முழுவதும் உறைந்த ப்ளூட்டோவில் திரவ நிலையில் கடல்கள்!

ஸ்புட்னிக் ப்ளானிடியாவின் கீழ் உள்ள திரவக் கடல் மூலம் அக்கிரகத்தின் டெக்டோனிக் அம்சங்களையும் விளக்கலாம்.

|

சூரிய மண்டலம் நாம் முன்பு நினைத்ததை விட நீர் ததும்பிய ஒர் சோகிகர் இடமாக இருக்கலாம் .அதாவது க்யூபர் பெல்ட் என அழைக்கப்படும் நெப்ட்யூனை தாண்டிய கிரகங்களிலும் கூட இதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. சிறு கிரகமான புளூட்டோவின் நைட்ரஜன் பனிக்கட்டி அடுக்கின் கீழே ஒரு திரவ நிலையில் கடல்கள் இருக்கலாம்.

முழுவதும் உறைந்த ப்ளூட்டோவில் திரவ நிலையில் கடல்கள்!

புளூட்டோவில் திரவ கடலை பராமரிக்க வேண்டிய வெப்பநிலை, தடித்த பனிப்பகுதியை உருகவிடாமல் தடுக்கும் அளவிற்கு மிக அதிகமானதாக இருக்கும் என அனைவரும் நினைத்திருந்த நிலையில், ஜப்பானிய வானியலாளர்கள் ஒரு புதிய சாத்தியக்கூறை கண்டறிந்துள்ளனர். பனிப்பகுதியின் அடுக்கிற்கு கீழேயும் திரவத்தின் மேலேயும் உள்ள ஒரு வாயு அடுக்கு, அவை ஒன்றுக்கொன்று இணைய அனுமதிப்பதில்லை.

நியூ ஹாரிஜான்ஸ்

நியூ ஹாரிஜான்ஸ்

ஸ்புட்னிக் ப்ளானிடியா என்ற ப்ளுட்டோவில் காணப்படக்கூடிய மிகதடிமனான பனிக்கட்டி பரப்பில் நியூ ஹாரிஜான்ஸ் ஆய்வு மூலம் கண்டறியப்பட்ட ஈர்ப்புத் திறனையும், அதன் மத்திய பகுதி மற்றும் குறைந்த புவியியல் அமைப்பையும் கொண்டு, அதற்கு அடியில் திரவநிலையில் கடல் உள்ளதை கண்டறிவதற்கு உதவும்.

திரவக் கடல்

திரவக் கடல்

ஸ்புட்னிக் ப்ளானிடியாவின் கீழ் உள்ள திரவக் கடல் மூலம் அக்கிரகத்தின் டெக்டோனிக் அம்சங்களையும் விளக்கலாம். புளூட்டோவின் வயது மற்றும் இருப்பிடத்தை அடிப்படையாகக் கொண்டு விஞ்ஞானிகள் அதன் எல்லா திரவங்களும் திடீரென உறைந்திருக்க வேண்டும் என்று கருதுகின்றனர்.

புளூட்டோ

புளூட்டோ

"திரவ கடலை தக்க வைத்துக் கொள்ள, புளூட்டோ வெப்பத்தை உள்ளே தக்க வைத்துக் கொள்ள வேண்டும். மற்றொருபுறம் அதன் பனிஅடுக்கின் தடிமனை பராமரிக்க, ப்ளூட்டோ தனது பனிப்பாறைகளை குளிர்ச்சியாக வைத்து இருக்க வேண்டும் "என்று அறிவியலாளர்கள் தங்களது ஆய்வுக்கட்டுரையில் கூறியுள்ளனர்.

ப்ளூட்டோவிற்கு சென்று ஆராய முடியாது

ப்ளூட்டோவிற்கு சென்று ஆராய முடியாது

"இரண்டும் எப்படி சாத்தியம் என இங்கே நாம் விளக்குகிறோம் ... பனிக்கட்டி அடுக்கின் அடித்தளத்தில் உள்ள கிளாத்ரேட் ஹைட்ரேட்ஸ்-ன்(வாயு ஹைட்ரேட்ஸ்) மெல்லிய அடுக்கு,
கடல்கள் திரவநிலையில் நீண்டகாலம் உயிர்ப்புடன் இருப்பதற்கும், பனிஅடுக்கின் தடிமன் முரண்பாடுகளை பராமரிக்கவும் உதவுகிறது"

இதை ப்ளூட்டோவிற்கு சென்று ஆராய முடியாது என்பதால் கம்ப்யூட்டர் சிமுலேசன் முறையில்,வாயு ஹைட்ரேட் அடுக்கானது திடநிலையிலான பனிக்கட்டி தண்ணீரில் வாயு க்ளாத்ரேட் மூலக்கூறுகள் மூலம் அவ்வாறு மாறியதாக கண்டறிந்துள்ளனர்.

 வாயு ஹைட்ரேட் படலம்

வாயு ஹைட்ரேட் படலம்

சூரிய மண்டலத்தின் வயதான 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி , ஆய்வாளர்கள் புளூட்டோ பரிணாமத்தை உருவகப்படுத்தினர். ஸ்புட்னிக் ப்ளான்டியா மற்றும் அடியில் உள்ள திரவகடல் ஆகியவற்றிற்கு இடையே உள்ள வாயு ஹைட்ரேட் அடுக்கு உள்ளபோது மற்றும் அது இல்லாமல் என இருவிதமாக ஆராய்ந்துள்ளனர்.

அவர்கள் அந்த சிறு கிரகத்தின் வெப்ப பரிணாமத்தை மாதிரியாக உருவாக்கி அடியில் உள்ள திரவகடல் பனிக்கட்டியாக மாற மற்றும் சீரான தடிமனான பனிஅடுக்கை உருவாக்க இனி எவ்வளவு காலம் எடுத்துக்கொள்ளும் என கணக்கிட்டனர்.அந்த வாயு ஹைட்ரேட் படலம் இல்லாமல் இருந்திருந்திருந்தால் சுமார் 800 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது பூமியின் முதல் விலங்குகள் உருவாக தொடங்கிய போதே திரவக்கடல் முழுமையாக உறைந்திருக்கும் என்று அவர்கள் கண்டறிந்தனர்.


ஆனால் தற்போது அந்த வாயு ஹைட்ரேட் படலம் இருப்பதால் கடல் இன்னமும் திடநிலையில் பனிக்கட்டியாக மாறாமல் உள்ளது. அது இல்லாமல் வெறும் 100 மில்லியன் ஆண்டுகளிலேயே பனிக்கட்டி ஆகியிருக்கவேண்டிய கடல், தற்போது பல பில்லியன் ஆண்டுகளாக திரவநிலையிலேயே உள்ளது.

Best Mobiles in India

English summary
Pluto Was Supposed to Be Fully Frozen - But It Looks Like It Has Liquid Oceans: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X