பிளாஸ்டிக்கை வைரங்களாக மாற்றிய விஞ்ஞானிகள்! இனி வைரத்தின் விலை குறையுமா?

|

யாரிடமாவது, பிளாஸ்டிக் வைரமாக மாறியது என்று கூறிப்பாருங்களேன்! ஒன்று, சிரிப்பார்கள் இல்லையென்றால், "கனவு கண்டீர்களா?" என்று கேட்பார்கள்!

இன்னொருபடி மேலே சென்று "என்ன பைத்தியம் பிடித்து விட்டடதா?" என்று கேலி செய்வார்கள்! ஆனால் யாருமே நம்ப மாட்டார்கள்!

ஏனென்றால்.?

ஏனென்றால்.?

பிளாஸ்டிக்கை வைரமாக மாற்றுவது அறிவியல் புனைக்கதைகளில் வரும் ஒரு பகுதி ஆகும் அல்லது மாயாஜால திரைப்படங்களுக்கான ஒரு காட்சி ஆகும்!

உண்மைதான்! ஆனால் அதெல்லாம் நேற்று வரை மட்டுமே! ஏனென்றால் பிளாஸ்டிக்கை வைரமாக மாற்றும் வழியை விஞ்ஞானிகள் ஏற்கனவே கண்டுபிடித்து விட்டனர்!

செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பச்சை நிற பொருள்! இதெப்படி சாத்தியம்?செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பச்சை நிற பொருள்! இதெப்படி சாத்தியம்?

இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால?

இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால?

சற்றே நம்ப முடியாத கண்டுபிடிப்பாக தோன்றும் இந்த "பிளாஸ்டிக் வைரம்" ஆனது எதன் அடிப்படையில் உருமாற்றப்பட்டது என்பதை பற்றி கூறினால், நீங்கள் இன்னும் ஆச்சாரிப்படுவீர்கள்!

(சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால்) பிளாஸ்டிக்கை வைரங்களாக மாற்ற, ஆராய்ச்சியாளர்கள் அதிக ஆற்றல் கொண்ட எக்ஸ்-ரே (Highly-powered X-ray laser) லேசர்களையே பயன்படுத்தி உள்ளனர்!

இதற்காக எந்தவொரு ஸ்பெஷலான பிளாஸ்டிக்கும் பயன்படுத்தப்படவில்லை!

இதற்காக எந்தவொரு ஸ்பெஷலான பிளாஸ்டிக்கும் பயன்படுத்தப்படவில்லை!

ஆம்! இந்த கண்டுபிடிப்பிற்காக ஆராய்ச்சியாளர்கள் பிளாஸ்டிக் பாட்டில்களில் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான பொருளான PET-இன் மாதிரிகளையே பயன்படுத்தி உள்ளனர்!

அவைகளை வைரங்களாக மாற்ற, அதன் மீது தீவிர வெப்பத்தையும், அழுத்தத்தையும் கொடுத்துள்ளனர்.

அதாவது உலகின் மிக சக்திவாய்ந்த எக்ஸ்ரே லேசரான LCLS-ஐ ஹைட்ரோகார்பன் மாதிரிகளில் செலுத்துவதன் மூலம் இது சாத்தியமாகி உள்ளது.

முதல் முறையாக ஏலியன் கிரகத்தை முதல் முறையாக ஏலியன் கிரகத்தை "நேரடியாக" போட்டோ எடுத்த நாசா!

யுரேனஸ் & நெப்டியூனில் வைர மழை பொழியும் அதே டெக்னீக்!

யுரேனஸ் & நெப்டியூனில் வைர மழை பொழியும் அதே டெக்னீக்!

ஆம்! யுரேனஸ் மற்றும் நெப்டியூன் போன்ற கிரகங்களில், இயற்கையாகவே வைர மழை பெய்வதற்கு என்ன காரணமோ அதனை அடிப்படையாக கொண்டே இந்த "பிளாஸ்டிக் வைரங்கள்" உருவாக்கப்பட்டுள்ளன.

அறியாதோர்களுக்கு, தீவிர அழுத்தம் (Extreme pressure) கொண்ட யுரேனஸ் மற்றும் நெப்டியூன் போன்ற கிரகங்களில் ஹைட்ரஜன் மற்றும் கார்பன் போன்ற தனிமங்கள் 'கம்ப்ரெஸ்' செய்யப்பட்டு, திடமான வைரங்களாக மாறுகிறது; அங்கே அந்த வைரங்கள் மழையாக பொழிகிறது!

ஆக.. இனிமேல் வைரத்தின் விலை குறையுமா?

ஆக.. இனிமேல் வைரத்தின் விலை குறையுமா?

பிளாஸ்டிக்கை, வைரமாக மாற்ற முடியும் என்கிற ஆராய்ச்சி "வெற்றி அடைந்துள்ளதே" தவிர, பிளாஸ்டிக் வைரத்தின் விலை என்னவாக இருக்கும்? இது ஒரிஜினல் வைரங்களை விட மலிவானதாக இருக்குமா? என்கிற எந்த தகவலும் வெளியாகவில்லை.

ஆனால், விஞ்ஞானிகள் இந்த வழிமுறையை கண்டுபிடித்ததற்கான முக்கிய காரணம் - வைர சந்தையில், மேலதிக நெறிமுறைமிக்க மூல விருப்பங்களை (More Ethically Sourced Options) உருவாக்க வேண்டும் என்கிற நோக்கத்தின் கீழ் தான் என்பதில் சந்தேகம் வேண்டாம்!

ஏன் PET பிளாஸ்டிக்குகள்? மற்ற பிளாஸ்டிக்குகளை வைரமாக்க முடியாதா?

ஏன் PET பிளாஸ்டிக்குகள்? மற்ற பிளாஸ்டிக்குகளை வைரமாக்க முடியாதா?

பிஇடி பிளாஸ்டிக் ஆனது ரெசின் கோட் பிளாஸ்டிக் நம்பர் 1 (Resin code plastic No. 1) என்றும் அறியப்படுகிறது. இது ஒரு முறை பயன்படுத்தக்கூடிய ட்ரிங்க் பாட்டில்கள், பீனட் பட்டர் ஜாடிகள் மற்றும் சோப்பு பாட்டில்கள் போன்ற பொருட்களை தயாரிக்க பயன்படுத்தப்படும் மறுசுழற்சி செய்யக்கூடிய 'கிளியர்' பிளாஸ்டிக் ஆகும்.

எனவே தான் இந்த ஆராய்ச்சிக்கு, பிஇடி பிளாக்ஸ்டிக் பயன்படுத்தப்பட்டுள்ளது. மற்ற பிளாஸ்டிக்குகளை பயன்படுத்தலாமா? பயன்படுத்த முடியுமா? முடியாதா என்கிற தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை!

சூரியனின் சூரியனின் "மர்ம பகுதி" கண்டுபிடிப்பு.. ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள்!

இன்று இல்லை என்றாலும் கூட.. என்றாவது ஒரு நாள்!

இன்று இல்லை என்றாலும் கூட.. என்றாவது ஒரு நாள்!

இந்த ஆய்வு, யுரேனஸ் & நெப்டியூன் கிரகங்களில் பொழியும் "வைர மழை" தொடர்பான கருதுகோளை ஆதரிப்பது மட்டுமல்லாமல், சிறிய வைரங்களுக்கான புதிய சாத்தியமான உற்பத்தி நுட்பத்தையும் நிரூபித்து உள்ளது.

பாலிஷிங், கிரைண்டிங், க்ளீனிங் போன்ற துறைகளில் பயன்படுத்தப்படும் இவ்வகை சிறிய வைரங்கள், இன்று இல்லை என்றாலும் கூட, என்றாவது ஒரு நாள் அதிக உணர்திறன் கொண்ட குவாண்டம் சென்சார்களில் கூட பயன்படுத்தப்படலாம்!

Photo Courtesy: Wikipedia, NASA

Most Read Articles
Best Mobiles in India

English summary
Plastic Turned Into Diamonds Researchers Used PET and World s Most Powerful X-ray Laser

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X