சூரிய குடும்பத்தில் தற்போது 9வது கோள் கண்டுபிடிப்பு: கணினியில் தெளிவுபடுத்தும் விஞ்ஞானிகள் வீடியோ.!

இந்த 9வது கிரகம் இருந்ததிற்கான சாத்திய கூறுகள் இருந்தன என்று வெளிநாட்டு விண்வெளி விஞ்ஞானிகள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இப்படியொரு கிரகம் இருந்து இருக்க வாய்ப்பு இருக்கின்றது

|

சூரிய குடும்பத்தில் (சோலார் சிஸ்டம்) தற்போது 9வது கோள் இருந்ததுக்கான அடையாளங்கள் காணப்படுகின்றன என்று விஞ்ஞானிகள் தெரிவித்து வருகின்றனர். இதனால் தற்போது 9வது கோள் பற்றி தீயாய் செய்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன.

தற்போது கண்டுபிடிக்கப்பட்ட 9வது கோளின்  வைரல் வீடியோ காட்சி.!

இந்த 9வது கோள் இருந்ததிற்கான சாத்திய கூறுகளை வெளிநாட்டு விண்வெளி விஞ்ஞானிகள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இப்படியொரு கோள் இருக்க வாய்ப்பு இருக்கின்றது என விஞ்ஞானிகளும் தற்போது கணிணி ஆய்வு காட்சிகளை பார்த்து வாயை பிளந்து வண்ணம் இருக்கின்றனர்.

சூரிய குடும்பத்தில் தலைவன்:

சூரிய குடும்பத்தில் தலைவன்:

சூரிய குடும்பத்தின் தலைவன் சூரியன். சூரியனை சுற்றியே மற்ற கிரங்கள் வலம் வந்து கொண்டு இருக்கின்றன. சூரியனுக்கு அருகே பாறைகளாலான கோள்களாக புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் ஆகியன இருக்கின்றன. வியாழன் மற்றும் சனி வாயு கோள்களாக அழைக்கப்படுகின்றன.

புளூட்டோ, நெப்டியூன்:

புளூட்டோ, நெப்டியூன்:

16ம் நூற்றாண்டை சேர்ந்த நிகோலஸ் கோப்பர் நிகஸ் சூரிய மையக் கோட்பாட்டை வெளியிட்டார். இதன் பின்னரே சூரியனை மையமாக கொண்டு கருத்துக்கள் வலுப்பெற தொடங்கின. யுரேனெஸ் கோள் 1781 ஆண்டிலும், நெப்டியூன் 1846ம் ஆண்டிலும் கண்டுபிடிக்கப்பட்டன.

சீரிஸ்:

சீரிஸ்:

1801ம் ஆண்டில் சீரிஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இது செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையில் சூரியனை சுற்றிக் கொண்டிருக்கின்றது. சீரிஸ் போன்று நிறைய கோள்கள் சுற்றி வருவதால், சிறுகோள்களை (ஆஸ்ட்ராய்டு) என்று அழைத்தனர்.

புளுட்டோ:

புளுட்டோ:

புளுட்டோ 1930களில் கண்டுபிடிபிக்கப்டப்டது. சூரியனை சுற்றுவம் 9வது கோளாக பிரகனப்படுத்தப்பட்டது. புளுட்டோ புதனைவிட சிறியது. துணைக்கோள்களை விடவும் சிறியது. புளுட்டோ சற்று விசித்திரமானது.

பிறகு வானியாளர்கள் புளுட்டோ போன்றே வான்பொருட்கள் சூரியனை கைப்பர் பட்டை பகுதியில் சுற்றி வருவதை கண்டுபிடித்தனர். மேலும் ஆயிரக்கணக்கான கைப்பர் பட்டை பொருட்களினால் ஆனது புளுட்டோ என்று கண்டுபிடித்தனர். இதனால் புளுடோவை ஒரு மிகப்பெரிய கைபர் பெல்ட் ஆப்ஜெக்ட் (கேபிஒ) என்று அழைக்கலாம் என்று கருதினர்.

பிரச்னைகளுக்கு தீர்வு கண்ட வானியல் கழகம்:

பிரச்னைகளுக்கு தீர்வு கண்ட வானியல் கழகம்:

சர்வதேச வானியல் கழகம் (ஐஏயு) கோள்களின் பிரச்னைக்கு ஒரு தீர்வை கண்டுபிடித்தது. 2006ம் ஆண்டு குறுங்கோள் ( ட்வார்ப் பிளேனெட்) கேபிஓவை வகைப்படுத்தியது. பிறகு எரிஸ், சீரிஸ், புளுட்டோ அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட கவுமியா, மக்கேமக்கே ஆகியவை குறுங்கோள்கள் என்று ஐஏயு அழைத்தது.

ஒரு கோளாக இருக்க தகுதி:

ஒரு கோளாக இருக்க தகுதி:

1. ஒரு நட்சத்திரம் சுற்றிவர வேண்டும்.
2. போதுமானளவு திணிவைக் கொணடிருப்பதன் மூலம் கோளமான வடிவத்தை பெற்றிருக்க வேண்டும்.

3. தனது சுற்றுப்பாதயை வேறு எந்த வான்கற்களோ இல்லை வேறு பெரிய பொருட்களோ இல்லாது சுற்றி வரவேண்டும்.

இந்த மூன்றாவது விதிக்கு உடன்பாம புளுட்டோவை குறுங்கோள் பட்டியில் சேர்த்து சூரிய குடும்பத்தின் கோள்களின் பட்டியில் 8 கோள் தான் உள்ளது என்று விஞ்ஞானிகள் கடந்த 2006ம் ஆண்டு அறிவித்தனர்.

9வது கோள் கண்டுபிடிப்பு:

இந்நிலையில் சூரிய குடும்பத்தில் 9வது கோள் இருப்பதாக விஞ்ஞானிகள் கருத்துகின்றனர். இதற்காக ஆதாரங்களையும் தெரிவித்துள்ளனர். கலிபோனியா தொழில் நுட்ப நிறுவனத்தின் விண்ணில் ஆய்வாளர் மைக்கல் பிரவுன் மற்றும் கொன்ஸ்டன்டின் பட்டிஜின் இரண்டு பேரும் புதிதாக ஒன்தாவது கோளை கண்டுபிடித்துள்ளனர்.

நெப்டியுனிற்கும் அப்பால் சூரியனைச் சுற்றிவரும் 6க்கும் மேற்பட்ட விண்பொருட்களை ஆய்வு செய்ததில், அவற்றின் பயணபாதயில் ஒரு முரண்பாடு தெரிவதை விஞ்ஞானிகள் கவனித்தனர். இந்த ஆறு விண்கற்களும், விண் பொருட்களும் சூரியனை ஒரு குறித்த பக்கத்தில் சுற்றுகிறது. ஆகவே இந்த சற்று முரணான சுற்றுபாதைக்கு வேறு ஒரு காரணம் இருக்காலம் என்று இவர்கள் கருத்துகின்றர். இந்த காரணம் தான் 9வது கோள் என்றனர்.

சூரியனை சுற்றும் 9வது கோள்:

9வது கோள் தனது ஈர்ப்பு விசையினால் இந்த சிறிய விண்பொருட்களின் பாதையை தனது ஆதிக்கத்தில் வைத்துள்ளது என்பது ஆய்வாளர்களின் கருத்து, நீண்ட கால கண்காணிப்பு மற்றும் கணினி மாதிரி அமைப்புகளின் படி நிச்சயம் ஒரு கோள் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றன.

தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள 9வது கோள் சுமாராக நெப்டியூன் கோள் அல்லது பூமியின் திணிவை போல பத்து மடங்கு திணிவைக் கொண்டிருக்க வேண்டும்.

சூரியனில் இருந்து 32 பில்லியன் கி.மீ தொலைவில் சுற்றிவர வேண்டும். அதுவும் நீள்வட்டப்பதையில் சூரியனுக்கு அருகில் இருக்கும் போது தான், அது சூரியனுக்கு தொலைவில் செல்லும் போது சூரியனில் இருந்து 160 பில்லியன் கி.மீ தொலைவில் இருக்கும். மேலும் ஒரு முறை சூரியனை சுற்றிவர 10000-20000 ஆண்டுகள் வரை எடுக்கும் என்று கணக்கிட்டுள்ளனர்.

Best Mobiles in India

English summary
planet nine its true it does exists : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X