Subscribe to Gizbot

அடுத்த 7 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக நடக்கப்போகும் கொடூரமான அசம்பாவிதங்கள்.!

Written By:

முதலில், இந்த சதியாலோசனை தேற்றமானது (Conspiracy Theory) சற்று வித்தியாயசமாக இருக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.

நம் ஏற்கனவே பல ஆண்டுகளாக,பல நூற்றுக்கணக்கான பூமியின் அழிவு அல்லது இறுதிநாள் பற்றிய பல கணிப்புகளை கடந்து வந்துள்ளோம். ஆக, இம்முறை நாம் நிச்சயமாக பீதியடைய போவதில்லை, பீதியடையவும் தேவையில்லை.

அடுத்த 7 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக நடக்கப்போகும் கொடூரங்கள்.!

கடந்த செப்டம்பர் மாதத்தில் வெளியான ஒரு டூம்ஸ்டே கோட்பாடானது பிளானட் எக்ஸ் என்று அழைக்கப்படும் மிகவும் மர்மமான இருப்பை கொண்டுள்ள ஒரு கிரகம் பூமியோடு மோதல் நிகழ்த்தி பூமியின் அழிவை உறுதி செய்யுமென்று கூறியது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஆனால் மிக நெருக்கமாக ஒரு விண்கல்.!

ஆனால் மிக நெருக்கமாக ஒரு விண்கல்.!

கூறப்பட்டது போல எந்தவொரு அசம்பாவிதமும் நடக்கவில்லை என்றாலும் கூட பூமியை மிகவும் நெருக்கமாக ஒரு விண்கல் கடந்து சென்று சிறிய அளவிலான பீதியை ஏற்படுத்தியது.

நிர்பந்தமும், கட்டாயமும்.!

நிர்பந்தமும், கட்டாயமும்.!

ஆக கூறப்படும் டூம்ஸ்டே கோட்பாடுகளுக்கும், விண்வெளி நடத்தைகளுக்கும் எதோ ஒரு புள்ளியில் தொடர்பு இருக்கிறது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்பந்தமும், எதையுமே எளிதாக எடுத்துக்கொள்ள கூடாது என்ற கட்டாயமும் நமக்கு உள்ளது.

கொடூரமான 7 ஆண்டுகள்.!

கொடூரமான 7 ஆண்டுகள்.!

சமீபத்தில் வெளியான ஒரு சதியாலோசனை கோட்பாடானது அக்டோபர் 15, 2017 என்று உலகின் முடிவை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நடக்குமென்று கூறுகிறது. டூம்ஸ்டே தியரிஸ்ட் ஆன டேவ் மேடேட் அளித்துள்ள விளக்கத்தின் கீழ் "நமது பூமி முழுமையாக அழிக்கப்படுவதற்கு முன்பு நாம் ஒரு கொடூரமான "ஏழு ஆண்டு துயரத்திற்கு உள்ளாவோம்" என்று கூறியுள்ளார்.

மெல்ல மெல்ல தான் அழியுமென்பது அறிவியல்.!

மெல்ல மெல்ல தான் அழியுமென்பது அறிவியல்.!

பெரும்பாலான அறிவியல் மற்றும் விண்வெளி ஆய்வாளர்களும், பூமி ஒரே நாளில் அழிந்து விடாது, மெல்ல மெல்ல தான் அழியுமென்பதை நம்புகின்றனர்.

7 ஆண்டுகள் வரை எடுத்துக்கொள்ளும்.!

7 ஆண்டுகள் வரை எடுத்துக்கொள்ளும்.!

பொதுவாக வெளியாகும் டூல்ஸ்டே கோட்பாடுகள் பூமி ஒரே நாளில் ஒரே நேரத்தில் அழிக்கப்படும் என்றே கூறும். ஆனால் இந்த சமீபத்திய கோட்பாடு பூமி முழுமையாக அழிய 7 ஆண்டுகள் வரை எடுத்துக்கொள்ளும் என்று கூறுவதால், இதை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய நிலைப்பாடு உருவாகியுள்ளது.

எப்படி ஆரம்பிக்கும்.?

எப்படி ஆரம்பிக்கும்.?

சூரிய குடும்பத்தின் மிகவும் மர்மான கிரகமான 'பிளானட் எக்ஸ்' அல்லது நிபுரு தான், குழப்பத்தைத் தூண்டி இந்த அழிவையும் ஆரம்பித்து வைக்குமென்கிறது இந்த கோட்பாடு. அதாவது டூம்ஸ்டே எனப்படும் உலகின் கடைசி நாளிற்கான தொடக்கம் ஆரம்பிக்க இன்னும் ஒரு வார காலம் மட்டுமே இருக்கிறது.

இயற்கை பேரழிவுகள் தூண்டிவிடும்.!

இயற்கை பேரழிவுகள் தூண்டிவிடும்.!

கூறப்படும் பிளானட் எக்ஸ் ஆனது பூமியை கடந்து செல்லும் போது, ​​அது எரிமலை வெடிப்பு உட்பட பல இயற்கை பேரழிவுகள் தூண்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது தொடர்ச்சியாக பூகம்பங்கள் அதன் விளைவாக சுனாமிகள், பருவநிலை மாற்றங்கள் அதன் விளைவாய் சூறாவெளிகள் போன்றவைகள் கூறப்படும் 7 ஆண்டுகளுக்கு மெல்ல மெல்ல கட்டவிழ்த்து விடப்படும்என்கிறது இந்த கோட்பாடு.

தொடர்ச்சியான அசம்பாவிதங்களில் ஒன்று.!

தொடர்ச்சியான அசம்பாவிதங்களில் ஒன்று.!

கடந்த ஆகஸ்டு 21-ஆம் தேதி நிகழ்த்த மாபெரும் சூரிய கிரகணம் கூட நிகழப்போகும் தொடர்ச்சியான அசம்பாவிதங்களில் ஒன்றுதான் என்றும் இந்த கோட்பாடு விளக்கமளிக்கிறது. மெக்ஸிகோவில் ஏற்பட்ட நிலநடுக்கம், டெக்சாஸ் வெள்ளம் மற்றும் கரீபியன் மற்றும் புளோரிடாவில் ஏற்பட்ட சூறாவளி ஆகியவைகள் கூட இந்த பிளானட் எக்ஸ் கோட்பாட்டுடன் தொடர்பு கொள்கின்றன.

ஒரு சிறுகோள் பூமியோடு மோதல் நிகழ்த்தும்.!

ஒரு சிறுகோள் பூமியோடு மோதல் நிகழ்த்தும்.!

கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் விட்டம் கொண்ட பிளான்ட் எக்ஸ் கிரகத்தின் நட்சத்திர அமைப்பின் சிதைவு ஒன்று (வார்ம்வூட் என்ற ஒரு சிறுகோள்) கூறப்படும் 7 ஆண்டுகளில் எதாவது ஒரு நாள் பூமியோடு மோதல் நிகழ்த்துமென்றும் இந்த கோட்பாடு எச்சரிக்கிறது.

இதுபற்றி நாசா என்ன சொல்கிறது.?

இதுபற்றி நாசா என்ன சொல்கிறது.?

வழக்கம் போல, அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா இந்த கோட்பாடானது உறுதியாக ஒரு 'இணைய ஏமாற்றம்' என்று நம்புகிறது மற்றும் மக்கள் இந்த டூம்ஸ்டே செய்தி தொடர்பாக எந்த பீதியும் அடையத்தேவையில்லை என்றும் கூறியுள்ளது.

100 ஆண்டுகள் கழித்து.!

100 ஆண்டுகள் கழித்து.!

நாசாவின் விளக்கம் ஒருபக்கமிருக்க, மறுகையில் உள்ள சில எர்த் எண்ட் கோட்பாட்டின்படி, பூமியின் தீர்ப்பு நாள் ஆனது சுமார் நூறு வருடங்கள் கழித்து தான் வரும் என்கின்றன. இதில் சுவாரசியம் என்னவென்றால் அந்த கோட்டபாடுகளும் "23 செப்டம்பர்" என்ற தேதியை தான் குறிப்பிட்டு கூறுகின்றன. அந்த கணிப்புகள் சரியாக இருந்தால், கணக்கீடுகளின் அடிப்படையில் பார்த்தால் அடுத்த நூறு ஆண்டுகளுக்கு பின்னர் நிகழும் அந்த டூம்ஸ்டே ஆனது 23 செப்டம்பர் 2117 அன்று நடக்கலாம்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Planet X or Niburu will carry on this destruction and trigger the chaos. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot