எரிபொருள் இல்லாத விண்கல என்ஜின் : பரிசோதனைகள் சாத்தியம்?

இது மட்டும் உண்மையாக இருந்தால் மிகவும் நல்லது.ஏனெனில் செயல்படும் ஈஎம் டிரைவ் நிச்சயம் இயற்பியலின் அடிப்படை விதிகளின் ஒன்றை தகர்க்கும்.

|

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக, விஞ்ஞானிகள் ஈஎம் டிரைவ் என்றழைக்கப்படும் எந்தவொரு எரிபொருளும் தேவைப்படாமல் விண்கலங்களை உந்தும் சக்திவாய்ந்த சாத்தியமான ஒரு வகை என்ஜினின் நம்பகத்தன்மையைப் பற்றி விவாதித்து வந்தனர்.


இது மட்டும் உண்மையாக இருந்தால் மிகவும் நல்லது.ஏனெனில் செயல்படும் ஈஎம் டிரைவ் நிச்சயம் இயற்பியலின் அடிப்படை விதிகளின் ஒன்றை தகர்க்கும். ஆனால் இந்த கூற்று நாசா மற்றும் டார்பா உட்பட பல்வேறு உயர் ஆராய்ச்சி அமைப்புகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இதைப்பற்றி ஆராய்வதை தடுக்கவில்லை.ஏனெனில் இதன்மூலம் கிடைக்கக்கூடிய பலன்கள் அசாதாரணமானவை.

ஜெர்மன் இயற்பியலாளர்கள்

ஜெர்மன் இயற்பியலாளர்கள்

இப்போது ஜெர்மன் இயற்பியலாளர்கள் குழு ஒன்று புதிய ஈஎம் டிரைவ் பரிசோதனையை நடத்துகிறது . இந்த ஆய்வு இச்சர்ச்சைக்குரிய கருத்தை சுற்றியுள்ள விவாதத்தை முடிவுக்கு கொண்டுவர போதுமான திறனுடையது என கூறப்படுகிறது.

 பிரிட்டிஷ் விஞ்ஞானியான ரோஜர் ஷாயர்

பிரிட்டிஷ் விஞ்ஞானியான ரோஜர் ஷாயர்

2001 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் விஞ்ஞானியான ரோஜர் ஷாயர், ஒரு கூம்புவடிவ சேம்பரில் நுண்ணலைகளை பம்ப் செய்யும் போது உந்துதல் சக்தியை உருவாக்கமுடியும் என்ற யோசனையை முன்மொழிந்தார். அவை கூம்பின் சுவர்களில் மோதி திரும்பி, விண்கலத்தினை இயக்குவதற்கு போதுமான ஆற்றலை வழங்கும்.

இதிலுள்ள பிரச்சனை என்னவென்றால், ஒன்றுமே இல்லாமல் ஆற்றலை உருவாக்கும். இயக்க ஆற்றல் மாற்ற விதியின் படி இது சாத்தியமில்லை.

 பூமியின் காந்தப்புலம் / அதிர்வலைகள்

பூமியின் காந்தப்புலம் / அதிர்வலைகள்

எனினும் ஒரு சில ஆராய்ச்சியாளர்கள் ஈ.எம் டிரைவ் சோதனைகள் மூலம் சிறிதளவு உந்து சக்தியை உருவாக்க முடியும் என்று கூறுகின்றனர். உண்மையில் அந்த உந்துசக்தியின் அளவு குறைவாக இருந்தாலும், அதை அக்கருவிதான் உருவாக்கியதா அல்லது பூமியின் காந்தப்புலம் / அதிர்வலைகள் போன்ற சில வெளிப்புற தாக்கத்தினால் உருவானதா என்பதை கூறுவது மிகவும் கடினமாக ஒன்றாக உள்ளது.

விண்கல கல்லறை : ஆழ்கடலில் மறைந்துள்ள விண்கலம்!விண்கல கல்லறை : ஆழ்கடலில் மறைந்துள்ள விண்கலம்!

வெளிப்புற தாக்கத்திற்கு எதிரான உந்துசக்தி

வெளிப்புற தாக்கத்திற்கு எதிரான உந்துசக்தி

சர்ச்சையைத் தெளிவுபடுத்துவதற்காக, Technische Universität Dresden-ஐ சேர்ந்த குழு, வெளிப்புற தாக்கத்திற்கு எதிரான உந்துசக்தியை அளவிடுவதற்காக அதி உணர்திறன் கருவியை உருவாக்கியுள்ளனர்.

ஜீன் 15: டாட்டா ஸ்கை: இனிமேல் இந்த ப்ளான் இல்லை !ஜீன் 15: டாட்டா ஸ்கை: இனிமேல் இந்த ப்ளான் இல்லை !

ஆகஸ்ட் மாதம்

ஆகஸ்ட் மாதம்

மேலும் அக்குழு தங்களது சமீபத்திய ஈ.எம் டிரைவ் ஆராய்ச்சியின் ஆய்வுமுடிவுகளை ஆகஸ்ட் மாதம் ஆக்டா ஆஸ்ட்ரோநாடியா என்ற ஜேர்னலில் வெளியிட திட்டமிட்டுள்ளனர் மற்றும் இதன் முன்னணி ஆராய்ச்சியாளரான மார்ட்டின் தாஜ்மார் கூறுகையில், ஈ.எம் டிரைவ் தொடர்பான விவாதத்தை இறுதியாக தொடங்க இன்னும் சில மாதங்களே உள்ளன என தெரிவித்தார்.

சந்திராயன்-2 மூலம் பிற நாடுகளையும் திரும்பி பார்க்க வைக்கும் இஸ்ரோ.!சந்திராயன்-2 மூலம் பிற நாடுகளையும் திரும்பி பார்க்க வைக்கும் இஸ்ரோ.!

Best Mobiles in India

English summary
Physicists Say Theyve Built a Test Sensitive Enough to Test The Impossible EM Drive : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X