சீனா வேறலெவல்: நிலாவில் பருத்தி விதைகளை முளைக்க வைத்து சாதனை.!

மேலும் இதுபோன்று உருளை கிழங்கு உள்ளிட்ட சில பயரிகளின் விதைகளையும் முளைக்க வைக்க சீன விஞ்ஞானிகள் ஆய்வுமேற்கொண்டுள்ளனர்.

|

நிலவின் மறுபக்கத்தில் விண்கலனை இறக்க மற்ற நாடுகள் செய்த சோதனைகள் பெருபாலும் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளன. இந்நிலையில் சேன்ஜ் -4 திட்டத்தை சீனா செயல்படுத்தியது. இத்திட்டப்படி, சீனாவானது ஜனவரி 3 , 2019 அன்று வெற்றிகரமாக தனது ஆய்வு விண்கலனை நிலவின் மறுபக்கத்தில் தரை இறக்கியது.

சீனா வேறலெவல்: நிலாவில் பருத்தி விதைகளை முளைக்க வைத்து சாதனை.!

நிலவில் தரை இறங்கிய சேன்ஜ் 4 விண்கலம் ஆனது சீனாவின் விண்வெளி வளர்ச்சி மற்றும் அதன் முக்கியத்துவத்தை உலகெங்கிலும் உள்ள பெரும் வல்லரசுகளுக்கிடையில் பறை சாற்றியுள்ளது என்பதில் சந்தேகமே இல்லை. சீனாவின் பொருளாதார எதிரியான அமெரிக்கவிற்கு புதிய விண்வெளி போட்டி கிளம்பி உள்ளது என்கிற குரல்களையும் கேட்க முடிகிறது. அமெரிக்காவிற்கு மட்டும் இன்றி, எதிர்காலத்தில் சீனா உலகளாவிய போட்டியை உண்டாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சேன்ஜ் 4  விண்கலம்

சேன்ஜ் 4 விண்கலம்

இந்நிலையில் நிலாவில் தரை இறங்கி உள்ள சீன விண்கலம், அங்கு பயிர்கள் வளர்க்கும் ஆய்வை தொடங்கி உள்ளது. பின்பு நிலவின் மறுபக்கத்தை ஆராய சீனா அனுப்பிய சேன்ஜ் 4 விண்கலம், பத்திரமாக தரையிறங்கி ஆய்வு மேற்கொண்டுள்ளது. மேலும் அந்த கலத்தில் இருந்து நிலவின் தரையில் ஊர்ந்து சென்று ஆய்வு செய்யும், யாடு கலமும் தனியே ஆய்வை மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பருத்தி விதைகள்

பருத்தி விதைகள்

குறிப்பாக சேன்ஜ் -4 விண்கலத்துடன் சீனா அனுப்பிய பருத்தி விதைகள் முளைக்கத் தொடங்கி உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நிலவின் தட்டவெப்ப சூழலில் , பருத்தி விதைகள் முளைக்க வைப்பதன் மூலம், அங்கு உயிர் வாழும் சூழல் இருப்பது மெல்ல உறுதியாகி வருவதாக சீன விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

உருளை கிழங்கு

உருளை கிழங்கு

மேலும் இதுபோன்று உருளை கிழங்கு உள்ளிட்ட சில பயரிகளின் விதைகளையும் முளைக்க வைக்க சீன விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். பின்பு இந்த ஆய்வை உலகம் முழுவதும் உள்ள விண்வெளி ஆய்வாளர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 மனித குடியேற்றத்திற்கு நாள் குறிக்க முடியும்

மனித குடியேற்றத்திற்கு நாள் குறிக்க முடியும்

மேலும் பூமியை போலவே நிலவிலும் பயிர்கள் வளர்ந்தால், அடுத்து அங்கு மனித குடியேற்றத்திற்கு நாள் குறிக்க முடியும் என்பதே அனைத்து விஞ்ஞானிகளின் கருத்து ஆகும்.

 வணிகரீதியான செயற்கைக்கோள்

வணிகரீதியான செயற்கைக்கோள்

1970 ஆம் ஆண்டில் சீனா அதன் முதல் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது. அதற்கு அடுத்தபடியாக, மனிதர்களை விண்வெளிக்குள் அனுப்பும் திட்டங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, வணிகரீதியான செயற்கைக்கோள் பயன்பாடுகளில் அதிக கவனம் செலுத்தியது.

Best Mobiles in India

English summary
Plant sprouts on the Moon for first time ever: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X