஹந்த் நீர்மூழ்க்கி கப்பலிருந்து அணு ஆயுதத்தை சுமந்து சென்று தாக்கும் அதிநவீன ஏவுகணையை இந்தியா சோதனை செய்தது. கடலுக்கடியில் 20 மீட்டர் ஆழ்த்திலிருந்து இரண்டு முறை பரிசோதனை செய்யப்பட்டது.
டெல்லி: நீர்மூழ்கி கப்பலில் இருந்து அணு ஆயுத்தை சுமந்து சென்று தாக்கும் அதிநவீன ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

இத்தொழில் நுட்பம் வைத்துள்ள பட்டியில் இந்தியா 6 வது இடத்தில் இருக்கின்றது. இந்த சோதனையை இந்தியா மிகவும் ரகசியமாக மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

ஐஎன்எஸ் அரிஹந்த் நீர்மூழ்க்கி கப்பல்:
ஐஎன்எஸ் அரிஹந்த் நீர்மூழ்க்கி கப்பலிருந்து அணு ஆயுதத்தை சுமந்து சென்று தாக்கும் அதிநவீன ஏவுகணையை இந்தியா சோதனை செய்தது. கடலுக்கடியில் 20 மீட்டர் ஆழ்த்திலிருந்து இரண்டு முறை பரிசோதனை செய்யப்பட்டது. இருமுறையும் ஏவுகணை இலக்கை துல்லியமாக தாக்கியது.

10 டன் எடை:
இந்த ஏவுகணை 750 கி.மீ தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் படைத்துள்ளது. இதனை எதிரி நாட்டு தடுப்பு ஏவுகணைகள் கண்டறிந்து தடுப்பது மிகவும் கடினம். இந்த ஏவுகணை 10 டன் எடை கொண்டுள்ளது.

20 ஆண்டு முயற்சி:
இந்த ஏவுகணையை தயாரிக்க இந்தியா 20 ஆண்டுகள் கடுமையாக முயற்சி செய்துள்ளது. உள்நாட்டு தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளதால், இந்திய விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

பாதுகாப்பு துறை அமைச்சகம் தகவல்:
ராஜஸ்தானின் சந்தன் ராணுவ தளத்தில், போர் விமானத்திலிருந்து அதிநவீன வெகு குண்டு செலுத்தப்பட்டு சோதிக்கப்பட்டது.
பொக்ரான் ராணுவ தளத்தில் பீரங்கி வாகன எதிர்ப்பு ஏவுகணையான ஹெலின வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
இந்த இரண்டு சோதனைகளுக்கும் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டதாக பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications